(Reading time: 15 - 29 minutes)

சிறுகதை - எங்கேயும் எப்போதும் – சாந்தி சரவணன்

villageFriends

ப்போது அவர்கள் குழந்தைகள். அவர்கள் மூன்று பேர் . வள்ளி ,மல்லி, சின்ன மல்லி. மூவருக்கும் எட்டிலிருந்து பத்து வயதுக்குள்தான். சனி மற்றும் ஞாயிறுகளில் ஊர் சுற்றுவதுதான் ஒரே வேலை. பசிக்கும் போது மூவரில் ஒருவர் வீட்டுக்கு ஓடுவார்கள். அங்கே சமையல் ஆகாவிட்டால் ஏதாவது பண்டம் தருவார்கள் . தின்று கொண்டே அடுத்த வீட்டை பார்க்க கிளம்பி விடுவார்கள் . மூவரின் தந்தையும் கூடப் பிந்தவர்கள். அடுத்தடுத்து சொந்தக் காரர்கள்தான். நடுத்தரக் குடும்பத்து குழந்தைகள் . சிவப்பு செம்பருத்தியும் சினிமாவும் தொலைக்காட்சிப்பெட்டியும் சீனி நெல்லிக்காயும் எல்லாமும் அவர்களுக்கு ஆச்சரியந்தான்.

அது ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூறு. குழந்தைகள் பற்றிய பயமில்லை. அது. குக்கிராமம். கிட்டத்தட்ட எல்லா பெண்களும் வயல் வேலை வீட்டு வேலைகள் செய்தாலும் தாங்கள் சமைக்காவிட்டால் வீட்டினர் பட்டினிதான் என்பதால் குறைந்தது ரேசன் அரிசி சோறும் புளித் தண்ணியுமாவது செய்து விடுவார்கள் . அது கூட அவ்வளவு ருசியாயிருக்கும். ஆண்கள் தச்சு வேலை கொல்லு வேலை கட்டிடம் கட்டுதல் விவசாயம் என்றிருப்பார்கள்

அதுவும் ஒரு சனிக் கிழமைதான் வள்ளி மல்லி சின்ன மல்லி மூவரும் பொன்னம்மா குடியிருப்பிற்கருகில் விளையாடப் போனார்கள். குடியிருப்பென்றால் பெரிய அபார்ட்மென்ட் ஒன்றும் கிடையாது. எல்லாம் மண் வீடுகள் தான் அங்கேதான் பெரிய அரி நெல்லிக் காய் மரம் இருந்தது. மற்ற நெல்லிக்காய்களை விட அது இனிப்பாயிருக்கும். ஆனால் பொன்னம்மா பாட்டி பார்த்து விட்டால் போச்சு. திட்டியே தீர்த்து விடுவாள். அந்தப் பாட்டி திட்டியதை வள்ளி அம்மாவிடம் வந்து சொன்னால் அந்தப்பாட்டிக்கும் திட்டு கிடைக்கும். அவர்களது வீட்டில்தான். இதனால் பயனில்லை என்று தோன்ற பாட்டி திட்டுவதை வீட்டில் சொல்வதை விடுத்தார்கள் குழந்தைகள். ஆனால் இவர்கள் பண்ணும் அழும்பை பாட்டி பார்த்துக் கொன்டுதான் இருக்கிறாhள் என்பதோ அது அவரவர்கள் அம்மாக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது என்பதோ பாவம் அவர்களுக்குத் தெரியாது. “நீ அடிக்கிற மாதிரி அடி நான் அழுகிறமாதிரி அழுகிறேன் “ என்பது போல் பொன்னம்மா பாட்டியும் இவர்களது அம்மாக்களும் நடித்தது அப்போது புரியவில்லை. அரி நெல்லிக்காய் நிறைய சாப்பிட்டால் ஏதோ சளி பிடிக்கும் என்று அதை சாப்பிட விடாமல் பெரிசுகள் இந்த கூத்து அடித்திருக்கிறார்கள்.

ஆம் அந்தச் சனிக்கிழமை!

அன்றும் அது போல்தான் பொன்னம்மா குடியிருப்பிற்கருகில் மூவரும் விளையாடப் போனர்கள். பிள்ளைகளை பாதுகாப்பற்ற இடங்களில் காணும் பெரியவர்கள் “ஏடி நீ செல்வி மவ தானே ! இந்நேரத்துல இங்க என்னட்டி செய்யுதே பாம்பு என்னமும் கெடக்கப்போவுது வீட்டப் பாக்கப் போ “ என்று உத்தரவிடும் அளவிற்கு நல்லவர்கள். பிள்ளைகளும் சமர்த்தாக அதைக் கேட்டு வீடு திரும்பி விடுவார்கள்.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அன்றும் அரி நெல்லிக்காயை பறித்து;த் தின்றார்கள். பொன்னம்மா பாட்டி பார்கிறாளா என்று எட்டி எட்டி பார்த்துக் கொன்டே தோட்டத்தில் பூத்திருந்த கனகாம்பரங்களை பறித்து தலையில் வைத்துக் கொண்டார்கள் அன்று அந்தக் குடியிருப்ப்pல் ஆள் அரவமற்றுக் காணபப்படவும் அவர்களுக்கு ஒரே குஷியாகிவிட்டது. எவ்வளவு நேரம்தான் அந்தக் குடியிருப்பிற்கு வெளியிலேயே சுற்றுவது? உள்ளே அவர்கள் தோழர்கள் இருக்கிறார்களே? பாட்டி எதிரில் அவர்களெல்லாம் நல்லவர்கள் மாதிரியும் இந்த வள்ளி அன் கோ மட்டும் கெட்ட பிள்ளைகள் மாதிரியும் டெவலப் செய்பவர்கள் மற்றபடி அவர்களும் குரங்கு வகையறாதான்.

அந்தக் குடியிருப்பில் எதிர் எதிராக லைன் வீடுகள் எட்டு இருந்தது. அது போக அந்தக் குடியிருப்பை சுற்றி வந்தால் அடுத்தக் குடியிருப்பு சுப்பிரமணி குடியிருப்பு வரும் பொன்னம்மா குடியிருப்பை சுற்றி வந்தவர்கள் உள்ளேயிருந்த புளிய மரத்தில் சில புளியம் பிஞசுகளை பறித்துக் கொண்டு அங்கே எந்த வீடும்; திறந்து கிடக்காததால் சுற்றிக் கொண்டு சுப்பிரமணி காம்பவுன்டுக்குள் சென்றார்கள்.

அங்கேதான் ராசுவின் வீடு திறந்திருக்கக் கண்டர்கள். “ அய்யா ! ராசு வீட்லதான் இருக்கா போய் விளையாடக் கூப்பிடுவோமா?” என்றபடி வீட்டிற்குள் நுழைந்தார்கள். அதெல்லாம் குழந்தைகளுக்கு கட்டுப்பாடு கிடையாது. திறந்திருக்கும் எந்த வீட்டிற்கும் போவார்கள் . அங்குள்ள குழந்தைகளை விளையாடக் கூப்பிடுவார்கள். பெற்றோர் அனுப்ப மறுத்தால் விட்டு விடுவர்கள். அல்லது நிபந்தனையின் பேரில் கூடக் கூட்டிப் போய் விளையாடி விட்டோ அங்கிருந்தே விளையாடNவுh செய்வார்கள் ம்ப்ச் எல்லாமே விளையாட்டுதான் எப்;போதும் நாம் புத்திசாலி என்ற நினைப்புதான்

ராசுவின் வீட்டில் ராசுவின் சித்தப்பா இருந்தார் . ராசுவின் சித்தப்பா அவர்களுக்கும் சித்தப்பாதானே? “ ராசு சித்தப்பா! ராசு சித்தப்பா! ராசு எங்க?”

அந்த கால வீடுகளில் கதவு நிலையின் மேல் ஒரு சின்ன அலமாரி இருக்கும் அவசரத்திற்கு முக்கியமான பொருள் ஏதாவது வைக்க வே;ண்டுமானால் அதில்தான் வைப்பார்கள். குழந்தைகள் கைக்கு எட்டக் கூடாத சிறிய அளவிலான வெளியில் வைக்கக் கூடிய பொருள் ஏதாவது வைக்க வேண்டுமானால் அந்த நிலையின் மீதுதான் வைப்பார்கள்.

ராசுவின் சித்தப்பா செல்வமும் அந்த நிலையில்தான் துழாவிக் கொண்டிருந்தார். அப்புறம் ஏதோ ஒரு கையடக்க பொட்டலத்தை எடுத்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.