Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - அந்தக் கால ஃபேஸ்புக் - சசிரேகா - 5.0 out of 5 based on 1 vote
Pin It

சிறுகதை - அந்தக் கால ஃபேஸ்புக் - சசிரேகா

facebook-notebook

குறள் 786:

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு.

முகம் மட்டும் மலரும் படியாக நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.

 

ன்னடா செய்ற அதை கீழே வை வைடா” என கத்தினார் பாலாஜி தன் மகன் சேகரிடம்

சேகர் வீட்டில் இருக்கும் பழைய புத்தகங்களை எடைக்கு போட ஆளை வரவழைத்துவிட்டு புத்தகங்களை எடைக்கு போடலானான். அந்நேரம் தந்தையின் அறைக்கு வந்து அங்கிருந்த பழைய நோட்புக் புத்தகங்கங்களை எடைக்கு போட எண்ணி ஒரு நோட்டை எடுக்க அதை கவனித்த பாலாஜி உடனே  கோபித்துக் கொண்டார்

”அப்பா இதெல்லாம் பழசாயிடுச்சிப்பா, எடைக்கு போடலாமே”

“வாயை மூடுடா அது ரொம்ப முக்கியமான நோட், எதை வேணும்னாலும் போடு அதை போடாத கொடு” என கேட்க அவனோ

அந்த நோட் புத்தகத்தை திறந்துப் பார்த்தான். உள்ளே வரிசையாக சீரியல் நெம்பர்கள் போட்டு மக்களின்  பெயர், என்ன வேலை? முகவரி, போன் நெம்பர், கையெழுத்து உட்பட 5 கட்டங்கள் போட்டு எழுதியிருந்தார் பாலாஜி. ஒவ்வொரு பக்கமும் தேதி மாதம் ஆண்டு அனைத்தையும் குறிப்பிட்டிருந்தார்.

அதில் முதல் பக்கத்தில் 16-11-1958 என்று எழுதியிருந்தது. அதற்கு கீழே

முதல் கட்டத்தில் 1. என்றும் அதன் பக்கத்து கட்டத்தில் ஆளின் பெயர் ராஜேந்திரன் எனவும் அடுத்த கட்டத்தில் அவரின் வேலை மானேஜர் என்றும், அடுத்த கட்டத்தில் முகவரி மற்றும் அடுத்த கட்டத்தில் டெலிபோன் நெம்பர் அடுத்த கட்டத்தில் கையெழுத்து இருக்கவே பக்கங்களைப் புரட்டினான் வருடக்கணக்காக இது போல நிறைய எழுதியிருக்கவே

”என்னப்பா இது கடன்காரன் லிஸ்ட்டா இல்லை மக்கள் கணக்கெடுப்பா, 1958-ல ஆரம்பிச்சி 2018 வரைக்கும் எழுதியிருக்கீங்க, இதுல இருக்கற சீரியல் நெம்பரே 2531ன்னு இருக்கே, என்னப்பா இது?” என கேட்க அவரோ தன் மகனிடம் இருந்து நோட் புக் வாங்கிக் கொண்டு அதை பத்திரமாக அலமாரியில் வைத்தவர் அவனிடம்

”இது கடன்காரன் லிஸ்டோ மக்கள் கணக்கெடுப்போ கிடையாதுடா, இது எனக்கு தெரிஞ்சவங்களைப் பத்தின குறிப்புகள்”

“புரியலைப்பா”

“சரி நீ பேஸ்புக் பயன்படுத்தறல்ல”

“ஆமாம்”

“எத்தனை பேர் தெரிஞ்சவங்கன்னு நீ நண்பர்களா ஏத்துக்கிட்ட?”

“என்னோட ப்ரெண்ட்ஸ் லிஸ்ட்லயே 4000 பேர் இருக்காங்கப்பா”

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அவ்ளோ பேரையும் உனக்குத் தெரியுமா?”

“இல்லை இல்லை கொஞ்சம்தான், ஒரு 400 இல்லை 500 அவ்ளோதான்”

“மத்தவங்களை எதுக்காக நீ ப்ரெண்டா சேர்த்திருக்க”

“இதுல என்னப்பா இருக்கு ப்ரெண்ட் இல்லைன்னா தெரியாதவங்களை கூட பிரண்டா சேர்த்துக்க கூடாதா என்ன?”

“அதே போலதான் நானும், இப்ப உங்களுக்கு பேஸ்புக் இருக்கற மாதிரி அந்தக்காலத்தில எங்களுக்கு எந்த பேஸ்புக்கும் கிடையாதே, அப்ப நாங்க என்ன செய்வோம் மறதி காரணமா யாரையுமே நாங்க மறந்துடக்கூடாதுன்னு டைரியில எழுதி வைப்போம்.

அப்ப என்னோட அப்பா எனக்குச் சொன்ன ஒரு சின்ன விசயம் எது தெரியுமா, தினமும் நீ யாரை புதுசா பார்க்கறியோ அவர்களைப் பத்தின விவரங்களை எழுதி வைச்சிக்க, அப்பதான் உன் கடைசி காலத்தில எத்தனை பேர்களை நீ சந்திச்சிருக்க, உனக்கு அவங்களோட எப்படிப்பட்ட பழக்கம் இருந்திச்சின்னு உன்னால தெரிஞ்சிக்க முடியும்.

யாராவது ஒருத்தனைக் கூப்பிட்டு உனக்கு எத்தனை பேர் தெரிஞ்சவங்க இருக்காங்கன்னு கேட்டா அவன் 30 இல்லை 40ன்னு சொல்வான் ஆனா, அவனுக்கே தெரியாம ஒரு நாளைக்கு பல பேரை பார்ப்பான், தினமும் பலர் கூட நேரத்தை செலவழிப்பான். அவன் வாழ்நாள்ல கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மக்களோட பேசி பழகியிருப்பான் ஆனா, கடைசி காலத்திலயும் அவன்ட்ட போய் உனக்கு எத்தனை பேரை தெரியும்னு கேட்டா, அப்பவும் 30, 40ன்னு சொல்வானே தவிர மத்தவங்களோட பழகினது அவனுக்கு நினைவுலயே இருக்காது. அதுக்காக அவன் மனுசங்களை மறந்துட்டான்னோ, மதிக்கலைன்னோ கிடையாது. நினைவுல வைச்சிக்க  தேவையில்லைன்னு சிலரை விட்டுட்டான்.

அது போல இல்லாம நாம பார்க்கற, நம்மளோட பழகற மக்களை என்னிக்குமே மனசுல வைச்சிக்க முடியாது, அதுக்கு பதிலா அவர்களை பற்றின குறிப்புகளை எழுதி வைக்கலாம், கடைசி காலத்தில எனக்கு எத்தனை பேர் தெரியும்னு கேட்டா நம்மளைச் சுற்றியிருக்கற மக்களோட எண்ணிக்கை சொல்லாம இத்தனை வருஷமா நாம பார்த்த மக்களோட எண்ணிக்கையை சொன்னா நமக்கு சந்தோஷம் அது பற்றி கேட்கறவங்களுக்கும் ஆச்சர்யமா இருக்கும்.

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
# RE: சிறுகதை - அந்தக் கால ஃபேஸ்புக் - சசிரேகாPR 2018-08-01 12:33
good one nice :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அந்தக் கால ஃபேஸ்புக் - சசிரேகாmahinagaraj 2018-07-30 12:06
அமேஷிங் மேம்.... :hatsoff: :clap: :clap: :GL:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அந்தக் கால ஃபேஸ்புக் - சசிரேகாsasi 2018-07-30 10:05
நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - அந்தக் கால ஃபேஸ்புக் - சசிரேகாvijayalakshmi 2018-07-29 11:05
old is gold :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - அந்தக் கால ஃபேஸ்புக் - சசிரேகாmadhumathi9 2018-07-29 06:24
:clap: good idea. (y) neenga ithai follow pandreengala? :clap: :clap: :thnkx: 4 this new info.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top