Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுத் தொடர் - மல்லி - 11 - கொட்டும் அருவி போல சிரிப்பவள் - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

சிறுத் தொடர் - மல்லி - 11 - கொட்டும் அருவி போல சிரிப்பவள் - சசிரேகா

Flower

ல்லி டேய் மல்லி” என பூ மார்க்கெட்டில் பூக்களை கூடைகளில் வாங்கிக் கொண்டிருந்த மல்லிகார்ஜுனிடம் வந்தான் அவனது நண்பன் ராஜா

அவனின் கூக்குரலைக் கேட்டு இப்படி அப்படி என சுற்றி பார்த்து ஒரு வழியாக தூரத்தில் நின்று கையை ஆட்டிக் கொண்டிருந்த ராஜாவை கண்டதும் புன்முறுவலுடன் கையை ஆட்டிவிட்டு மல்லிகைப்பூ கூடைக்கான பணத்தை கடையில் இருந்த முதலாளியிடம் தந்துவிட்டு அந்த கூடையை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு ராஜாவிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான்

”என்ன மச்சி கூப்பிட்ட”

“உன்னை பஸ் ஸ்டான்ட்ல தேடினா நீ இங்க இருக்கியா”

“பூ வாங்க வந்தேன் சரி என்ன விசயம், உன் முகத்தில இன்னிக்கி காலையில பூத்த பூ மாதிரி மலர்ச்சியா இருக்கியே வீட்ல விசேஷமா” என கிண்டலாக கேட்ட மல்லியிடம் ராஜா

”நீ வேற ஏன்டா வீட்டை பத்திக் கேட்கற, நான் அதுக்காக உன்னை தேடி வரலை குற்றாலத்தில அருவியில நல்ல நீர்வரத்தாம் வர்றியா போய் குளிச்சிட்டு வரலாம்”

”வேலையிருக்குடா” என மல்லி சொல்ல

”அநியாயம் எப்பவுமே வெயில்ல நின்னு கஷ்டப்படற எனக்காக வரமாட்டியா”

“நீ மட்டுமா போற”

“இல்லை நம்ம பசங்க எல்லாரும்தான்”

“எப்படி எல்லாருக்கும் வேலையில்லையா”

”உனக்கு விசயம் தெரியாதா விலைவாசி உயர்வு காரணமா நாளையிலிருந்து 3 நாளைக்கு ஸ்ட்ரைக் பண்ணப் போறாங்களாம்”

”ஓ அப்ப என் வியாபாரம் நடக்காதா” என வருந்தினான் மல்லி

“உன்னோடது இல்லைஈ உனக்கென்ன கேடு நாங்கதான் காய்கறி சந்தைக்காரங்க பந்த் பண்றாங்களாம் அதான் அந்த 3 நாளும் வெட்டியா வீட்ல கிடக்கனும் ஒரு எட்டு குற்றாலம் எப்படியிருக்குன்னு பார்த்துட்டு வரலாம்னு நினைச்சோம் நீ வர்றியா நாளைக்கு காலையில 4 மணிக்கு கிளம்பறோம் வாயேன்”

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”உங்களுக்கு ஸ்ட்ரைக் எனக்கென்னடா இருக்கு என் வியாபாரம் என்னாகிறது”

“மச்சான் வருஷத்தில ஒரு 3 நாள் நீ லீவு எடுத்துக்கிட்டா ஒண்ணும் குறைஞ்சிட மாட்ட”

“அது முடியாது எனக்கு வேலை முக்கியம்”

“ஓ அப்படியா அன்னிக்கு ஒருத்தி வந்து கூப்பிட்டாள்னு பஸ் ஏறி போய் 2 நாள் கழிச்சி திரும்பி வந்தியே அப்ப மட்டும் உன் வேலை கெடலையா மச்சி” என வில்லங்கமாக சிரித்துக் கொண்டே கேட்க

”தப்பா பேசாத நான் போனது எதுக்குன்னு தெரியும்ல அவங்க காட்டுக்குள்ள தாழம்பூ பத்தி ஏதோ பாடம் படிக்க போனாங்க நான் துணைக்கு போனேன். பாம்பு கடியிலிருந்து தப்பிச்சி பொழச்சி வந்தது பெரிசு தெரியுமா, உசுரு கொடுத்து வேலை செஞ்சிட்டு வந்தா கேவலமா பேசலாமா நீ”

”சரி சரி நான் தப்பா பேசலை இப்ப நீ வர்றியா இல்லையா”

“விளையாடாத ராஜா, இப்பதான் கூடை முழுக்க பூவோட வரேன் இதை வைச்சி 3 நாள் பொழுது ஓடும் நான் வரலை” என சொல்லிய மல்லியை ஏற இறங்கப் பார்த்தான்

”எதுக்கு இந்த பார்வை” என மல்லி கேட்க அதற்கு அவனோ

“இல்லை ஒருவேளை வேற யாராவது ஒரு பொண்ணு வந்து உன்னை கூப்பிட்டிருந்தா மறுப்பு சொல்லாம வந்திருப்பல்ல”

“வேணாம் அடிவாங்காத, என்னைப் பத்தி தப்பா பேசாத இப்ப என்ன உனக்கு குற்றாலம் வரனும் அவ்ளோதானே இரு கூடையை மறுபடியும் கடையில கொடுத்துட்டு வரேன்”

”சூப்பர் மச்சி சீக்கிரமா வா ஊருக்கு போறதை பத்தி திட்டம் தீட்டலாம் நம்ம பசங்க எல்லாரும் காய்கறி மார்க்கெட் பின்னாடி இருக்கே குட்டிச்சுவரு அங்கதான் இருக்கானுங்க வா வா நான் இங்கயே இருக்கேன்” என சொல்ல மல்லியும் அவசரமாக பூக்கூடையுடன் எக்கடையில் பூக்களை வாங்கினானோ அதே கடையில் அதை தந்துவிட்டு பணத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு தன் நண்பன் ராஜாவிடம் வந்தான்.

அவனுடன் சேர்ந்து தன் நண்பர்களிடம் சென்றவன் அவர்கள் அமர்ந்திருந்த குட்டி சுவருக்கு பக்கத்தில் இருந்த பெரிய பாறாங்கல்லில் அமர்ந்துக் கொண்டான் மல்லி. அவன் வரவும் அவனது நண்பர்களில் ஒருவனான ரவி மல்லியிடம்

”மல்லி 3 நாள் தங்கனும் அதுக்கு ஏத்தமாதிரி 3 செட் வேட்டி லுங்கி சட்டை பனியன் மேற்படி சமாச்சாரம் எல்லாம் எடுத்துக்க” என சொல்ல மல்லியும்

”சரி எடுத்துக்கறேன் சாப்பாடு எப்படி யார் பணம் போடறா”

“நான் போடறேன்” என்றான் பாஸ்கர்

”உனக்கேது அவ்ளோ பணம்” என சந்தேகமாக கேட்டான் மல்லி

”முதலாளி பொண்ணு கொடுத்துவிட்டா”

“அவள் ஏண்டா உனக்கு தரனும்”

“உனக்கெதுக்கு இல்லை உனக்கெதுக்குன்னு கேட்கறேன் அவள் பிரியப்பட்டு தந்தா விடேன்” என பாஸ்கர் அலட்சியமாக சொல்ல மல்லியோ

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8  9 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
+1 # read belowinfanto 2018-11-15 15:24
engayo arambichi engayo mudiuthu, but padika nalla eruku mam, ethuku munadi vantha panakara ponungala malliku pudikala entha ponu matum pudikumah, neenga epathiku kathaiya mudika matinga... pola heeeeeeeeeeeeeeeeeeee
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுத் தொடர் - மல்லி - 06 - கொட்டும் அருவி போல சிரிப்பவள் - சசிரேகாராணி 2018-11-12 11:38
அருமையான கதை ஆனால் இதுதான் முடிவா இன்னும் உள்ளதா
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுத் தொடர் - மல்லி - 06 - கொட்டும் அருவி போல சிரிப்பவள் - சசிரேகாBujji 2018-11-12 11:37
good :clap:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top