(Reading time: 12 - 23 minutes)

'அன்னிக்கு பாபு அங்கிள் கூட அவர் பேத்திக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னவுடனே ஐயாயிரத்தை கொடுத்திங்க. அவர் இன்னும் அதைத் திருப்பிக் கூட கொடுக்கல.  இல்லையா இப்படி கேட்கறவங்களுக்கும்.  எங்களுக்கு நாங்க கேட்காமயே கூட கொடுக்கற நீங்க ஏம்ப்பா அம்மாட்ட மட்டும் இப்படி நடந்துக்கிறீங்க.  அம்மா என்ன அடுத்த வீடடுக் செலவுக்கா கேட்கறாங்க. இல்ல அவங்கம்மா வீட்டுக்கு கொண்டுபோய் கொடுக்கறாங்களா.  நம்ம வீட்டுக்கு நமக்கு சமைச்சுப் போட துணி துவைக்க இப்படி நம்ம குடும்பத்துக்காகத்தான கேட்கறாங்க"

'என்னைக்காவது அவங்களுக்குன்னு ஏதாவது செலவு செய்து நீங்க பாத்திருக்கீங்களா? எத்தனை லேடீஸ் புருசன் அந்தப் பக்கம் போனவுடனே. இந்தப் பக்கம் சினிமா பியூட்டி பார்லர்  ஷாப்பிங் னு செலவு பண்றாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? ஏன் என்னோட ஃபிரெண்ட்ஸ்டோ அம்மாக்கள்ள எத்தனை பேர் ஏதோ ஒரு விசேஷத்து போறதுன்னா பியூட்டி பார்லருக்குப் போறாங்க தெரியுமா?"

'அவ்வளவு ஏன் உங்க தங்கச்சி அதான் எங்கத்தை அன்னைக்கு பெரியப்பா வீட்டுக் கல்யாணத்துக்கு எப்படி வந்தாங்க பாத்திங்கள்ள.  புதுப்புடவை. ஐப்ரோ பேசியல்னு எல்லாம் செஞ்சிகிட்டுதான வந்தாங்க அவங்க வயசுதான நம்ப அம்மாவுக்கும். என்னைக்காவது அம்மா பியூட்டிபார்லருக்கு போய் தனக்குனு செலவு செஞ்சிருக்காங்களா? நீங்க வாங்கித்தர புடவைய கட்டிகிட்டு பூ கூட வாங்கி வைச்சுக்காமத்தான நம்ம கூட கல்யாணத்துக்கு வந்தாங்க".

'ஆனா நீங்க மத்த எல்லார்கூடயும் சகஜமா பேசறீங்க.  ஆனா உங்க பொண்டாட்டினு வந்துட்டா மட்டும் இப்படி மாறிப் போயிடறீங்களே ஏம்ப்பா? இதான் ஆணாதிக்கமா அப்பா.  எனக்குத் தெரியலப்பா.  ஆனா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குப்பா."

'ஒருவேளை உங்கப்பா தாத்தாவை பாத்து நீங்களும் இப்படி பழகிட்டீங்களா? ஆனா நாம அடுத்தவங்க கிட்ட இருந்து பழக்கவழக்கத்தை கத்துக்கறதுல முறமா இருக்கறமா? இல்ல சல்லடையா இருக்கறமா? னு நாம்பதான் முடிவு செய்யணும்ப்பா" என்றாள் ஹேமலதா.

இப்போது கோவிந்தன் மட்டும் இல்லாமல் சுமதி ஆனந்தனும் கூட ஹேமலதாவைப் புரியாமல் பார்த்தார்கள்.

'ஆமாப்பா முறத்துல ஏதாவது பொருளை போட்டு சுத்தம் செஞ்சா.  நல்லது எல்லாம் முறத்துல நின்னுடும்.  ஆனா அதுவே சல்லடை மாவோ ரவையோ போட்டு சலிச்சு எடுத்தா சல்லடைல புழு கட்டினு கெட்டது எல்லாம் நின்னுடும்.  நல்ல பொருள் கீழே கொட்டிடும். அடுத்தவங்க கிட்டயிருந்து நாம நல்லதை மட்டும் எடுத்துக்கிட்டு கெட்டதை கீழ தள்ளிடணும் முறம் மாதிரி.   நானும் அண்ணாவும் அப்படித்தான்.  அம்மா எங்களை அப்படித் தான் வளர்த்திருக்காங்க. நீங்களும் அப்படியே மாறிடுங்க அப்பா"

'உங்க பரம்பரையில் எல்லாரும் எப்படி வேணா இருந்துருக்கலாம்பா  ஆனா நீங்களும் அப்படி இருக்கணும்னு அவசியம் இல்லப்பா.  இப்ப காலம் எப்படி எல்லாமோ மாறிப் போச்சு. அதுக்காக நீங்க ஒண்ணும் தலைகீழா மாறணும்னு நான் சொல்லல."

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

'அம்மாகிட்டயும் சாதாரணமா சகஜமா பேசுங்க.  வீட்டு செலவுக்குனு கொஞ்ச பணத்தை ஒட்டுமொத்தமா அம்மா கையில கொடுத்து வைங்க.  வேணும்னா மாசக்கடைசியில கணக்கு கேளுங்கப்பா.  ஆனா தெனம் தெனம் இப்படி அம்மாவை நோகடிக்காதீங்க."

'நாளைக்கு எனக்கு வர்ற மாப்பிள்ளை இப்பழ உங்கள மாதிரி இருந்தா உங்களுக்கு சந்தோசமா இருக்குமானு மட்டும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கப்பா.  எனக்கும்  அண்ணனுக்கும் உங்களை, அம்மாவ ரொம்ப புடிக்கும் அப்பா.  நான் பேசினது தப்பா இருந்தா என்னை மன்னிச்சுருங்கப்பா.  ஆனா ஒரு ரிக்வெஸ்ட்ப்பா. எனக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது உங்கள மாதரி இந்த குணம் உள்ளவரா பாத்துடாதீங்க" என்றவள் கண்ணீருடன் வேகமாய் உள்ளறைக்கு சென்றுவிட்டாள்.

மற்ற மூவரும் விக்கித்து நின்று விட்டனர்.  கோவிந்தன் ஓய்ந்து போனவராக சோபாவில் மெதுவாக அமர்ந்தார்.

அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் தான் நினைவில் வந்தான்.  பாடம் சொல்ல சுப்பன்தான் வரணுமா என்ன சுப்புணியும் வரலாமோ?  தான் ஏன் இப்படி இத்தனை வருடங்களாக நடந்து கொண்டோம்.  நினைத்துப் பார்த்தார்.  அவர் அப்பா தாத்தா எல்லோருமே அவரவர் மனைவிகளை நடத்திய விதம் அதைப் பார்த்து வளர்ந்தது எல்லாம் அவர் மனதில் ஓடியது.

அடுத்தநாள் காலை வானமெங்கும் பரிதியின் சோதி: மலைகள் மீதும் பரிதியின் சோதி:  என பரிதி வங்கக்கடலில் மேல் எழும்பினான்.

'சுமதி! சுமதி!! இங்க வா"

'என்னங்க" என்ற சுமதியிடம்

'இந்தா இதில :மூவாயிரம் ரூபா இருக்கு.  வீட்டு செலவுக்கு வச்சிக்கோ.  இன்னும் பத்து நாள்தான இருக்கு.  ஒன்னாம் தேதி சம்பளம் வந்தவுடன் பத்தாயிரம் ரூபா தர்றேன் என்ன சரியா?"  என்றவரை வியந்து போய் பார்த்தாள் சுமதி

'சுமதி காபி கொண்டு வா நேரம் ஆயிடுச்சி பார்" கோவிந்தன் குரல் ஒலித்தது.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.