Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

Chillzee KiMo Only BooksChillzee KiMo Books

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ - சசிரேகா - 5.0 out of 5 based on 1 vote
Pin It

சிறுகதை - சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ - சசிரேகா

shyGirl

ட்டி

”பொண்ணை கூட்டிட்டு வாங்க” என சபையில் ஒருவர் சொல்ல உடனே பெண்ணை அழைத்து வர இரு பெண்கள் அறைக்குள் சென்றார்கள்.

”ஆதர்ஷ் பொண்ணை நல்லா பார்த்துக்க, திரும்ப திரும்ப காட்டமாட்டாங்க” என அவனின் தந்தை மோகன் சொல்ல சிரித்தான் ஆதர்ஷ்

ஆதர்ஷ் - சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை செய்யும் படித்த அழகான ரசனையான குணம் படைத்தவன். ஐடி வேலை என்றாலும் அவனது ஹாபி அனைத்தும் அழகழகான விசயங்களை ரசிப்பது. உதாரணத்திற்கு அவன் தமிழ்நாட்டில் உள்ள அழகான சுற்றுலா இடங்கள் அனைத்திற்கும் சென்று வந்தவன். அங்குள்ள இடங்கள், உணவு, பழக்க வழக்கம் என எல்லாவற்றையும் ரசிக்கும் மனப்பான்மை அவனிடம் உண்டு. ரசிப்பதோடு இந்த உணவின் ருசி அருமை, இந்த துணி கலக்கல் என கடைக்காரர்களிடமே வர்ணித்து பேசிவிடுவான். மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் இயல்பாக பழகுவான்.

அவனது தாய் 4 வருடங்களுக்கு முன்பு நோய்வாய்பட்டு இறந்த காரணத்தால் தாயில்லாமல் தனிமையாக வாழ பிடிக்காமல் இப்படி லீவு கிடைக்கும் போதெல்லாம் தனியாளாக பல சுற்றுலா இடங்களுக்குச் சென்று தனது துயரத்தை போக்கிக் கொண்டான். அவனது அப்பா யதார்த்தவாதி, தன் மகனிடம் கூட நண்பன் போல பழகும் எண்ணம் கொண்டவர், அரசாங்க வேலையில் இன்னும் 2 வருடத்தில் பதவி ஒய்வு வரும் அதற்குள் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து மகனின் ஆசைக்கு மறுப்பு சொல்லாமல் ஊட்டியில் ஒரு பொண்ணை தேர்ந்தெடுத்தார். அவளை காணவே பெண் பார்க்கும் படலம் என சொல்லிக் கொண்டு தன் மகனுடன் ஊட்டியில் இருக்கும் அவளது வீட்டில் வந்து இறங்கினார்.

இரு பெண்களும் அறைக்குள் சென்று பெண்ணை அழைத்து வந்து நிப்பாட்டினார்கள்.

பார்க்க அழகாக இருந்தாள், வெண்மை நிறம். கண்கள் தாழ்த்தியபடியே சபைக்கு வந்தவள் மொத்தமாக சேர்த்து ஒரே முறை கைகூப்பி வணக்கம் வைத்தாள். அது ஆதர்ஷ்க்கு மிகவும் பிடித்தது.

பெண்ணின் தகப்பனார் ரவியோ

”என் பொண்ணு பேரு தீப்தி, எம்.பி.ஏ படிச்சிருக்கா, ஒரே பொண்ணு” என அவளைப் பற்றிய விவரங்கள் சொல்ல சொல்ல மோகனும் ஆதர்ஷும் கவனமாக அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதிலும் ஆதர்ஷ் அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவள் பக்கம் இருந்த இரு பெண்களும் அவளது காதில் ஏதோ ஓதி அதனால் அவள் வெட்கத்தில் தலை குனிந்தாள். அந்த வெட்கம் அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இயல்பாக அவள் வெட்கப்பட்டதும் அதிலும் குறிப்பாக அவள் வெண்மையாக இருப்பதாலோ இல்லை வெட்கப்பட்டதாலோ இல்லை ஊட்டி என்பதால் வெளியில் இருக்கும் பனியாலோ அவளது 2 கன்னங்களும் ரோஜாப்பூ போல சிவந்துவிடவே அவனுக்கு இன்னும் அவளை பிடித்துவிட்டது. பெரியவர்கள் இன்னும் பேசி முடிக்கவில்லை அதற்குள்

”அப்பா எனக்கு பொண்ணை பிடிச்சிருக்கு” என சத்தமாகச் சொல்ல அங்கிருந்த அனைவரும் சிரித்தார்கள். மோகனோ

”இருடா என்ன அவரசம் அதுக்குள்ள”

“இருக்கறத சொன்னேன்” என்றான். சபையில் இருப்பவரில் ஒருவர்

”சரி சரி அதான் மாப்பிள்ளையே பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாரே அப்புறம் என்ன மேற்கொண்டு பேசி முடிச்சிடலாம்” என சொல்ல மோகனோ ரவியிடம்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”முதல்ல பொண்ணுகிட்ட பிடிச்சிருக்கான்னு கேளுங்க, அப்புறம் முடிவு செய்யலாம்” என சொல்லவும் ரவியும் பெண்ணைப் பார்க்க அவள் சட்டென அறைக்குள் ஓடிவிடவே சிரித்துக் கொண்டே அவளது தாய் தீப்தியிடம் சென்று 1 நிமிடம் கழித்து வெளியே வந்து

”பொண்ணுக்கும் பிடிச்சிருக்காம்ங்க பேசி முடிச்சிடுங்க” என தன் கணவரிடம் சொல்லவும் அந்த பெண் பார்க்கும் படலம் ஒப்புத்தாம்பூலமாக மாறியது.

அடுத்த மாதமே நல்ல முகூர்த்தத்தில் திருமணம் செய்து முடித்தார்கள். பெண்ணின் வீட்டிலேயே சாந்தி முகூர்த்தமும் ஏற்பாடானது.

அறை முழுவதும் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்கவே அங்கு தீப்திக்காக காத்திருந்தான் ஆதர்ஷ்.

தோழிகளுடன் கன்னம் சிவக்க வெட்கப்பட்டுக் கொண்டு வந்து சேர்ந்தாள் தீப்தி. தோழிகளோ அறையைவிட்டுச் செல்லாமல் அங்கயே நின்று குசுகுசுவென பேசவே ஆதர்ஷ்க்கு சிரிப்பே வந்தது. அவன் இயல்பாக அவர்களின் முன் தன் சட்டை பட்டனை கழட்ட ஆரம்பிக்க அதைக் கண்டு சிரித்து கொண்டே அங்கிருந்து அனைவரும் ஓடிவிடவே கதவை சாத்திவிட்டு தீப்தியிடம் வந்தான் ஆதர்ஷ். அவளோ அமைதியாக நிற்கவே அவளது கன்னத்தையே பார்த்தான். அதில் அந்த ரோசாப்பூ சிவப்பு இல்லாமல் போகவே அவளிடம்

”உட்காரு” என்றான் அவளோ

”ஏன் அப்படி செஞ்சீங்க?”

“எப்படி செஞ்சேன்?“

“என் ப்ரெண்ட்ஸ்ங்க முன்னாடி நீங்க சட்டை பட்டனை கழட்டினது”

 என அவள் இழுக்க அவனோ

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8  9 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
# msreader1 2018-09-05 16:50
Alagukku romba mukiyathuvam kuduthu eluthina maadiri irukku madam...avanglukulla irukka kaadhala vera vidhama solli irukalaam...magal matrum manaiviya orey vidhama konja mudiyathu madam

sorry if that hurts you
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ - சசிரேகாsasi 2018-08-31 17:15
Quoting infanto:
normal story tha but atha neenga sonna vitham, super i lke this mam, nizz romantic story ... bravo././././././././././ :) :grin: :P

நன்றி :-)
Reply | Reply with quote | Quote
+1 # sooparoo sooperinfanto 2018-08-31 15:21
normal story tha but atha neenga sonna vitham, super i lke this mam, nizz romantic story ... bravo././././././././././ :) :grin: :P
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ - சசிரேகாsasi 2018-08-30 23:30
நன்றி மதுமதி மகி ஹரி அடுத்த சிறுகதையில பார்க்கலாம் பை
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ - சசிரேகாmahinagaraj 2018-08-30 17:09
ஹாஹாஹா.... :grin: :grin: நல்லாயிருந்தது..
:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ - சசிரேகாhari k 2018-08-30 12:31
Very nice story mam.... :clap: :clap: : (y) : Supera eluthirukiga (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ - சசிரேகாmadhumathi9 2018-08-30 06:23
:grin: haha nice story.adhirchi vaithiyam kodutha thaanaaga vazhikku varaangappa. :clap: (y) :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top