Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ - சசிரேகா - 5.0 out of 5 based on 1 vote
Pin It

சிறுகதை - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ - சசிரேகா

flowerHeart

ழகான அந்தி மாலை நேரம்

”மாமா” என்றாள் ஏக்கமாக ரதி

”சொல்லு” என்றான் மாதவன் கவலையாக

”உன் அப்பா சொன்னதுக்காக ஊரை விட்டே போகனும்னு முடிவு பண்ணிட்டியா மாமா”

”என்ன செய்றது வேலை வெட்டியில்லாம தண்டச்சோறு சாப்பிடறேன்னு சாப்பிடறப்பல்லாம் என்னை திட்டி கேவலப்படுத்தினா எப்படி என்னால தாங்க முடியலை ரதி அதான் போறேன்”

“நீ எங்க போவ மாமா?”

”சென்னைக்கு போறேன் ஏதாவது வேலையை தேடறேன்”

“இந்த ஊர்லயே வேலையை தேடு மாமா, இந்த மதுரையில இல்லாத வேலையா”

“நான் படிச்சது இன்ஜினியருக்கு சொந்த ஊர்ல சாதாரண வேலை பார்த்தா அவ்ளோதான் என் மானம் போச்சி, மரியாதை போச்சின்னு என் அப்பா ஆடுவாரு அதான் வெளியூர்னா நான் அங்க என்ன வேலை செஞ்சாலும் இங்க இருக்கறவங்களுக்கு தெரியாது ஏதோ கூலி வேலையாவது செய்யலாம்னு இருக்கேன்”

“மாமா அப்படி சொல்லாத இன்ஜினியர் படிச்சா வேலை கிடைக்காதா என்ன”

“இப்ப யாருக்கும் கிடைக்கலையேம்மா, எல்லாரும் படிச்சிட்டு வெட்டியாதான் இருக்காங்க”

“என்னையும் என் அப்பா அந்த படிப்புதான் படிக்கச் சொல்றாரு மாமா”

“அய்யோ வேணாம் அப்படி எதையும் செய்யாத நீ பொண்ணு, அழகா 2 டிகிரி படி அதுவும் டீச்சருக்கு படிச்சிடு டீச்சர் வேலையை பாரு இல்லையா அரசாங்க வேலைக்குத் தேவையான படிப்பு படி ஆபிசராயிடு. இந்த இன்ஜினியர் படிச்சி நான் இப்படி இருக்கறது போதும் நீயும் என்னை மாதிரி ஆகவேணாம் புரியுதா”

“சரி மாமா இப்ப வெளியூர் போறேங்கறியே எங்க தங்குவ? என்ன சாப்பிடுவ? என்ன செய்வ கையில பணம் இருக்கா?” என கேட்க அவனோ தனது பர்சை திறந்துப் பார்த்தான் அதில் 100 ரூபாய் இருந்தது

”இவ்ளோதான் இருக்கு”

“இதை வெச்சி எப்படி மாமா போக முடியும்”

“ப்ரெண்ட்ஸ்கிட்ட கேட்டிருக்கேன் பணம் கடனா தரேன்னு சொன்னாங்க”

“என்கிட்ட இருக்கு மாமா நான் தரவா”

“வேணாம் ரதி என் கஷ்டம் நான் படறேன், நீ எதுக்கு இப்ப இதைச் செய்ற”

“இல்லை மாமா யார்கிட்டயோ கடன் வாங்கறதுக்கு பதிலா என்கிட்ட இருக்கே இதை வைச்சிக்க மாமா, நான்தானே நான் உனக்கு உதவி செய்யக்கூடாதா” என அவள் பேச அவனுக்கு கூச்சமாகவும் தயக்கமாகவும் இருந்தது. ஆனாலும் அவளின் முகத்தில் தெரிந்த ஏக்கத்தைக் கண்டவன்

”உன்கிட்ட நான் எப்படி பணம் வாங்கறது என்னால முடியாது”

“ப்ளீஸ் மாமா அப்படி சொல்லாத மாமா, நான் படிக்க நீ எவ்ளோ கஷ்டப்பட்டிருப்ப”

“நானா அடிப்பாவி நான் என்ன கஷ்டப்பட்டேன். வெட்டியா இருக்கேன்னு வீட்ல ஸ்கூல் பிள்ளைகளுக்கு ட்யூசன் எடுத்தேன், அப்படியே உனக்கும் ட்யூசன் எடுத்தேன் அவ்ளோதானே”

“உன்கிட்ட நான் படிச்சதாலதான் எல்லா சப்ஜெக்ட்லயும் பர்ஸ்ட்ல வந்தேன் மாமா”

என ரதி சந்தோஷமாகச் சொல்ல

”நீயாவது என்னை பாராட்டினியே அது போதும்”

”மாமா உன்கிட்ட நிறைய திறமைங்க இருக்கு மாமா, எல்லாருக்கும் சூப்பரா படிப்பு சொல்லிக் கொடுக்கற அப்புறம் என்ன பேசாம இங்கயே ஏதாவது ட்யூசன் சென்டர் ஆரம்பி மாமா, ஸ்கூல் காலேஜ்ல படிக்கிற மாணவர்களுக்கு சொல்லிக் கொடு மாமா என்னைப் போல இருக்கற பசங்க உன்கிட்ட வந்தா நல்லா படிப்பாங்க மாமா, இப்பவே உனக்கு நல்ல பேர் இருக்கு தெரியுமா”

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“எல்லாம் சரி ஆனா அப்படி ட்யூசன் சென்டர் வைக்கனும்னா நிறைய பணம் செலவாகும். இப்பவே என் வீட்டு மாடியில ட்யூசன் வைக்கிறேன். அதுக்கே கீழ் வீட்டுல இருக்கற ஓனர் கத்தறாரு. பசங்கள்லாம் வந்து கத்தறாங்க, குதிக்கறாங்க வீட்டை காலி பண்ணுன்னு கத்தினதாலதானே என் அப்பா என்னைத் திட்டினாரு. இதுல நான் எப்படி ட்யூசன் சென்டர் வைக்கறது”

“ஏன் மாமா ட்யூசன் சென்டர் வைக்க எவளோ பணம் செலவாகும்”

“தெரியலை அதுல இறங்கினாதான் எவ்ளோ ஆகும்னு சொல்ல முடியும், ஸ்கூல் பசங்க வந்தா நிறைய இடம் தேவை, ஒரு ஹால் போல பெரிசா இடம் வேணும், அப்புறம் போர்டு சாக்பீஸ் முக்கியமா மாசம் மாசம் வாடகை, கரண்ட் பில் கட்டனும், அதுக்கு ஏத்த மாதிரி ஸ்டூடன்ட்ஸ் வரனும் அவங்க தர்ற பீஸ் வைச்சித்தான் நான் எல்லா செலவுகளையும் கட்டுப்படுத்தனும்”

”பேங்க்ல லோன் போடலாமே மாமா”

“என்னை நம்பி தருவாங்களா”

“கேட்கலாமே மாமா இப்படி சும்மா யோசிச்சி புலம்பறதை விட ஏதாவது செய்யலாமே”

“பேங்க்குக்கு போனா யாரையாவது ஷூரிட்டி கையெழுத்து கேட்பாங்க யார் என்னை நம்பி கையெழுத்து போடுவாங்க ரதி”

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Popular stories in Chillzee KiMo

 • Edhetho ennam valarthenEdhetho ennam valarthen
 • Enaiyaalum kadhal desam nee thaanEnaiyaalum kadhal desam nee thaan
 • En mel undranukkethanai anbadiEn mel undranukkethanai anbadi
 • Ilaiya manathu inaiyum pozhuthuIlaiya manathu inaiyum pozhuthu
 • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren
 • Maasilla unmai kadhaleMaasilla unmai kadhale
 • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram
 • Vannam konda vennilave vaanam vittu vaaraayoVannam konda vennilave vaanam vittu vaaraayo

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: சிறுகதை - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ - சசிரேகாsasi 2018-09-11 12:20
Quoting வைத்தியநாதன்:
ரொம்ப பாசிடிவான அப்ரோச்! கதைக்காக காதலை சேர்த்திருந்தாலும் அதிலும் ஒரு வெகுளித்தன்மை பளிச்சிடுகிறது. Sasirekha இந்த தலைமுறையின், இந்த நாட்டின், இன்றைய இளைஞர்களின், தலைவியாக வழிநடத்திச்செல்ல எல்லா தகுதியும் பெற்றிருக்கிறாள். வாழ்த்துக்கள்!

நன்றி ஓவரா என்னை கலாய்க்கறீங்க கமெண்ட் ரொம்ப ஓவரா இருக்கு என்னால நீங்க சொன்னதை ஏத்துக்க முடியலை நான் பாவம் நீங்க சொல்ற அளவுக்கு நான் இல்லை நான் ஒரு சாதாரண writerதான் :sad:
Reply | Reply with quote | Quote
+1 # பெண்ணல்ல....வைத்தியநாதன் 2018-09-11 09:48
ரொம்ப பாசிடிவான அப்ரோச்! கதைக்காக காதலை சேர்த்திருந்தாலும் அதிலும் ஒரு வெகுளித்தன்மை பளிச்சிடுகிறது. Sasirekha இந்த தலைமுறையின், இந்த நாட்டின், இன்றைய இளைஞர்களின், தலைவியாக வழிநடத்திச்செல்ல எல்லா தகுதியும் பெற்றிருக்கிறாள். வாழ்த்துக்கள்!
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ - சசிரேகாTamilthendral 2018-08-31 18:04
Nice story :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ - சசிரேகாBuvaneswari 2018-08-29 11:53
தென்றலை போல இருப்பவள்
என்னை தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்

இந்த நான்கு வரிகள் தான் மனசுல ரீங்காரமிட்டு கொண்டே இருந்தது . கதைக்கான பாடலா , அல்லது பாடலுக்காக கதையானு வியக்க வைத்த அழகான கதை .. ரொம்பவும் ரசிச்சேன் .. வாழ்த்துக்கள்
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ - சசிரேகாsasi 2018-08-31 17:21
Quoting Buvaneswari:
தென்றலை போல இருப்பவள்
என்னை தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்

இந்த நான்கு வரிகள் தான் மனசுல ரீங்காரமிட்டு கொண்டே இருந்தது . கதைக்கான பாடலா , அல்லது பாடலுக்காக கதையானு வியக்க வைத்த அழகான கதை .. ரொம்பவும் ரசிச்சேன் .. வாழ்த்துக்கள்

மிகவும் நன்றி அந்த பாடல் எனக்கும் பிடிக்கும் அதனால் பாடல் வரிகளை வைத்து கதை எழுத நினைத்தேன் அதன் முதல் படி இது அடுத்தடுத்த கதைகளையும் படித்து பாருங்கள் கமெண்ட் தாருங்கள் நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ - சசிரேகாsasi 2018-08-29 10:43
நன்றி விந்தியா மற்றும் ஹரி
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ - சசிரேகாVindhya 2018-08-27 22:35
cute ana kathai Sasirekha madam (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ - சசிரேகாhari k 2018-08-27 14:49
Very nice story mam....Supera express panirukiga :clap: :clap: :clap: (y) all the best for ur next story
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ - சசிரேகாsasi 2018-08-27 14:05
Quoting mahinagaraj:
ரொம்ப கியூட்டா இருக்கு.... :clap: :clap:
எனக்கு ரொம்ப பிடிச்சுயுருக்கு.. ;-)
:thnkx:

அப்படியா ரொம்ப நன்றி மகி மேம்
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ - சசிரேகாmahinagaraj 2018-08-28 11:08
மகி மட்டும் போதும் மேம் எல்லாம் வேண்டாம்... :no:
உங்களுக்கு விருப்பம்ன்னா நண்பி-ன்னு வேணா சொல்லாம்... ;-) :cool: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ - சசிரேகாmahinagaraj 2018-08-27 13:40
ரொம்ப கியூட்டா இருக்கு.... :clap: :clap:
எனக்கு ரொம்ப பிடிச்சுயுருக்கு.. ;-)
:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ - சசிரேகாmadhumathi9 2018-08-27 12:47
wow nice & super story. (y) :clap: vaaltugal mam.adutha story eppo ezhutha poreenga. :GL: :clap: :grin: tq 4 this story. (y)
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ - சசிரேகாsasi 2018-08-27 13:13
Quoting madhumathi9:
wow nice & super story. (y) :clap: vaaltugal mam.adutha story eppo ezhutha poreenga. :GL: :clap: :grin: tq 4 this story. (y)

நன்றி அடுத்தடுத்த சிறுகதைகள் எழுதிக்கொண்டே இருக்கிறேன். தொடர்ந்து வெளிவரும் தவறாமல் படித்து ஆதரவோடு தங்கள் கமெண்ட்டைகளையும் தாருங்கள் நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ - சசிரேகாsasi 2018-08-27 09:17
Quoting Manimozhimani14:
Nice story .exactly hero situation tha enakum engg padichutu velai Illama Bt Enna my parents Enna thittala. Now nanum oru clgla lecturer. Enna nambiyum Padikka varanga.so Intha story read pannum pothu I am very happy :-) nice story sister :clap:

மிக்க நன்றி மணிமொழி அவர்களே உங்கள் ஆசிரியர் வேலை மேன்மேலும் சிறக்கட்டும் பல மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தி நல்லபடியாக வழிநடத்தும் உங்களுக்கு என் சல்யூட்
Reply | Reply with quote | Quote
+1 # சிறுகதை - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ - சசிரேகா - Pennalla pennalla oothaa poo - Sasirekha -Manimozhimani14 2018-08-26 21:14
Nice story .exactly hero situation tha enakum engg padichutu velai Illama Bt Enna my parents Enna thittala. Now nanum oru clgla lecturer. Enna nambiyum Padikka varanga.so Intha story read pannum pothu I am very happy :-) nice story sister :clap:
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top