Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுத் தொடர் - மல்லி - 10 - அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி - சசிரேகா - 5.0 out of 5 based on 1 vote
Pin It

சிறுத் தொடர் - மல்லி - 10 - அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி - சசிரேகா

Flower

நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்” என ஒரு பெண் சேலை அணிந்து தோளில் ஹாண்ட் பேக் மற்றும் கையில் ஒரு புத்தகத்துடன் கோபமாக மல்லிகார்ஜுனனின் பூக்கடையின் முன் நின்றாள் அவள்.

அவளைக் கண்டதும் ஒன்றும் புரியாமல் அக்கம் பக்கம் சுற்றி முற்றி பார்த்துவிட்டு சந்தேகத்துடனே

”என்கிட்டயா பேசறீங்க” என்றான் குழப்பமுடன் மல்லி

”இங்க என்ன 100 பேரா இருக்காங்க நீங்க மட்டும்தானே இருக்கீங்க அப்புறம் என்ன கேள்வி இது” என அவள் காட்டமாக பேச அவனுக்கு கஷ்டமாகி போனது

”யார் நீங்க உங்களை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததில்லையே எதுக்காக இப்படி கோபமா பேசறீங்க” என அவளை அமைதியாக்க முயற்சி செய்தான் ஆனால் வந்தவளோ

“உங்களுக்கு சித்ராவை தெரியுமா”

“எந்த சித்ரா பாட்டு பாடறாங்களே அவங்களா”

“ஞாபகம் இல்லையா உங்க கன்னத்தில ஒருத்தி அறைஞ்சாளே அந்த சித்ரா” என சொல்ல அவனுக்கு புரிந்துவிட்டது

”ஓ நீங்க அவளோட ப்ரெண்டா”

“இல்லை நான் அவளோட லெக்சரர்”

“அப்படின்னா?”

“பாடம் எடுக்கறவ”

“ஓ டீச்சரம்மாவா சரி சொல்லுங்க என்ன விசயம்”

“இங்கயே பேசலாமா இல்லை தனியா வர்றீங்களா”

“ஏன் இங்கயே பேசுங்களேன் தப்பு எதுவும் நான் செய்யலையே அப்புறம் என்ன விசயம் பேசுங்க” என மல்லி அவளையே பார்த்தான் அவளோ

”உங்களால அந்த பொண்ணு சித்ரா ரொம்ப டிஸ்டர்ப் ஆயிட்டா அவளால சரியா படிக்க முடியலை இந்த முறை நடந்த கடைசி வருட பரிட்சையில அவள் பெயில் ஆயிட்டா அந்த காலேஜ்லயே அவள்தான் டாப்பர் தெரியுமா” என அவள் கோபமாக கத்த அவனோ அக்கம் பக்கம் பார்த்துவிட்டு

”கத்தாதீங்க டீச்சர் வாங்க அப்படி வாங்க தனியா பேசலாம்”

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஓ மானம் போகுதுன்னு பயமா”

“எனக்கென்னங்க இதுல அவமானம் தப்பு பண்ணது சித்ராதான் பாம்புக் கடியிலிருந்து காப்பாத்தினவனை தப்பானவனா நினைச்சி தப்பா புரிஞ்சிக்கிட்டு அடிச்சது அவள் தப்பு”

“சரி ஏதோ தெரியாத்தனமா அடிச்சிட்டா அதுக்கு அவளை தண்டிக்கலாமா”

“நானா நான் என்ன செஞ்சேன்”

“அவள் சொன்ன மன்னிப்பை நீங்க ஏத்துக்கலையே”

“இதுவரைக்கும் என் அம்மா கூட என்னை அடிச்சதில்லை தெரியுமா”

“அவளும் இதுவரைக்கும் யாரையும் அடிச்சதில்லை தெரியுமா”

“தப்பு பண்ணாம நான் ஏன் அடிவாங்கனும்”

“அந்த சமயத்தில நடந்தது வெறும் விபத்துதான் நீங்க பாம்பு பிடிக்க வந்ததா அவள் நினைக்கலை அதனால தெரியாம அடிச்சிட்டா”

“அதையேதான் நானும் கேட்கறேன் நான் என்ன கெட்டவனா அந்த சமயத்தில ஒரு பொண்ணுகிட்ட நெருங்கி போனது தப்பான எண்ணத்தோடதான்னு நினைக்கறாளே அதுக்கு என்ன அர்த்தம்?”

“அதெல்லாம் தெரியாது இப்ப அவளை மன்னிக்க முடியுமா முடியாதா” என கோபமாக கத்த

“சரி சரி கத்தாதீங்க நான் மன்னிக்கிறதால இப்ப என்னாயிடும்”

“அவள் அரியர் எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணுவா”

“ஓ அப்படியா சரி நான் அவளை மன்னிச்சிட்டேன் போதுமா போங்க அவள்ட்ட போய் இந்த விசயத்தை சொல்லுங்க டீச்சர்”

“நீங்களே நேர்ல வந்து சொல்லுங்க அவள் காலேஜ்லதான் இருக்கா பெயில் ஆனதை நினைச்சி அழுதுக்கிட்டு இருந்தா நான் அவள்ட்ட என்ன ஏதுன்னு விசாரிச்சேன் அப்பதான் உங்களை பத்தி சொன்னா பாவம் நல்லா படிக்கற பொண்ணு தப்பா நினைச்சி உங்களை அடிச்சிட்டோம்னு ரொம்ப ஃபீலாயிட்டா அவளை சமாதானம் பண்ணனும் அதுக்கு நீங்க வேணும்”

“அதுக்கு மட்டும்தான் நான் வேணுமா” என அவன் கிண்டலாக கேட்க

”வேற என்ன இருக்கு உங்க கிட்ட”

“ஏன் இல்லை முல்லை இருக்கு ஜாதி முல்லை இருக்கு ரோஜா இருக்கு மல்லி இருக்கு அய்யோ என்னை இல்லைங்க மல்லிப்பூ இருக்குன்னு சொன்னேன். பூ வைக்கற பழக்கமில்லையா“

”கொண்டை போட்டிருக்கேன் எப்படி பூ வைப்பாங்களாம்”

“டீச்சரா இருக்கறவங்க கொண்டையோடதான் இருக்கனும்னு சட்டம் இருக்கா என்ன பள்ளிக்கூட டீச்சர்ங்கதான் கொண்டை போட்டுக்கிட்டு கையில பையும் குடையும் வைச்சிருப்பாங்க நீங்க பெரிய கல்லூரி டீச்சராச்சே நீங்க எதுக்கு கொண்டை போடறீங்க” என அவன் கேட்க அவளுக்கு வெறுப்பே வந்தது

Add comment

Comments  
# niceinfanto 2018-11-10 17:13
mam, nanum oru 2 masama neenga malliku jodi senthu vaipinga nenikiran neenga panave matringa,,, unmaya solanumna ethirparpu poi verupu tha varuthu


mathapadi nala story,
Reply | Reply with quote | Quote
# RE: nicesasi 2018-11-10 19:09
Quoting infanto:
mam, nanum oru 2 masama neenga malliku jodi senthu vaipinga nenikiran neenga panave matringa,,, unmaya solanumna ethirparpu poi verupu tha varuthu


mathapadi nala story,

sorry pls :cool:
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி - சசிரேகாவைத்தியநாதன் 2018-11-05 12:29
பேய்பிடிச்சிருக்கு, பிசாசு பிடிச்சிருக்கு, கேள்விப்பட்டிருக்கேன், மல்லியையைம்வெற்றியையைம்பிடிச்ச கதாசிரியரை இப்பத்தான் பார்க்கிறேன்!
தாங்கும்போதுகூட எழுதுவீங்களோ!
கண் படப் போகுதம்மா, வாழ்த்துக்கள்!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி - சசிரேகாsasi 2018-11-05 22:01
Quoting வைத்தியநாதன்:
பேய்பிடிச்சிருக்கு, பிசாசு பிடிச்சிருக்கு, கேள்விப்பட்டிருக்கேன், மல்லியையைம்வெற்றியையைம்பிடிச்ச கதாசிரியரை இப்பத்தான் பார்க்கிறேன்!
தாங்கும்போதுகூட எழுதுவீங்களோ!
கண் படப் போகுதம்மா, வாழ்த்துக்கள்!

நன்றி சார்
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top