Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுத் தொடர் - மல்லி - 09 - செந்தமிழ் நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள் - சசிரேகா - 5.0 out of 5 based on 1 vote
Pin It

சிறுத் தொடர் - மல்லி - 09 - செந்தமிழ் நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள் - சசிரேகா

love

வெற்றிக்கு அன்று முழுவதும் சந்தோஷம் மட்டுமே இருந்தது, தலைகால் புரியாமல் சுற்றித் திரிந்தான். தன் காதலி தன்னை ஏற்றுக் கொண்டதே அவனுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தரவே அவன் நேராக தன் வீட்டிற்கு வந்தான். அவனது துள்ளலும் சந்தோஷமும் கண்ட அவனது தாயார்

”என்ன வெற்றி ஒரே சந்தோஷமா இருக்க என்ன விசயம் சொல்லு, நானும் சந்தோஷப்படுவேன்ல”

“கொஞ்ச நாள்ல உனக்கு ஏத்த மருமகள் வரப்போறா அதான்”

“அப்படியா யார்டா அந்த பொண்ணு?”

“பொறு பொறு நாள் வரும் அப்ப உன்னை கூட்டிட்டு போய் காட்டறேன், உனக்கும் அவளை ரொம்பப் பிடிக்கும்”

“உனக்கு பிடிச்சதால எனக்கு பிடிக்கனும்னு நினைக்கிறியா என்ன ஒருவேளை உன் அப்பாவுக்கு பிடிக்கலைன்னா”

“கண்டிப்பா பிடிக்கும் அவள் ரொம்ப நல்லவள், அழகானவள், படிச்சவள், செந்தமிழ் நாட்டு திருமகள் என் தாய்க்கு வாய்த்த மருமகள்ன்னு அவர்ட்ட சொல்வேன், அவரும் உடனே ஓகே சொல்லிடுவாரு வேணா பாரு இந்த வருஷமே எனக்கு கல்யாணம் ஆகி அடுத்த வருஷம் உன் கையில என் குழந்தை இருக்கும் அவனை நீதான் நல்லா வளர்க்கனும்”

“அதுக்கென்னடா தாராளமா வளர்க்கறேன் சீக்கிரமா பொண்ணு காட்டுடா ஆசையா இருக்கு அவளை பார்க்க”

“பொறும்மா என்ன அவசரம் எனக்கே 6 மாசம் கழிச்சிதான் அவள்ட்ட இருந்து பதில் வந்திருக்கு, அவள் என்னை காதலிக்கறதா இன்னிக்குதான் சொன்னா, சொன்னதோட என்னையும் ஏத்துக்கிட்டா இனிமே என்ன கல்யாணம்தான் ஒரு நல்ல நாளா பாரு பொண்ணு பார்க்கப் போலாம்”“

உன் மாமனை நினைச்சியா ப்ரீத்தியை உனக்கு கல்யாணம் பண்ண ஆசைப்பட்டாரே”

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஆனா ப்ரீத்தி என்னை விரும்பலையே, அவளோட இன்னொரு முறைப்பையன் இருக்கான்ல அவளுக்கு வயசுக்கு வந்தப்ப சீர் செஞ்சானே அவனைத்தான் அவள் விரும்பறா”

“ஓ அப்படியா சரி சரி இந்த விசயம் உன் மாமாவுக்கு தெரியுமா”

“தெரிஞ்சா என்னாயிடும் எப்படியும் அவனும் முறைதானே, பிரச்சனை வந்தா பார்த்துக்கலாம் எல்லாம் அன்னிக்கு கதை அன்னிக்கு பார்க்கலாம், இன்னிக்கு நான் சந்தோஷமா இருக்கேன் என்னை ஜாலியா இருக்க விடும்மா” என சொல்லிவிட்டு அவன் தன் அறைக்குச் சென்று படுக்கையில் படுத்தவன் சுஹாவை நினைத்து கற்பனையில் மிதந்தான்.

கொய்யா தோப்பில் இருவரும் பேசும் அந்த அற்புதக் காட்சியை தூரத்தில் ஒரு மரத்தின் பின்னாடியில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த சாருபா அங்கிருந்து அவசரமாக தன் வீட்டிற்கு ஓடினாள்.

”அடப்பாவி வெற்றி, நீ கெட்ட கேட்டுக்கு என் அக்கா கிடைச்சாளா. இத்தனை நாளும் எனக்கு இது தெரியாம போச்சே, எப்ப பார்த்தாலும் அக்கா தனியா கோயிலுக்கு போறப்பவே நினைச்சேன். அக்கா எதையோ மறைக்கறாள்னு அது நீதானா, அப்பாட்ட சொல்லி இன்னிக்கே உன் காதலுக்கு மூடுவிழா செய்றேன் அப்பா பேச்சுக்கு அக்கா என்னிக்குமே எதிர்த்து பேசினதில்லை அது தெரியாம அவளை நம்பியா நீ காதல் செய்ற பார்த்துக்கறேன் உன்னை” என மனதில் நினைத்துக் கொண்டு தந்தையிடம் வெற்றி மற்றும் சுஹாசினியின் காதல் விவகாரத்தை போட்டு உடைத்தாள்.

1 மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்த சுஹாசினியோ அங்கு தன் தந்தை கோபமாக இருப்பதைக் கண்டு திகைத்தாள்

”எங்கம்மா போயிருந்த” என அவர் கேட்க

”அப்பா அது காலேஜ்ல ப்ராஜெக்ட் இருக்கு, அதான் வாழையை பத்தி க்ளாஸ் எடுக்க தேவையான விவரங்களை சேகரிக்க நிலத்துக்குப் போயிருந்தேன்”

“யாரோட நிலத்துக்கு”

“மாணிக்கங்கறவரோட நிலத்துக்கு”

”மாணிக்கத்தை பார்க்கப் போனியா இல்லை வெற்றியை பார்க்கப் போனியா”

“அவருக்காகத்தான் போனேன் ஆனா அவர் இல்ல வெற்றியிருந்தாரு அதான் அவர்கிட்ட வாழையை பத்தி தகவல்கள் கேட்டுகிட்டு வந்தேன்” என சொல்ல அவரோ கோபமாக அவளது கன்னத்தில் பளார் என ஒரு அறை விடவே கண்கள் கலங்க தூரமாக நின்று அழுதுக் கொண்டிருந்தாள்

”சே என் பொண்ணா நீ, என்னை இப்படி அசிங்கப்படுத்திட்டியே தோப்புல நீயும் அவனும் செய்றத சாருபா பார்த்துட்டு வந்து சொன்னா அசிங்கமாயில்லை உனக்கு, என்ன குறை வைச்சேன் உனக்கு போயும் போயும் அவன்தானா கிடைச்சானா”

“அப்பா அவர் நல்லவருப்பா”

“சீ நிறுத்து அவன் நல்லவனாவே இருக்கட்டும் ஆனா, நான் உனக்கு எப்படியாப்பட்ட மாப்பிள்ளைகளை பார்க்கறேன் தெரியும்ல, அரசாங்க வேலையா, பேங்க் மேனேஜரா, சென்ட்ரல்ல வேலை செய்றவனா அப்படி இப்படின்னு தேடி தேடி நான் வரன்களை பார்க்கறேன், நீ என்னடான்னா காதல் கீதல்ன்னு அலையற, உன்னை விட சின்னவ சாரு நீ செய்றதை பார்த்து அவள் கெட்டுப் போகமாட்டாளா, அவளும் எவன் கூடவாவது இப்படி நடந்துக்கிட்டா அதுக்கு காரணம் நீன்னு சொன்னா என்ன செய்வ சொல்லு”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
# RE: சிறுகதை - செந்தமிழ் நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள் - சசிரேகாsasi 2018-11-05 22:05
Quoting Joice:
I hate this climax...hw it s possible....she has to think...i hate it

:cool: ya
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - செந்தமிழ் நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள் - சசிரேகாJoice 2018-11-04 21:51
I hate this climax...hw it s possible....she has to think...i hate it
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - செந்தமிழ் நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள் - சசிரேகாDeepthi93 2018-11-04 19:02
Haiyoo en indha series lam sogamave iruku.. vetri pavamla ... malli ku ena achu .. waiting to knw more
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - செந்தமிழ் நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள் - சசிரேகாsasi 2018-11-05 22:06
Quoting Deepthi93:
Haiyoo en indha series lam sogamave iruku.. vetri pavamla ... malli ku ena achu .. waiting to knw more

:cool: ma
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top