Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Chillzee 2019 Contest #01 - Devi's Kaanaai kanne story contest</strong></h3>

Chillzee 2019 Contest #01 - Devi's Kaanaai kanne story contest

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - பெண்மையை வணங்கு! - ரவை - 5.0 out of 5 based on 2 votes

சிறுகதை - பெண்மையை வணங்கு! - ரவை

women

"லா மேம்! மேனேஜர் கூப்பிடறாரு,...." என சொல்லிவிட்டு, அந்த பியூன் போகவேண்டியவன்தானே, ஏன் சிரித்துக்கொண்டு நிற்கிறான்?

கலாவுக்கு அவமானமாயிருந்தது! அவனை நேருக்கு நேர் பார்க்க வெட்கமாயிருந்ததால், தலை குனிந்தாள். தனது நிலை இத்தனை கேவலமாகிவிட்டதே என நினைத்ததும், கண்ணீர் கொட்டியது!

"கலாமேம்! ......"

கலா தலை நிமிர்ந்தாள்.

அவள் கண்ணீரைப் பார்த்து பதறிய பியூன் அருகே ஓடிவந்து, "மேம்! சத்தியமா நான் உங்களை கேலி செய்யலை, இந்த ஆபீஸ், மேனேஜராலே இப்படி கேவலமாயிடுத்தேன்னு நொந்துபோயிருக்கிறவங்களிலே, நானும் ஒருத்தன்! அவர் கையிலே அதிகாரமிருக்கு, நாம உயிர்வாழ இந்தவேலையை நம்பியிருக்கோம், அதனாலே ஒண்ணும் எதிர்த்து செய்யமுடியாம இருக்கோம், ஆனா, என்னிக்காவது ஒருநாள் அவர் அத்துமீறிட்டார்னு தெரிஞ்சா, நான் சும்மா இருக்கமாட்டேன், மேம்! கொலையே செய்வேன்!"

அவன் நாடகமாடவில்லை, சத்தியமாகத்தான் பேசுகிறான் என்பது, அவன் சிவந்த கண்கள் உமிழ்ந்த அக்னித் துண்டுகள் காட்டிக்கொடுத்தன.

அந்தக் கம்பெனி, தனியார் துறையிலுள்ள, சிறிய கம்பெனி. மனித தலைமுடியை ஏற்றுமதி செய்யும் தொழில்!

முதலாளியின்கீழ், ஒரு மேனேஜர், இரண்டு சூபர்வைசர்கள், இருபது உதவியாளர்கள், இரண்டு கடைநிலை ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

ஐம்பது ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட்டு, பணியாற்றுவோருக்கும் கவர்ச்சிகரமான அளவில் ஊதியம் அளித்து, அவர்கள் மனதில் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிய அச்சமில்லாமல் நம்பிக்கையோடு உழைக்கச் செய்தது!

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இருபது பெண் உதவியாளர்களில், இரண்டு பேரைத் தவிர, மற்றவர்கள் இளம் கன்னிப்பெண்கள்!

முதலாளிக்கும் மேனேஜருக்கும் உறவினராகவோ, தெரிந்தவர்களாகவோ, வேலையில் அமர்த்தப்பட்டவர்கள்!

கடைநிலை ஊழியர்கள் மட்டுமே வெளியாட்கள்!

மிகுந்த மகிழ்ச்சியுடன் பணியாற்ற வேண்டிய உதவியாளர்கள், அப்படி இருக்கமுடியாமல் போனதற்கு ஒரே காரணம், மேனேஜரின் சபலபுத்திதான்!

அவர் ஒன்றும் இளைஞரல்ல, பிரும்மசாரியல்ல, கல்யாணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன்! மனைவியும் பார்க்க அழகாயிருப்பாள். ஆனால், மேனஜருக்கு வக்கிரபுத்தி! சபலபுத்தி! சில்லறை விளையாட்டுகளில் விருப்பமானவர்!

கன்னிப்பெண்களுக்கு, அவர் வேலை சம்பந்தமாக, தன் அறைக்கு அழைத்தாலே, குலைநடுங்கும்!

அறைக்கதவை திறந்துவைத்தவாறே, அவருடன் பேசிவிட்டு, திரும்ப முனைந்தாலும், அவர் விடமாட்டார். ஏதாவது பேப்பரை நீட்டி அருகே வந்து வாங்கிக்கொள்ளச் சொல்வார். உள்ளே செல்கையில், கதவு மூடிக்கொள்ளும், மேனேஜர் சிரித்தவாறே, திருவிளையாடலை துவங்குவார். அசிங்கமான போட்டோக்களை காட்டுவார்.  தப்பிக்க வழி தெரியாமல், கண்களில் நீர் தளும்பும்வரை விடமாட்டார். 

மற்ற பெண்களிடம் மீறாத எல்லைகளை, கலாவிடம் துணிந்து முயல்வார். காரணம், கலாவின் குடும்ப பொருளாதார நெருக்கடியில் அவளுக்கும் அவள் குடும்பத்துக்கும் இந்த வேலைதான் சோறு போடுகிறது. இது மேனேஜருக்கு முதல்நாளே தெரிந்துவிட்டதால், அவர் கலாவிடம் சிறிதும் தயக்கமின்றி அத்து மீறினார்.

கலா தன் சக உதவியாளர்களிடம் கலந்தாலோசித்தாள். 

"கலா! இந்த பிரச்னை எங்களுக்கும் இருக்கிறது. அவசரப்பட்டு, வேலையை விட்டுவிடாதே! மேனேஜரின் கொட்டத்தை அடக்க, ஏதாவது ஒரு வழி செய்வோம்."

அவர்களில் திருமணமான மூத்த உதவியாளர்களை, முதலில் அணுகி ஆலோசனை கேட்டனர்.

" மேனேஜர் ஜொள்ளு பார்ட்டிதான்! நாங்களும் அந்தமாதிரி கண்டங்களை தாண்டித்தான் வந்திருக்கிறோம். இப்போதெல்லாம், எங்களை சீண்டுவதில்லை. ஆனால், அவனால் சில்லறை தொந்தரவுகள்தான் இருக்குமே ஒழிய, அசம்பாவிதம் ஏதும் நடக்காது. தைரியமாயிருங்கள்!"

பலமான யோசனைக்குப்பிறகு, சூப்பர்வைசர்களை அணுகி, தங்கள் துன்பத்துக்கு ஏதாவது பரிகாரம் இருக்குமா என கேட்டனர்.

"இது ரொம்ப காலமா நடப்பது, எங்களுக்குத் தெரியும். நாங்கள் உங்களோடு நடுஹாலில்தான் வேலை செய்கிறோம். மேனேஜர் அறைக்குள் என்ன நடந்தாலும் நாங்கள் அதை நேரடியாக பார்க்க வாய்ப்பில்லை. அதனால், நீங்கள் சொல்வதை வைத்துத்தான், நாங்கள் எதுவும் எவரிடமும் பேசமுடியும். பேசினால், எங்களைப் பார்த்து கேட்கப்படும் முதல் கேள்வி, 'நீ கண்ணாலே பார்த்தாயா?' என்பதுதான். அத்தோடு நாங்கள் மௌனமாகிவிடவேண்டியதுதான், சாரி"

கலா பெருமூச்சுடன் மேனேஜரின் அறைக்குள் நுழைந்தாள். இன்று ஏதாவது தப்பாக நடந்துகொண்டால், நேரிடையாக பேசிவிடவேண்டியதுதான், என்ற முடிவோடுதான் நுழைந்தாள்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: சிறுகதை - பெண்மையை வணங்கு! - ரவைmahinagaraj 2018-11-13 12:44
ரொம்ப அருமையான கதை.... :clap: :clap:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பெண்மையை வணங்கு! - ரவைRaVai 2018-12-01 19:16
மிக்க நன்றி, மகி நாகராஜ்.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பெண்மையை வணங்கு! - ரவைsasi 2018-11-04 08:01
aadharv sonnathum sarithan :hatsoff: kala ippadiye idundha eppadi velai poyidumenu payandha appuram ellathukkum adjust panni nadakanumnu kattayathuku poga vaipirukku indha kalathila ponnunga than ella velaiyilayum irukanga kashtamana velaiyila kooda avanga work panranga ella idathulayum bayam irundha kastam oru idathula thunidhu ninna appuram yaralaiyum ponnungala onnum pannida mudiyathu nice one
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பெண்மையை வணங்கு! - ரவைவைத்தியநாதன் 2018-11-04 09:41
Purpose of the story is achieved, looking at your comments!
Almost a century back, poet Bharathi said நாணமும அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம், பூணு நல்லறத்தோடிங்கு போந்து நிற்பது தாய்சிவசக்தியாம்!
Thanks
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - பெண்மையை வணங்கு! - ரவைAdharvJo 2018-11-02 18:48
Well narrated Sir :clap: :clap: :hatsoff: for choosing this theme. Sister, daughter ippadi ellam parka vitalum let them respect as a fellow human being....shame on the opportunist for taking advantage of others weakness. Its not time to cry either they shld quit (plenty of opp is around us) or raise voice (at times dis is not possible such is our society :angry: ) andha mathiri scene la silent quit panitu pogalam bayandhu bayandhu ethana nalu work panamudiyum ?? Everytime paranthaman mathiri orutharu help panamudiyahey n like here not to wait until neck moment. High time eppodho vandhachi but we don't see any massive efforts to clean this dirt...still people dare to assult and roame happily steam
pray for safe, peaceful n happy life for everyone. Wish some magic is done by god.
Thank you!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பெண்மையை வணங்கு! - ரவைவைத்தியநாதன் 2018-11-02 19:00
Exactly this type of reaction was my objective in bringing out this story! Thank you Sir!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
14
EVUT

PVOVN

NiNi
15
MINN

ILU

MAMN
16
VD

EMPM

KIEN
17
VMKK

KK

KaKa
18
Sush

UVME

Enn
19
UNV

NKU

Tha
20
KI

VTKS

EK

Mor

AN

Eve
21
EVUT

-

NiNi
22
MMSV

ILU

MAMN
23
GM

EMPM

KIEN
24
ISAK

KK

KaKa
25
EU

Ame

EYPI
26
UNV

NKU

Tha
27
KI

VTKS

EK

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top