(Reading time: 11 - 22 minutes)

கையில் இருந்த கட்டைப்பையில் இருந்து, ஒரு தூக்கை எடுத்து தேவியிடம் நீட்டி, "அம்மா பிரியாணி கொடுத்து விட்டாங்க! உள்ளே கண்ணு படக்கூடாதுன்னு அடுப்புக் கரித்துண்டு ஒன்னு போட்ருக்காங்க. அதை எடுத்து வெளில போட்ருங்க!"

"ரொம்ப நன்றி நசீரா!" என்று தேவி சொல்லவும்,

“என்ன நன்றி எல்லாம் சொல்லிக்கிட்டு?”,  லெட்சுமியைப் பார்த்து, "அத்தை, தேவியும் என்கூட நோன்பு இருந்தா, வாப்பா அவளுக்கும் புதுத்துணி கொடுத்துவிட்டாங்க! தம்பிக்கும் தான்!” என்றாள் நசீரா.

"வாப்பாவா?" உங்க வாப்பா வந்துட்டாங்களா? என்று தேவி கேட்கவும்.

"ஆமா, நேத்து இராத்திரி தான் வாப்பா  வந்தாங்க, அவங்க கடனுக்குக் கட்டின வட்டி அசலை அடைச்சிருச்சாம். ரமலான் மாத ஈகைப் பெருநாளில் கடனுக்குள்ள வட்டியை அப்பா கடன் வாங்கின முதலாளி தள்ளுபடி பண்ணிட்டாராம். அதனால் இனி கடன் பிரச்னையும் இல்ல. வாப்பாவோட சமையல் திறமையைப் பார்த்து, இங்கே மதுரைல ஒரு கேட்டரிங் கல்லூரில பயிற்சியாளர் வேலை கிடைச்சிருக்கு! அதனால வாப்பா இனிமேல் இங்கே எங்களோடதான் இருப்பாங்க! தெனம்தெனம் பாசஞ்சர் ட்ரெயின்ல மதுரைக்குப் போய்க்கிட்டு வந்துக்கிடுவேன்னு சொல்லிட்டாங்க!".

தோழிகள் இருவரும் மகிழ்ச்சியில் கரங்களைக் கோர்த்துக் கொண்டு வட்டமாக சுற்றினார்கள். அவர்களின் கலகல சிரிப்பொலி வீட்டையும் லெட்சுமியின் மனதையும் நிறைத்தது.

பி.கு. நசீராவிற்கு இப்போது ஒரு தங்கச்சிப் பாப்பா இருக்கிறாள்.

"நோன்பு" என்ற தலைப்பில்  இந்தக் கதையைப் பேஸ்புக்கில் தனது டைம்லைனில் போஸ்ட் செய்தாள் தேவி. லைக்குகளும் கமெண்டுகளும் வர ஆரம்பித்தன.

முதலில் ஒரு கமெண்ட்," விரதம் இருப்பதின் மகிமையை இப்போது நமது சமுதாயம் மறந்து வருகிறது, கண்ட நேரத்தில் கண்டதை சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்வதையே வழக்கமாய் வைத்துள்ளது!"

"மாற்று மத நம்பிக்கைகளையும் மதிக்கும் மதம் எம்மதம்! பிரியாணியை நாம் சாப்பிடுவோம், பொங்கலை அவர் சாப்பிடமாட்டார்" என்று வெறுப்பையும் வேறுபாட்டையும் தூண்டுவது போல் ஒருவர் கமெண்ட் பதிவிட,

"எந்த வித்தியாசம் பார்க்காமல் பழகுவது நம் மதத்தவர் தான்! உடை, உணவு என்று பிறமதப் பெண்ணை தம் பெண்  போலவே நடத்தியது யார்?" என்று மாற்று கமெண்ட் ஒருவர் பதிவிட,

தேவிக்கு வெறுப்பாகிவிட்டது. "இந்த பேஸ்புக் மதச்சண்டையர்களை யார் தான் திருத்துவதோ? என்று நொந்து கொண்டாள்.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அந்த கதையை தனது டைம்லைனில் தெரியாதவாறு மறைத்து விட்டு, கமெண்ட் போஸ்ட் எதுவும் வேண்டாம் என்று லேப்டாப்பை மூடி விட்டாள். ஹாஸ்டல் மைக்கில் தனது பெயர் கூப்பிடுவது கேட்டது, "தேவி, பர்ஸ்ட் இயர் எம். எஸ். டபிள்யூ, விசிட்டர்ஸ் பார் யூ!" என்று வார்டன் குரல் ஒலிக்கவும்,

“அம்மா, அப்பா போன வாரம் தானே வந்தாங்க, யாரா இருக்கும் என்றாவறே விசிட்டர் அறைக்கு தேவி செல்லவும், நசீராவும், அவளின் அப்பா, அம்மா அமர்ந்து இருந்தார்கள்.

"வா நசீரா, வாங்கம்மா, வாங்கப்பா! எல்லாரும் எப்படி இருக்கீங்க?" என்று அன்புடன் தேவி கேட்க, நசீரா, தேவியின் கைகளைப் பிடித்து குலுக்கினாள்.

“எனக்கு ஸ்காலர்ஷிப்போட  மலேசியா அகாடமி ஆப் கலினரி ஆர்ட்ஸ்ல டிப்ளபோ கோர்ஸ்க்கு சீட் கிடைச்சிருக்கு. உன் கிட்ட நேர்ல சொல்லனும்னு தான் அம்மா, அப்பாவைக் கூட்டிட்டு வந்தேன்.”

ரொம்ப சந்தோஷமா இருக்குடி. அங்கே கோர்ஸ் நல்லபடியா முடிச்சு வந்தா வாப்பாவோட பேரை நீயும் எடுக்கணும். இல்லை இல்லை, வாப்பாவோட பெஸ்ட் செப்னு பேர் நீ வாங்கணும் என்று சொல்லி நசீராவை அணைத்துக் கொண்டாள் தேவி, 

கண்டிப்பா என்று சொல்லி சிரித்தாள் நசீரா, அவர்களின் சிரிப்பில் நசீராவின் பெற்றோரும் சேர்ந்து கொள்ள, அவர்களுடன்  மதங்களைக் கடந்து வாழும் நட்பும் மனதார சிரித்துக் கொண்டது.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.