Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Friends, Chillzee KiMo is all set to be released 👏👏! Please visit Chillzee KiMo website - www.kimo.chillzee.in to learn about the subscription plans and other details.

Friends, Chillzee KiMo is all set to be released 👏👏! Please visit Chillzee KiMo website - www.kimo.chillzee.in to learn about the subscription plans and other details.

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - மின்னுவதெல்லாம் பொன்னல்ல! - ரவை - 5.0 out of 5 based on 1 vote
Pin It

சிறுகதை - மின்னுவதெல்லாம் பொன்னல்ல! - ரவை

women

நிருபமா, கால்மேல் கால் போட்டவாறு, மிகுந்த கர்வமுடன், முன் வரிசையில் நடுநாயகமாக, காதில் வைரத்தோடு ஜொலிக்க, மூக்கிலும் வைரம் மின்ன, பல வண்ண அரிதாரம் பூசி, அழகுத் தேவதையாக அமர்ந்திருந்தாள்!

கல்யாண மண்டபத்தில், மணமக்களைவிட, விருந்தினரின் கவனத்தை அதிகமாக கவர்ந்தது, நிருபமா தான்!

அவளென்ன, சாதாரணமானவளா? பிரபல முன்னணி சினிமா டைரக்டர் ராஜனின் மனைவியாயிற்றே!

ராஜனுக்கு நாடு முழுவதும் புகழ்! குறிப்பாக, பெண்கள் மத்தியில் ராஜனுக்கு ஓகோ!, தெய்வமாகவே கருதினர். அவர் டைரக்ட் செய்து வெற்றி பெற்ற படங்களில் எல்லாம் பெண்களை தாயாகவும் தெய்வமாகவும் சித்தரித்திருப்பார். படத்தின் பெயரே, 'பெண்மை வெல்க', 'தாயே தெய்வம்', 'நீயும் ஒரு தாயின் மகன்தானே?' என்று பெண்ணினத்துக்கு பெருமை சேர்க்கும்!

ராஜனின் தயவு தேவைப்பட்ட நடிகர்களும், டெக்னீஷியன்களும், உதவி டைரக்டர்களும், நிருபமாவுக்கு கூஜா தூக்கினர்.

மணவீட்டார், நிருபமாவை உபசரிக்கவும், கவனித்துக்கொள்ளவும் தனியாக ஆட்களை நியமித்திருந்தனர். தெரிந்தவர், தெரியாதவர் யாவரும் முன்வரிசைக்கு வந்து அவளுக்கு வணக்கம் சொன்னார்கள்.

இளைஞர்களும், கன்னிப்பெண்களும் அவளுடன் செல்ஃபீ எடுத்துக்கொண்டனர்.

அந்த மண்டபமே, அவளை அரியாசனத்தில் அமர்த்தி ஆராதனை செய்தது!

எல்லாம் திடீரென ஒரே வினாடியில், தலைகீழாக மாறிப்போனது!

வந்திருந்தோரின் செல்ஃபோனில் வந்த வாட்ஸ்அப் மெஸேஜ்தான் அந்த மாற்றத்தின் காரணம்!

பிரபல முன்னணி நடிகைகள் நாலுபேர் தைரியமாக முன்வந்து ராஜன் பல ஆண்டுகளாக செய்துவரும் பாலியல் கொடுமைகளை நடுத்தெருவில் போட்டு உடைத்துவிட்டனர்!

அவர்களாக, இத்தனை காலம் கழிந்தபின், இதை இப்போது செய்வானேன்?

அந்தக் கல்லூரிப் பெண்ணின் தற்கொலை மூட்டிய தீ கொழுந்துவிட்டு எரிகையில், பத்திரிகையாளர்கள் தூண்டில் போட்டு மீனை சிக்கவைத்துவிட்டார்கள்!

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சினிமா மோகினியின் கண் அசைவில் சிக்காத இளம்பெண் உண்டா?

அப்படித்தான், அந்தக் கல்லூரி மாணவி சித்ராவும் சிக்கிக்கொண்டாள்!

அவள் பள்ளிக்கூட நாட்களிலிருந்து, மேடை நாடகங்களில் நடித்து சிறந்த நடிகையென பாராட்டப்பட்டவள். சமீபத்தில், அவள் படித்த கல்லூரியின் ஆண்டுவிழா நாடகத்திற்கு தலைமை தாங்க டைரக்டர் ராஜனை அழைத்திருந்தனர்.

அப்போதே, பச்சைக்கிளியின்மீது, அவருக்கு மோகம் பிறந்துவிட்டது.

திட்டம் போட்டார், தனது தலைமையுரையில், சித்ராவின் நடிப்பை அந்தக்கால முன்னணி நடிகை பத்மினியுடன் ஒப்பிட்டு தனது தனிப்பட்ட பரிசாக, சித்ராவுக்கு தனது அடுத்த படத்தில் கதாநாயகி வேடம் தரத் தயாராக உள்ளதாகவும் மேடையிலேயே அறிவித்தார்.

கேட்கவேண்டுமா, மாணவிகளின் குதூகலத்தையும், கொண்டாட்டத்தையும்!

சித்ரா கதாநாயகியாக அப்போதே உயர்ந்துவிட்டதுபோல், அவளைச்சுற்றி ஆட்டம் ஆடி, பாட்டுப் பாடி, சித்ராவை கற்பனைவானில் மிதக்கவைத்தனர்!

போதாக்குறைக்கு, அவள் பெற்றோரும் பித்தளையை சொர்ணமென நினைத்து மயங்கி, ஒண்டுக்குடித்தனத்திலிருந்து ஓ.எம்.ஆர்.சாலை பங்களாவுக்கு மாறி, கால்நடையிலிருந்து சொகுசுக்காருக்குத் தாவி, கோடிவீட்டு சித்ரா கோடீஸ்வரியாகிவிட்டதாக பூரித்துப்போயினர். அவர்களுக்கு, கூடுதலான மகிழ்ச்சி என்னவெனில், பெண்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் தருகிற ராஜன், தங்கள் மகளுக்கு உரிய பாதுகாப்பை தருவார் என்பதே!

ராஜன், சித்ராவைவிட வேகமாக, காய்களை நகர்த்தினார். அவருக்குத் தெரியாதா, இந்தமாதிரி எத்தனை பெண்களை வசப்படுத்தியிருக்கிறார்!

கல்லூரியிலிருந்து திரும்பியவுடனேயே, தயாரிப்பாளர் சோமுவுக்கும், கேமராமென் வின்செண்ட்டுக்கும் தனது திட்டத்தைக் கூறி அவர்களை தயார்ப்படுத்தினார்.

எதிர்பார்த்தபடி, நாடகம் துவங்கியது. ப்ரொடக்‌ஷன் ஆபீஸ்க்கு, பெற்றோருடன் வந்த சித்ராவுக்கு அமோக வரவேற்பு அளித்து, பெற்றோருக்கும் நாக்கில் தேன் தடவி, மூன்றுவருஷ காண்டிராக்டிலும் சித்ராவின் கையெழுத்தைப் பெற்று, அந்தக் குடும்பத்தையே கனவுலகில் மிதக்கவிட்டனர், ராஜனும் கூட்டாளிகளும்!

"சித்ரா! உனக்கும் உன் பெற்றோருக்கும் சில விஷயங்களை தெளிவுபடுத்துகிறேன். கவனமாக கேட்டு அதன்படி தவறாமல் கட்டுப்பட்டு நடந்துகொள்ளுங்கள்.

முதலாவது, முக்கியமானதும்கூட, நிபந்தனை, நமக்குள்ளே நடக்கிற எந்த விஷயமும் வெளியில் யாருக்கும் எந்தக் காரணத்துக்காகவும் தெரியக்கூடாது.

இரண்டாவது, மூன்றாண்டு காலத்தில், முதலாண்டு, சித்ராவுக்கு மாதாமாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் தருவோம். ஏன்னா, அவள் தொடர்ந்து படித்து பட்டம் வாங்கட்டும். இன்னும் ஒரு வருஷம்தானே!. இந்த சம்பளம் அவள் எங்க ஒப்பந்தத்தில் தொடர்ந்து இருப்பதை உறுதிப்படுத்தவே! படிப்பு முடிந்ததும், அவள் முழுநேரமும் எங்களுடன் பணியாற்ற வேண்டியிருக்கும். மீதமுள்ள இரண்டு ஆண்டுகளுக்கு, மாதம் பத்து லட்சம் தருவோம். அதாவது, ஒரு வருடத்துக்கு, ஒரு கோடியே இருபது லட்ச ரூபாய்!

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# Bravoinfanto 2018-11-17 09:29
mam,
no words can i say,,, awesome
Reply | Reply with quote | Quote
# RE: BravoRaVai 2018-12-01 19:13
thanks Infanto. sorry for the delay
Reply | Reply with quote | Quote
# MPAAruna 2018-11-11 18:09
Very nice story.... :-) Women's facing the same issue in day-to-day life... :angry: But the problem is there is no judgment for the person/accused... 3:) laws has to be changed and that person has to get the punishment :now:
Reply | Reply with quote | Quote
# RE: MPARaVai 2018-11-11 20:10
Aruna! thanks. such stories provoke discussion paving the way for the concerned to bring about new steps to protect the unfortunate!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top