(Reading time: 15 - 30 minutes)

“ஓ...!!! என் கிட்ட சொல்லி இருக்கலாமே...?”

“சொல்லனும்னு தான் இருந்தேன்... ஆனா டைம் கிடைக்கலை... சாரி டா...”

“இட்ஸ் ஓகே... எனக்கு எதுக்கு இத்தனை சாரி... ஆனால் இப்படி கோபப் படாதீங்க அரவிந்த்... எனக்கு கஷ்டமா இருந்துச்சு... அப்படி என்ன தான் உங்களுக்கு கோபமோ...”

“எல்லாம் உன் கோபத்தை விட கம்மி தான்...”

சாந்தி அவன் பக்கமாக திரும்பி பார்த்து முறைத்தாள்....

“உண்மையை சொல்றதுக்கு முறைச்சா நான் என்ன செய்ய?”

“எது உண்மை? நான் எப்போ உங்களை மாதிரி கோபப்பட்டு கத்தினேன்?”

“அப்படி திட்டினா தான் பரவாயில்லையே... நான் எதையும் தாங்கும் இதயத்தோட தாங்கிப்பேனே... ஆனால், நீ சும்மா இருந்தே கடுப்பேத்துறவ ஆச்சே... எத்தனை தடவை கால் செய்தேன்... எத்தனை மெசேஜ் அனுப்பினேன்... ஒரு ரிப்ளை கொடுத்தீயா நீ???”

“அது...”

“கோபம் வந்தா திட்டு... இப்படி போன் அட்டென்ட் செய்யாம இருக்குறது, போனை ஸ்விட்ச் ஆப் செய்றது எல்லாம் வேண்டாம்... நீ கோபத்துல கால் அட்டென்ட் செய்யலைன்னு தெரியும்... இருந்தாலும் மனசுக்குள்ளே என்னவோ ஏதோன்னு ஒரு பயம் இருந்துட்டே இருந்துச்சு... எத்தனை தடவை உன் கிட்ட சொல்லி இருக்கேன்...”

“சாரி... நெக்ஸ்ட் டைம் இதுக்கு எல்லாம் காம்பன்செட் செய்ற மாதிரி கட்டாயம் உங்களை திரும்பி திட்டுறேன்... நல்லா திட்டுறேன்... ரொம்ப ரொம்ப நல்லா திட்டுறேன்.... ஓகேவா...”

ஆனந்தியின் வீடு இருந்த communityயின் பார்கிங்கில் காரை நிறுத்திய படி

“வாயாடி ஷான்ஸ்...!” என்றான் அரவிந்த்.

“பரவாயில்லை... இருந்துட்டு போறேன்... ஆனால் எனக்கு கடன் பிடிக்காது அரவிந்த்... என்னால உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை ஈடுக்கட்ட இப்போதைக்கு என்னோட சிம்பிள் ட்ரீட்மென்ட்...” என்றபடி அரவிந்தின் கன்னத்தில் அவசர முத்தம் ஒன்றை வைத்தாள் சாந்தி.

அரவிந்த் சீட் பெல்ட்டை எடுக்கும் முன் காரில் இருந்து இறங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் தான் அதை செய்தாள்...

ஆனால் அரவிந்த் அப்படி அவளை இறங்க அனுமதிக்கவில்லை... அவளின் கையை இறுக பற்றியவன், சீட்பெல்ட்டை எடுத்து விட்டு,

“எனக்கும் கடன் பிடிக்காது.... ஆனால் அதுக்காக டெம்ப்ரவரி காம்பன்சேஷனும் பிடிக்காது... கிளீன் கட் தான்...” என்றபடி மனைவியின் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டான்.

அவளை விடுவித்த போது அவளின் முகம் நிறம் மாறி இருந்த அழகை ரசித்தவன்,

“பேசாம அக்கா வீடு பிளானை கேன்சல் செஞ்சுட்டு, நம்ம வீட்டுக்கு போயிடுவோமா???” என்றான் சீண்டும் குரலில்.

“போதும் போதும் ஜொள்ளு விட்டது... வாங்க... அண்ணி வெயிட் செய்துட்டு இருப்பாங்க...” என்று சொல்லியபடி காரில் இருந்து இறங்கி பிளாஸ்டிக் கவர்களை கையில் எடுத்தாள் சாந்தி.

னந்தி, கோபி மட்டுமல்லாமல் அவர்களின் இரட்டை பிள்ளைகள் ராகுலும், ரோஹித்தும் கூட அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.

“அத்தை, அத்தை ..” என்று அவளிடம் செல்லம் கொஞ்சிய மழலைகளை மடியில் தூக்கி உட்கார வைத்து விட்டு, அனைவருக்காகவும் வாங்கி வந்தவற்றை எடுத்துக் கொடுத்தாள் சாந்தி.

ஆனந்தியும் அவள் அவர்களுக்காக வாங்கி வைத்திருந்தவற்றை கொடுக்க,

‘இது சுப்பர்’. இதை இங்கே வாங்கினேன்’ ‘இந்த கலர் கிடைக்கவில்லை’ எக்ஸட்ரா எக்ஸட்ரா பேச்சுக்களுடன் நேரம் இறக்கை கட்டிக் கொண்டு ஓடியது...

“எல்லா வேலையும் முடிச்சிட்டீயா ஆனந்தி...?” என்று சகோதரியிடம் கேட்டான் அரவிந்த்.

“என்னடா அக்கறையா விசாரிக்குற! இது சரியே இல்லையே!!!! என்ன விஷயம்ன்னு சொல்லு....”

“இல்லக்கா சாந்தி ரெண்டு பெறுமா சேர்ந்து ஏதாவது பலகாரம் செய்யலாம்னு சொல்லிட்டு இருந்தா.. எனக்கு டைமே கிடைக்கலை... அதான்...”

“குலாப் ஜாமுன் மட்டும் செய்யனும்... ஆனால் நீ வேண்டாம், நானும் சாந்தியும் செய்துக்குறோம்... நீ வந்தா ஒரு வேலையும் சரியா நடக்காது... அவளை எதையும் சரியா செய்ய விட மாட்ட...”

“அக்கா.... இதெல்லாம் சரியே இல்லைக்கா...”

“சரியில்லாமலே இருக்கட்டும்...! நீங்க இரண்டு பேரும் நமக்கு நாமேன்னு இருக்க இந்த ஜாலி பீரியட் தாண்டி, எங்களை மாதிரி நமக்கு ஒருவர் இல்ல இருவர் ஸ்டேஜுக்கு வாங்க, அப்போ உனக்கு ஹெல்ப் செய்றேன்...”

அரவிந்த் சாந்தி பக்கம் பார்த்து காதலும், குறும்புமாக கண் சிமிட்ட.... அவள் வெட்கம் மின்னும் புன்னகை ஒன்றை பதிலாக தந்து அவனின் தலையை கிறுகிறுக்க வைத்தாள்....

‘கம்’ போட்டு ஒட்டிவிட்டதை போல மனைவி பக்கம் இருந்து பார்வையை திருப்ப முடியாமல் அவளையே பார்த்து ரசித்தான் அரவிந்த்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.