(Reading time: 15 - 29 minutes)

சுப்பிரமணி காம்பவுண்டை அடையும் போதே ஒப்பாரி சத்தம் கேட்டது. ஆவசரமாக உள்ளே நுழைந்தவர்கள் தங்களது துணிப்பையை அடிபம்பு மறைவிடாக வெளிப்புறமாக இருக்கும் வீடுகளில் வைத்துவிட்டு வெளிவரும் போதே செல்வத்தின் சடலம் அவரது வீட்டில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டது. வீட்டின் நிலைக்கதவைக் கழற்றி , திருப்பி அதன் மேல் அவரது சடலம் கிடத்தப்பட்டிருந்தது.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சுற்றிலும் இருந்த கூட்டத்ததை விலக்கி விட்டு பார்த்த மல்லிக்கு அதுதான் முதன் முறையாக பிணத்தை பார்ப்பது. “ நான் அப்பவே நினைச்சேன் தண்ணி இல்லாம மாத்திரை சாப்பிட்டதுனாலதான் இப்டி ஆயிருச்சு” என்ற தன் கண்டுபிடிப்பைக் கூறினாள். புக்கத்தில் வந்த அவளது அம்மா “ இப்டில்லாம் பேசக் கூடாது” என்றபடி வாயைப் பொத்தினார். மல்லியே வந்த பிறகு வள்ளியும் சின்னமல்லியும் வராமல் இருப்பார்களா? மூவருக்கும் ஒரே அதிசயமாக இருந்ததே தவிர வேறு எந்த நினைப்பும் தோன்றவில்லை.

திடீரென்று வள்ளி “ ஏய் சீதையக்கா அழுவுறாங்களாம். ஏன்னு தெரியலியாம். வாங்க போய் பார்க்கலாம் “ என்று மற்ற இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றாள். “ அதுல்லாம் போகக் கூடாது “ என்ற தாய்மார்களின் வார்த்தை அவர்களை எட்டவேயில்லை. எல்லோரும் வந்து பார்த்துப் போவதாலோ என்னவோ இவர்கள் போய் பார்த்தபோது சீதையக்கா அழவில்லை. அப்போதும் அந்த முகத்தில் என்ன இருந்தது என்பதை இவர்களால் கண்டு கொள்ளவே முடியவில்லை.

ராசு சித்தப்பா மாத்திரை சாப்பிட சீதையக்கா ஏன் தண்ணீர் தரவில்லை? மாத்திரை சாப்பிட வேண்டாம் என்று ஏன் சொல்லவில்லை? அவர் இறந்தபோது ஏன் அழுதார்? பின் அழுகையை ஏன் மறைத்தார். சீதையக்கா மனதில் என்னதான் இருந்தது? எதுவுமே புரியாமல் அதை முழுமையாக மறந்து மறுநாளிலிருந்து தங்கள் விளையாட்டை மீண்டும் ஆரம்பித்திருந்தார்கள் பிள்ளைகள்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.