Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

Chillzee KiMo Only BooksChillzee KiMo Books

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - அக்டோபர்னா எஸ்கேப் – சசிரேகா - 5.0 out of 5 based on 1 vote
Pin It

சிறுகதை - அக்டோபர்னா எஸ்கேப் – சசிரேகா

runningMan

ன்ங்க இந்த மாசம் வாடகை கேட்டு ஹவுஸ் ஓனர் வந்துடுவாரு, என்ன செய்யலாம்னு இருக்கீங்க?” என தன் கணவர் சுந்தரத்தை பார்த்து பதட்டமாகக் கேட்டார் சிவகாமி

”அதைத்தாண்டி நானும் யோசிக்கறேன் போன 5 மாசம் எப்படியோ வாடகை தராம அலைக்கழிச்சிட்டேன், இந்த மாசம் எப்படின்னு தெரியலையே வர வர ஹவுஸ் ஓனர்களெல்லாம் கந்துவட்டிக்காரங்களைப் போல வசூல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க, குடித்தனம் இருக்கறவங்க நிலைமையை கொஞ்சமும் யோசிக்கறதில்லை, எப்படியாவது இந்த மாசமும் எஸ்கேப் ஆகிடனும்”

“இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன், வேலையை விடாதீங்கன்னு கேட்டீங்களா”

“நான் வேலையை விட்டதுக்கு காரணமே இந்த ஹவுஸ் ஓனர் அப்பனாலதான்”

“என்னங்க சொல்றீங்க”

“பின்ன அவரோட பேக்டரியிலதான் நான் வேலை பார்த்தேன், அவருக்குத் தெரியும்ல நான் என்ன வேலை செய்றேன்? எவ்ளோ சம்பளம்னு தெரிஞ்சிருந்தும் என் சக்திக்கு மீறி வாடகை கேட்டா நான் என்ன செய்வேன் சொல்லு, அதான் பேக்டரியில முதலாளிகிட்ட வாடகையை குறைக்க சொல்லி அன்பா பேசினேன், ஆனா அவர் வேலையை விட்டு விரட்டிட்டாரு. அடுத்த வேலை தேடிக்கிட்டு இருக்கேன், அதுவரைக்கும் எப்படியாவது சமாளிக்கனுமே”

“அதுக்குன்னு இப்படியா ஒரு மாசத்துக்காவது வாடகை கொடுக்க வேணாமா?”

“பணம் இருந்தா தரமாட்டேனா, வேலையில்லாம இந்த 5 மாசமும் வீட்ல இருந்த பணத்தை வைச்சி குடும்ப செலவு பண்ணியாச்சி. இனிமே சம்பாதிச்சாதான் உண்டு, பக்கத்து வீட்டு பரமசிவம் ஸ்பின்னிங் மில்லுல வேலை செய்றானாம், நாளைக்கு என்னை கூட்டிட்டுப் போறேன்னு சொன்னான், அந்த வேலை கிடைச்சா சரி கிடைச்சதும் வாடகை கொடுக்கறேன் கிடைக்கலைன்னா அடுத்த மாசமும் நான் வாடகையை தரமாட்டேன்.”

“சரிங்க ஆனா இப்ப வரப் போற ஹவுஸ் ஓனரை என்ன செய்யலாம்னு இருக்கீங்க”

“அதுக்கு ஒரு திட்டம் இருக்கு, அவர் வரட்டும் நான் பார்த்துக்கறேன், இந்த முறையும் நான் எஸ்கேப் ஆயிடுவேன் நடக்கறத மட்டும் வேடிக்கை பாரு நீ குறுக்க எதுவும் பேசிவைக்காத” என சொல்லிக் கொண்டிருந்த நேரம் ஹவுஸ் ஓனர் வரவும் சரியாக இருந்தது

”சுந்தரம் சுந்தரம் வாய்யா வெளிய” என கோபமாக அழைக்க

”இதோ வரேன்” என கத்திக் கொண்டே வெளியே வந்தார் சுந்தரம். கூடவே சிவகாமியும் அச்சத்துடன் தெருவுக்கு வந்து நின்றாள்

ஹவுஸ் ஓனர் - 5 மாசமா வாடகை தரலை ஒண்ணு வாடகையை கொடுங்க இல்லைன்னா வீட்டை காலி பண்ணுங்க சும்மா ஒவ்வொரு மாசமும் இந்த எஸ்கேப்பாகிற வேலை வேணாம், இந்த மாசம் என்ன ஆனாலும் சரி நான் ஒரு முடிவு தெரிஞ்சிக்காம இங்கிருந்து போக மாட்டேன்.

சுந்தரம் - நான் எங்க எஸ்கேப் ஆனேன். இதே வீட்லதானே இருக்கேன். திடீர்ன்னு காலி பண்ணுன்னு சொல்றீங்க, உங்க அப்பா பேக்டரியில கடந்த 15 வருஷமா நான் வேலை செஞ்சிருக்கேன். 15 வருஷம் முன்னாடி நான் வேலைக்கு போனப்ப இந்த வீட்டில தங்க உங்கப்பா சரின்னு சொன்னாரு, அப்ப வாடகை எவ்ளோ தெரியுமா வெறும் 500 ரூபாய் தான், ஆனா இப்ப 3000 ரூபாய் கேட்கறீங்க, 15 வருஷத்துக்கு முன்னாடியும் இதே சுந்தரம்தானே இங்க தங்கினது இப்பவும் இதே சுந்தரம்தானே தங்கறான், அதெப்படிங்க நீங்க வாடகையை ஏத்தலாம், என்கிட்ட ஏதாவது மாறிடுச்சா சொல்லுங்க, அதே உருவம், அதே உயரம், அதே தலைமுடி, அதே முகவெட்டு, ஏதாவது மாறிடுச்சா இல்லை இதோ இந்த வீடுதான் மாறிடுச்சா, அதே கட்டிடம்தான் ஒரு சுவர் கூட மாறல சுண்ணாம்போட பெயின்ட் கூட மாறலை, அதே வாசப்படி அதே 2 ரூம், அதே கிச்சன்தான், அப்படியிருக்கறப்ப 15 வருஷத்துக்கு முன்னாடி 500 ரூபாய் வாங்கிட்டு இப்ப 3000 ரூபாய் கேட்கறது அநியாயம், நான் ஒத்துக்க மாட்டேன், இப்பவே நான் போலீஸ் கிட்ட போறேன் வக்கீல் கிட்ட போறேன் கோர்ட்ல கேஸ் போடறேன்”

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஹவுஸ் ஓனர் - என்னது கேஸா யோவ் என்னய்யா என்னென்னவோ சொல்ற, வாடகை தர்றதுக்கு கஷ்டப்பட்டு தேவையில்லாத கதை பேசி எஸ்கேப் ஆகப்பார்க்கறியா, இந்த வீடு என் பேர்ல இருக்குய்யா

சுந்தரம் - நான் இந்த வீட்ல 15 வருஷமா குடித்தனம் இருக்கேன். சட்டப்படி 14 வருஷம்னாலே வீடு சொந்தமாம் தெரியும்ல அது மட்டுமா புராணத்தில கூட அப்படித்தானே இருக்கு”

ஹவுஸ் ஓனர் - என்னது புராணமா என்னய்யா கதை விடற”

சுந்தரம் - கதை இல்லை காவியம் ராமாயணத்தில ராமரை 14 வருஷம் காட்டுக்கு போக சொல்லிட்டு பரதனை அரசனாக்கினது எதுக்கு?

ஹவுஸ் ஓனர் - எதுக்கு?

சுந்தரம் - அப்படி கேளு ராமரை அப்படி 14 வருஷம் அனுப்பிட்டா போதும், 14 வருஷம் ஒருத்தர் வரலைன்னா அந்த இடமோ, நிலமோ, வீடோ, ராஜ்யமோ அவருக்கு சொந்தமில்லையாம், அந்த காலத்திலயே அப்படி ஒரு வழக்கு இருந்திருக்கு, சட்டம் இருந்திருக்கு, பூமியாளறதுக்கும் நிறைய நிபந்தனைகள், சட்டங்கள் இருந்திருக்கு இதுவரைக்கும் இந்த வீட்டுக்காக நீங்க என்ன செஞ்சீங்க, நானாவது இந்த வீட்டை பத்திரமா பார்த்துக்கறேன், கரண்ட் பில், குழாய் வரி, வீட்டு வரியில இருந்து எல்லாம் கட்டறேன், உங்க பேர்ல பத்திரம் இருந்து என்ன பிரயோசனம், இந்த வீட்ல நான்தானே இருந்தேன், அப்ப இந்த வீடு எனக்குத்தான் சொந்தம்

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
# RE: சிறுகதை - அக்டோபர்னா எஸ்கேப் – சசிரேகாvijayalakshmi 2018-07-29 11:05
pavam owner :yes:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அக்டோபர்னா எஸ்கேப் – சசிரேகாmadhumathi9 2018-07-29 07:01
:P :D :grin: nice & different story.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அக்டோபர்னா எஸ்கேப் – சசிரேகாmahinagaraj 2018-07-27 18:10
:grin: ரொம்ப வித்தியாசமான கதை தான்.. ஆனா சூப்பர்... :clap: :grin: :clap: :D
நல்ல கருத்த விளையாட்டா சொல்லீருக்கீங்க .. :clap: :GL: :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top