(Reading time: 15 - 30 minutes)

2018 - தீபாவளி சிறப்பு சிறுகதை - நீ காற்று... நான் மரம்... - பிந்து வினோத்

love

மாலை நேரத்து மெல்லிய ஒளியில் ‘அரவிந்த் கார்ப்பரேட் ட்ரெய்னிங் சொல்யுஷன்ஸ்’ என்ற பெயர் அந்த சிறிய கட்டிடத்தின் வாசலில் இருந்த பெரிய ஃப்ளெக்ஸ் போர்டில் பளிச்சிட்டு கொண்டிருந்தது.

கட்டிடத்தின் உள்ளே, சீராக இயங்கும் அலுவலகம் என்பதை பறை சாற்றும் விதமாக வரவேற்பறை எளிமையாக ஆனால் நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டிருந்தது.

ஆங்காங்கே இருந்த அறைகளில் இருந்து வெளி வந்த மெல்லிய ஓசைகள் வகுப்புகள் நடந்துக் கொண்டிருப்பதை சொல்லாமல் சொன்னது.

‘சாந்தி’ என்று தங்க நிறத்தில் பெயர் பொறிக்கப் பட்டிருந்த கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தாள் சஞ்சனா.

கையிலிருந்த ஃபைலை தன் டேபிளின் மீது கோபமாக போட்டவள், பக்கத்து டேபிளில் மும்முரமாக வேலையில் ஈடுப்பட்டிருந்த அகல்யாவிடம்,

“கடுப்பா வருது அகல்....” என்றாள்.

“ஏன்ப்பா?” அக்கறையாக விசாரித்தாள் அகல்யா.

“திரும்ப நம்ம ஹீரோ ஹீரோயின் நடுவே சண்டை போலிருக்கு...”

“யாரு சாந்தி மேடமும், அரவிந்த் சாருமா?”

“ம்ம்ம்... வேற யாரு இங்கே ஹீரோ, ஹீரோயின்?”

“அவங்க ரெண்டு பேரு நடுவே சண்டைன்னு உனக்கு எப்படி தெரியும்?”

“நான் அங்கே இருந்த டைம்லேயே ஒரு பத்து தடவை அவர் போன் செய்தார்... மேடம் போனை எடுக்காம கட் செய்துட்டே இருந்தாங்க...”

“வேற யாரவது கால் செய்திருபபங்க...”

“இல்ல அகல், அரவிந்த் சாருக்காக மேடம் தனி ரிங் டோன் வச்சிருக்காங்க...”

”அட ஆமாம்... எனக்கும் தெரியுமே...”

“அதே தான்... பொதுவா ஆபிஸ் டைம்ல அரவிந்த் சார் போன் செய்ய மாட்டார்... அப்படி செய்தார்னா கட்டாயம் அவர் ஏதாவது மேடம் கோபப் படுற மாதிரி செய்து இருக்கார்ன்னு அர்த்தம்....”

“ஹ்ம்ம்ம்....”

“எப்போ பாரு இப்படி ஏதாவது செய்ய வேண்டியது... அப்புறம் இப்படி கால் செய்து, செய்து சாரி சொல்ல வேண்டியது... இதே தான் திரும்ப, திரும்ப செய்றார்... மேடம் ஏன் தான் இதை அக்சப்ட் செய்துக்குறாங்கன்னு தெரியலை... அவங்களுக்கு கல்யாணம் ஆகி இந்த ஆபிஸை அவங்க பார்த்துக்க ஆரம்பிச்ச நாள்ல இருந்து நானும் பார்க்குறேன்... இதே தான் நடக்குது... ஒரு சேஞ்சும் இல்லை...”

திடீரென அலறிய தொலைப்பேசி, அவர்கள் இருவரின் உரையாடலை தற்காலமாக நிறுத்தியது...!

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஞ்சனா, அகல்யா பேச்சில் இருந்த ‘ஹீரோயின்’ சாந்தி தன்னுடைய பெரிய ரோலிங் சேரில் அமர்ந்த படி மொபைல் போனில் அரவிந்திடம் இருந்து வந்திருந்த மெசெஜுகளை படித்துக் கொண்டிருந்தாள்...

நடு நடுவே கணவனிடம் இருந்து வந்த அழைப்புகளை ஏற்காமல் ம்யூட் செய்து விட்டு, மெசெஜுகளை மட்டும் படித்தாள்...

ஒவ்வொரு மெசெஜிலும் சாரி செல்லம், வெல்லம், என செல்லம் கொஞ்சி இருந்தான் அரவிந்த்...

இதே வேலை என்ற எண்ணத்துடன், கடைசியாக இருந்த சில மெசெஜுகளை படிக்காமல், போனை மேஜை மீது வைத்தவளுக்கு அது என்னவோ மனதில் இருந்த கோபம் குறைந்து தான் போயிருந்தது...

அரவிந்தின் இந்த மாதிரியான செல்லம் கொஞ்சல்களின் ஸ்பெஷல் எஃபக்ட் அது என்பது அவளுக்கு தெரியும்...

பொதுவாக தீபாவளியை அரவிந்தின் அக்கா ஆனந்தியின் குடும்பத்துடன் கொண்டாடுவதை அவர்கள் இருவரும் வழக்கமாக்கி கொண்டிருந்தார்கள்....

இந்த ஆண்டும் அதே திட்டம் தான்... ஆனால் ஆனந்தி வீட்டிற்கு கிளம்புவதற்கு முன் இந்த வருடம் தீபாவளிக்காக சில, பல திட்டங்களை அவள் யோசித்து வைத்திருந்தாள்...

இருவருமாக சேர்ந்து சென்று ஜவுளிக் கடையில் உடைகள் தேர்வு செய்வதில் ஆரம்பித்து ஒன்றாக ஸ்பெஷல் பலகாரம் செய்வது வரை ஆசையாக பல பல கோட்டைகள் கட்டி வைத்திருந்தாள்...

பல நாட்களுக்கு முன்பே அரவிந்திடம் அதை பற்றி சொல்லியும் இருந்தாள்...

கடைசி வாரத்தில் எல்லாம் செய்யலாம், செய்யலாம் என சொல்லிக் கொண்டிருந்தவன், சொல்லி வைத்தது போல அந்த நேரத்தில் பிஸியாகி போயிருந்தான்...

எப்போதும் லேப்டாப் அல்லது பிஸ்னஸ் போன் கால் என மொபைலுடன் அவன் உலவ சாந்திக்கு ஏமாற்றமாக இருந்தது...

இன்னும் ஒரு நாளில் ஃப்ரீயாகி விடுவேன்... இன்னும் ஒரே ஒரு நாள்... என்று சொல்லி, சொல்லி.... தீபாவளிக்கு முன் நாளும் வந்து சேர்ந்திருந்தது...

ஏமாற்றமும் கோபமுமாக அன்று காலையில் அவனிடம் கேட்டால்,

“வில் யூ ப்ளீஸ் ஷட் அப்!” என்று அவளிடம் எரிந்து விழுந்து விட்டு அலுவலகம் கிளம்பி சென்றிருந்தான்...

அவனிடம் இருந்து வரும் பல பல, அழைப்புகள் + மெசேஜ்கள் வைத்து பார்த்தால் சாருக்கு ஞானோதயம் பிறந்து விட்டது போலும்... என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டாள்...

மீண்டும் மொபைலை கையில் எடுத்து பார்த்தாள்...

புதிதாக அழைப்புகளோ, மெசெஜூகளோ வரவில்லை என்பது புரியவும், யோசனையுடன் கடிகாரத்தை பார்த்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.