(Reading time: 11 - 22 minutes)

சிறுகதை - நட்பின் சிரிப்பு - பூர்ணிமா செண்பகமூர்த்தி

tiffinBox

"ன்னிக்கு சாயந்திரம் தேவி பள்ளிக்கூடம் வந்ததும் அவளைக் கேட்டுட்டு தான் மறுவேல பாக்கணும். நானும் பாத்துட்டே இருக்கேன். சுணங்கிப் போயி இருக்காளே! என்ன விசயம்னு தெரியலேயே! உடம்பு கிடம்பு ஏதும் சரியில்லையா!" என்ன கழுதையோ என்னவோ! நமக்கு தீப்பெட்டி ஓட்டுறது தீக்குச்சி அடுக்குரதுன்னு முதுகு ஒடிஞ்சிருது. அந்த மனுசனும் கேப்பு சுத்துறது, சீனிவெடி சுருட்டுறதுன்னு குறுக்குவலிக்கின்னு வந்து படுத்துறாரு! இதுக அதுபாட்டு சாப்ட்டுட்டு படிச்சிட்டு இருந்தால்ல நமக்கு வண்டி ஓடும். என்னவோ ஏதோன்னு பதைக்குதே!" தனக்குள்ளே பேசிக்கொண்டே பாத்திரங்களை விளக்கிக் கொண்டு இருந்தாள் தேவியின் அன்பான அம்மா லட்சுமி.

எப்போதும் பள்ளிவிட்டதும் யார் முதலில் வீட்டுக்கு வர்றது என்று தேவியும், அவள் தம்பி கண்ணனும் போட்டி போட்டுக் கொண்டு ஓடி வருவார்கள், இப்போ ஒரு வாரமா கண்ணன் முந்தி வந்திர்றான். இவ மெதுவா நடந்து வாரா! கால்வலி கீல்வலி வந்து படுத்துதோ? சத்தானது வாங்கிப் போடணும்! எண்ணங்கள் நீண்டு கொண்டே போக, இரண்டு கைகளிலும் குச்சி ஐஸை வைத்துக் கொண்டு சப்பிக்கொண்டே வந்தான் கண்ணன். கூடவே மெதுவாக நடந்து வந்தாள் தேவி!

"அம்மா!" என்று உள்ளே வந்து இரண்டு கைகளையும் காட்ட,

"அக்கா ஐஸ் சாப்பிடலையா?" என்றாள் லட்சுமி.

அக்கா வேண்டாம்னு சொல்லிட்டா, அவளுக்கு வாங்கின ஐஸையும் எனக்கே கொடுத்துட்டாம்மா! என்றான்.

சேமியா ஐஸ் என்றால் பக்கத்துக்கு தெருவில் வரும்போதே பறப்ப? ஏன்டி ஐஸ் வேணாம்னு சொல்லிட்ட?

சும்மா தான் என்றாள்!.

போங்க இரண்டு பேரும் முகம், கை, கால் கழுவிவிட்டு வாங்க! அப்பத்தா தம்பி சீல்த்தூர் பால்கோவா கொண்டு வந்து கொடுத்தாரு! நீங்க அதைக் கொஞ்சம் சாப்பிட்டு, சோறு போட்டு சாப்பிடுங்க, அம்மா பால் வாங்கிட்டு வந்து டீ போடுறேன்.

"அய்யா பால்கோவா !" என்று கண்ணன் முகம் கழுவ ஓடிவிட, உள்ளே அமைதியா அமர்ந்தாள் தேவி.

கடையில் இருந்து திரும்பிய லட்சுமி பார்த்த போது கண்ணன் மட்டும் பால்கோவா சாப்பிட்டுக் கொண்டு இருக்க,அதைக் கவனியாமல் தனது புத்தகங்களைப் புரட்டிக் கொண்டு இருந்தாள் தேவி.

"என்ன ஆச்சு இவளுக்கு, காக்கிலோ பால்கோவா தம்பிக்கூடத் தராமல் தனியாத் திங்கணும்பா! ஒரு வாய்கூடத் திங்காம இருக்காளே! என்ன அதிசயம்! வியந்தவாறு உள்ளே வந்தவள், இதைப் பற்றி விசாரிக்கவேண்டும் என்று முடிவெடுத்தாள்.

"யம்மா, எனக்கு டீ அப்பா வர்றப்போ போட்டா போதும். இப்ப உனக்கும் தம்பிக்கும் மட்டும் போடுங்க! என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் புத்தகத்தில் மூழ்கினாள்.

கண்ணன் டீயைக் குடித்துவிட்டு வெளியில் விளையாடச் சென்றதும், மகளின் அருகில் வந்து அமர்ந்தாள் லெட்சுமி.

புத்தகத்துள் கவிழ்ந்து இருந்த தலையை மெல்லக் கோதி, "என்ன ஆச்சு உனக்கு? ஏண்டி எதையும் வேணாங்கற?"

ஒண்ணுமில்ல!சும்மாதான்மா!

என்ன ஒண்ணுமில்ல, இப்பலாம் சரியாவே சாப்பிடமாட்டேங்குற! என்ன பிரச்சனை உனக்கு? அம்மா சமைக்கறது பிடிக்கலையா? நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி நல்லாதானே அம்மா செஞ்சு தரேன். பள்ளிகூடத்தில யாராச்சும் கொண்டு வந்த பலாகாரம் எதாச்சும் வேணும்னு  நினைச்சுட்டு  சாப்டாம இருக்கியா?

ஐயோ அப்படிலாம் இல்லைம்மா!

சரி! நீ படிச்சிட்டு இரு! நான் முக்குக்கடை வரை போயிட்டு ராத்திரிச் சாப்பாட்டுக்குக் கொஞ்சம் காய் வாங்கிட்டு வந்துர்றேன்.

சரிம்மா! என்றாள் தேவி. திரும்பவும் அவள் புத்தகத்தில் கவனத்தை செலுத்துவதைக் கண்டவாறே வெளியேறினாள் லட்சுமி.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

முக்குக்கடையில் காய்கறிகளை வாங்குகையில், மணியம்மையைப் பார்த்தாள் லட்சுமி."என்ன மணி, எப்படி இருக்க?" என்று வினவவும்,

"நான் நல்லா இருக்கேன்க்கா! நீங்க எப்படி இருக்கீங்க லெட்சுமியக்கா?"

"என்னத்தை சொல்றது மணி, உன்னை மாதிரிப் பள்ளிக்கூடத்துல சத்துணவு சமையல் வேலை கூட பார்த்துறலாம்! எந்நேரமும் பெட்டி ஒட்டுறதும், தீக்குச்சி அடுக்குறதுமா கை, கால், தோள் எல்லாம் வலியும் குடைச்சலுமா இருக்குது?"

"சமையல் செய்றதும் அப்படிதானேக்கா  இருக்கு! நீயாவது வீட்டுல உக்கார்ந்துட்டே டிவி பார்த்துட்டு இந்த வேலையைப் பார்த்துற! அலுப்புத் தெரியாது. நமக்கு அடுப்புல வேகுறதும், பாத்திரத்தை எல்லாம் கழுவி கவுத்துறதும் குறுக்கொடிஞ்சு போகுதுக்கா!"

"சரி விடு! ஒவ்வொரு வேலைல ஒவ்வொரு பாடு! ஆமா! இப்பெல்லாம் சமையல் நல்லா ருசியா இருக்கு போல, என் மக பால் சோத்தையே டிபன் டப்பாவில வச்சுவிடுன்னு சொல்லுவா! இப்ப எல்லாம்  ஸ்கூல்ல தர்ற கலந்த சாதமே சாப்பிட்டுக்கிறேன்னு சொல்றாளே!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.