(Reading time: 3 - 6 minutes)

சிறுகதை - முதல் முறை!! – விஜயலக்ஷ்மி சம்பத்

sleepTime

முதல்… இரவு...!!!

இரவு பதினொரு மணி ஆகிவிட்டது. இவனுக்குஆரம்பத்தில் கொஞ்சம் பயமாக இருந்தது. நேரம் ஆக அக பதட்டமாகி விட்டது.  இதுதான் முதல் முறை. இன்னும் சொல்லப்போனால் முதல் இரவு.  ஆகவே படபடப்பாக வந்தது. பத்து மணியில் இருந்தே இந்த அவஸ்தை இவனுக்கு. 

புரண்டு புரண்டு படுத்தான்.  கண்களை இறுக மூடிக் கொண்டான். ஒன்று இரண்டு மூன்று என நூறு வரையில் எண்ணினான். ம்ஹ{ம் !! என்ன செஞ்சு என்ன?  தூக்கம் மட்டும் வர மறுத்தது.

கோபம் கோபமாக வந்தது.  தான் எத்தனை எடுத்துக் கூறியும் பிடிவாதம் பிடித்தும் அவர்கள் இப்படி செய்தது பற்றி நினைத்தால் என்ன நினைத்தால்?  ம்க்கும்.. நினைக்காமலேயே கோபம் கோபமாக வந்தது.

தான் அவர்களிடம் போராடியது நினைவுக்கு வந்தது. ‘‘ப்ளீஸ்! வேண்டாம் நான் இப்படியே இருந்துக்கறேன்!  ப்ளீஸ் என்னய விட்டுடுங்க” என்று எவ்வளவு கெஞ்சியும் கூட அவர்களின் பிடிவாதம்தானே ஜெயித்தது.  மனதிற்குள் இவனுக்கு கோபம் சுனாமியாக சுழட்டி அடிக்க.  விடும் மூச்சுக்கூட நெருப்பென சுட்டது.

குப்புற படுத்துக் கொண்டு தலையணையில் முகம் புதைத்தவனின் கண்ணீர் தலையணையை நனைக்கஇ திடீரென எழுந்து உட்கார்ந்தான். ‘நான் அழறதா?  ம்ம் மாட்டேன்…கண்களைத் துடைத்துக் கொண்டான்.  வசு.. என்னய அழவச்சிட்ட இல்ல..’ பழைய பட வில்லன் நம்பியார்சாரைப் போல இவன் கைகளைப் பிசைந்தான.;. விடிய விடிய இப்படியே இருக்க முடியாது.  ம்..என்ன பண்ணலாம்?

கண் மூடி யோசித்தான். ‘ஆ! அதுதான் கரெக்ட்.. ஓகே” தனக்குள் பேசிக் கொண்டவனாக மெதுவாகத் தான் படுத்து இருந்த கட்டிலில் இருந்து கீழே இறங்கினான்.  அறையில் இருந்து மெதுவாக வெளியே வந்து ஹாலை எட்டிப் பார்த்தான்.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அமைதியாக இருந்தது வீடு. மெல்ல மெல்ல சத்தம் வராமல் காலடி எடுத்து வைத்து பக்கத்து அறையின் கதவை மிக மிக ஜாக்கிரதையாக சிறிதளவே தள்ளிப் பார்த்தான்.  ‘’ஐ! கதவு திறந்து இருக்குதே!” அதிர்ஸ்டம் இவன் பக்கம் இருந்தது.  வசு கதவைத்தாளிடாமல் சும்மாதான் சாத்தி வைத்து இருந்தாள்.

முதலில் தள்ளியதைப் போலவே மிக மிக ஜாக்கிரதையாக சிறிது சிறிதாகத் தள்ளி கதவை சத்தம் வராமல் திறந்து விட்டான்.  அப்பாடா! திறந்தாச்சு! மனசுக்குள்ளேயே குத்தாட்டம் ஆடிக் கொண்டான்.

அறைக்குள் இருந்த கட்டிலைப் பார்த்தவனுக்கு மீண்டும் கோபம் கொப்பளித்தது.  ‘’நான் இங்கே தூங்காம கஸ்டப்பட்டுட்டு இருக்கறேன்… இங்க மட்டும் தூக்கத்தப் பாரு…” தனக்குள் புலம்பிக் கொண்டவாக சத்தம் வராமல் கட்டிலில் ஏறி வசுவின் பக்கத்தில் படுத்துக் கொண்டான். ‘அப்பாடா! இனி நிம்மதியாகத் தூங்கலாம்’ நினைத்தவனாக வசுமதியின் மேல் கையைப் போட்டு அணைத்தவாறே கண்களை மூடினான்.

தங்கள் ஆறுவயது மகன் -ஸ்ரீராமை தனியாகப் படுக்க வைத்துப் பழக்க வேண்டும் என்ற தன் கணவனின் பேச்சைத் தட்ட முடியாமல். அவன் கெஞ்சி அழுதும் கேட்காமல் பக்கத்து படுக்கை அறையில் அவனைப் படுக்க வைத்து விட்டு தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் வசுமதி. தன் அருகே வந்து படுத்த தன் மகன் ஸ்ரீராமை அணைத்துக் கொண்டு நிம்மதியுடன் கண்களை மூடினாள்.  இவ்வளவு நேரம் புன்னகையுடன் தள்ளி நின்று இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நித்திராதேவி இருவரையும் தழுவிக் கொண்டாள்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.