(Reading time: 12 - 23 minutes)

சிறுகதை - பரம்பரை – விஜயலக்ஷ்மி சம்பத்

mother

சென்னையின் புகழ்பெற்ற அடையாறு பகுதி.  அப்பர் மிடில் கிளாஸ் எனப்படும் ஓரளவு வசதி படைத்த நடுத்தரக் குடும்பங்கள் அந்த பகுதியில் இருந்தனர். ஈஸ்வரன் கோவில் தெருவில் இருந்த அன்புவிலாஸ் இல்லம். 'ஓம் சாய் ஓம் சாய் ஓம் சாய்" என சாய் பகவானின் நாமாவளி ஒலித்துக் கொண்டிருந்தது

சாமி அறையில் கண்மூடித் தியானித்தபடி இருந்தவர்தான் சுமதி.  கோவிந்தனின் மனைவி. எல்லோரும் சொல்வதுபோலவே ஓய்வே இல்லாத ஆனால் சும்மா இருக்கும் குடும்பத்தலைவி. கோவிந்தன் அரசுத் துறையில் நல்ல பதவியில் இருப்பவர் பூர்வீகம் கோவை என்றாலும் சென்னையில் குடிபுகுந்து வருடங்கள் 30 க்கு மேல் ஓடிவிட்டன.

'சுமதி காபி கொண்டு வா நேரம் ஆயிடுச்சி பார்" கோவிந்தன் குரல் ஒலித்தது.

கணவரின் குரல் கேட்டவுடன் கற்பூர ஜோதியை கண்களில் ஒற்றிக் கொண்டு 'இதோ வரேங்க" என்றபடி சமையலறைக்குள் புகுந்தாள்.

சரியாக ஒரு நிமிடத்தில் 'இந்தாங்க காபி" என கணவரை நோக்கி டம்ளரை நீட்டினாள்.

'தினமும் கேட்டாத் தான் காபி கொடுப்பியா ஒரு நாளைக்காவது கேட்காம கொடுக்கத் தெரியுதா உனக்கு?"

மனதிற்குள் ஆரம்பிச்சாச்சா என்ற அலுப்பு சிறிதே தோன்றினாலும் வெளியே எதுவும் பேசாமல் வேலையைப் பார்க்க கிளம்பினாள் சுமதி.

மணி பத்து அடித்து விட்டது. 'அப்பாடா!" என்றபடி பெருமூச்சு விட்டபடி சிறிது உட்கார்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் சுமதி.  தினமும் கணவரையும் மகன் ஆனந்தையும் அவரவர் அலுவலகத்திற்கும் மகள் ஹேமாலதாவை அவள் கல்லூரிக்கும் அனுப்பிவிட்டு இப்பழ உட்காரும் அரைமணி நேரம் அவளது நேரமாக இருக்கும்ஃ  தான் கல்லூரியில் பி.எஸ்ஸி படிக்கும்போது இருந்ததற்கும் இப்பொழுது இருக்கும் பெண்களுககும் எத்தனை வித்தியாசம் என்று எண்ணினாள்.

சுமதியும் கல்லூரியில் படித்தவள்தான்.  அப்பொழுது எல்லாம் காலையில் 5.30 மணிக்கே எழுந்து தன் அம்மாவிற்கு உதவியாக வீட்டு வேலைகளை செய்து கொடுத்துவிட்டுதான் கிளம்ப முடியும்.  பெரிதாக சமையல் செய்யாவிட்டாலும் கூட வாசல் தெளித்து கோலம் போட்டுவிட்டு பாத்திரங்களை கழுவி வைதது. வீடு பெருக்கிவிட்டு குளித்து சாமி அறையில் விளக்கு ஏற்றிவிட்டு ஒரு நமஸ்காரம் செய்துவிட்டுத்தான் வெளியே கிளம்ப முடியும்.

ஏதோ நினைத்தபடி உட்கார்ந்திருந்தவளுக்கு அப்பொழுதுதான் நினைவு வந்தது.  'ஐயோ!  இன்றைக்கு அவரிடம் பணம் வாங்க மறந்து போச்சே? நாளைக்கு வேண்டிய காய்கறிகளை சாயந்திரம் போய் வாங்கணுமே.. எப்படி மறந்தேன்!" எனப் பதறிப் போனாள்.

கோவிந்தனிடம் ஒரு பழக்கம்.  சம்பளம் வந்தவுடன் மாத செலவுக்கு என தன் மனைவியிடம் முழுதாக ஒரு தொகையை கொடுத்து வைக்க மாட்டார். தினமும் அல்லது இரண்டு நாளைக்கு ஒருமுறை சுமதிதான் கேட்டு வாங்க வேண்டும். அதையும் கேட்டவுடன் சந்தோசமாகக் கொடுக்க மாட்டார்.  ஆயிரம் கேள்வி கேட்டுவிட்டு,  முறைத்தபடியே கொடுப்பார்.  தினமும் சுமதிக்கு அந்த நேரம் சத்தியசோதனை நேரமாகத் தான் இருக்கும்.

ன்று மாலை 6 மணி ஆகிவிட்டது.

இன்னும் ஒருவரையும் காணவில்லை.  எட்டிப் பார்த்தபடியே வேலைகளை செய்து கொண்டிருந்தாள் சுமதி.  அவர் வந்தவுடன் பணம் வாங்கிக் கொண்டு போனால்தான் இருட்டுவதற்குள் இரண்டு நாளைக்கான காய்கறிகளை வாங்கிக் கொண்டு திரும்பமுடியும்.

கோவிந்தா! கோவிந்தா!! என்ற குரல் கேட்டது.

கதவைத் திறந்து பார்த்த சுமதி 'வாங்க அண்ணா! வாங்க!!" என்று அழைத்தாள்.

சுந்தரம் கோவிந்தனின் நண்பர் நின்றிருந்தார்.

உள்ளே வந்த சுந்தரம் 'எங்கம்மா இன்னும் கோவிந்தன் வரலியா?" என்றார்.

'இல்லண்ணா நீங்க உட்காருங்க வர்ர நேரம்தான் . இருங்க வரேன்" என்றவள் சமையல் அறைக்கு சென்று திரும்பி வந்தாள்.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

'இந்தாங்க அண்ணா காபி" சுந்தரத்திடம் நீட்டினாள் சுமதி.

'ரொம்ப நாளாவே காணோமே.  வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காங்களா?" எனக் கேட்டாள்.

'ம்.ம். நல்லா இருக்காங்கம்மா.  நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க" என்றார்சுந்தரம்.

'நல்லா இருக்கோம் அண்ணா" என்று சொன்னவள் காலி டம்ளரை எடுத்துக் கொண்டு திரும்பினாள்.

'அடடே! சுந்தரம் வா! வா!" என்றபடியே உள்ளே நுழைந்தார் கோவிந்தன்.

'ஒரு நிமிஷம் இரு டிரஸ் மாத்திட்டு வந்திர்றேன்"

அலுவலக ஆடைகளைக் களைந்து விட்டு ரிலாக்சாக லுங்கி கட்டிக் கொண்டு வந்தார் சுந்தரம்.

அவருக்கும் டீ வந்தது.குடித்தபடியே நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

'அப்புறம் சுந்தரம் சொல்லு என்ன விசேஷம்" வினவிய கோவிந்தனைப் பார்த்தார் சுந்தரம்.

'அதுவந்து கோவிந்தா என் சின்ன பையனுக்கு ஐஐடியில் படிக்க சீட் கிடைச்சிருக்கு. .ஃபீஸ் கட்ட வேண்ழ பணம் ரெடி பண்ணிட்டேன்.  இருந்தாலும் ஒரு இருபதாயிரம் மட்டும் குறையுது.  அதான் உன்னைப் பார்த்துக் கேட்கலாம்னு வந்தேன். உனக்கு முடியுமா?"  தயங்கியவாறே கேட்டார் சுந்தரம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.