Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>October 2018 Stars</strong></h3>

October 2018 Stars

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - காது கொடுத்து கேளுங்களேன்! - ரவை - 5.0 out of 5 based on 1 vote

சிறுகதை - காது கொடுத்து கேளுங்களேன்! - ரவை

women

யா! நீங்க பெரிய மனுஷங்க! நிறைய வேலையிருக்கும், இந்த ஏழை சொல்றதை கேட்க, நேரமிருக்காது! எனக்கு நல்லா புரியுது, ஆனா, நான் என் குறையைச் சொல்ல, வேற ஆள் யாருமில்லையே!

தயவுபண்ணி கொஞ்சம் காது கொடுத்து, என் குறையை கேளுங்களேன்!

மாம்பலத்திலே, காலையிலே, ஆறுமணிக்கு, வீட்டுவாசல் பெருக்கி, கோலம் போடணும்னா, மேற்கு தாம்பரத்திலே வசிக்கிற நான், வீட்டை விட்டு, எத்தனை மணிக்கு கிளம்பணும், கிளம்பறதுக்கு முன்னே, காலையிலே ஏறத்தாழ பத்துமணிக்கு பசிக்கு சாப்பிட பழைய சோறு கட்டியெடுத்துக்கணும், சேலை மாத்திக்கணுங்கிறதை கணக்குப் போட்டுப் பாருங்க, ....ஆமாங்க! விடியக்காலேல, நாலரை மணிக்கு தினமும் எந்திருச்சுவேன், அஞ்சு மணிக்கு கிளம்பி, ரயில் பிடிச்சு மாம்பலம் ஸ்டேஷனிலே இறங்கி, வேலை செய்கிற இடத்துக்கு ஓடிஓடி வந்து நுழைஞ்சி வாசல் பெருக்கி கோலம் ஆறுமணிக்கு போடணுன்னா, ஐயா! அப்பவே பாதி உசிரு போயிடுங்க!

நீங்க கேட்க நினைக்கிறது என்னன்னு, புரியுது! ஏன் வீட்டுக்கு பக்கத்திலேயே, வேலை பாத்துக்கலாமேன்னுதானே, ஏன் மாம்பலத்துக்கு வரணுன்னு கேக்கிறீங்களா? நான் வேலை செய்கிற இடத்திலே, ஒரு காம்பவுண்டுக்குள்ளே, இருபது ஃபிளாட் இருக்குங்க! அதிலே அஞ்சு ஃபிளாட்டிலே வீட்டுவேலை செய்கிறதோட, பொது இடத்தை பெருக்கிறதும், வாசல்லே கோலம் போடறதும் அசோஸியேஷன்லே தனியா சம்பளம் கொடுத்துடுவாங்க, இப்படி ஒரே இடத்திலே மாசம் மூவாயிரம் கிடைக்கிறதுன்னாலே, கஷ்டத்தை பாக்காம, ஓடி வந்துடுவேங்க!

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஐயா! நான் சொல்ல வர்றது, வேற சமாசாரங்க! நான் வேலை செய்கிற வீட்டு ஆம்பளைங்களும் பொம்பளைங்களும் கொஞ்ச நாளா ஒரு விஷயம் காரசாரமா பேசிக்கிறாங்க, அரைகுறையா காதிலே விழுதுங்க, அதிலே பாதிதான் விளங்குதுங்க, சொல்றேன், சரியா பாருங்க! இந்த சினிமாவிலே நடிக்கிற பொண்ணுங்களை, கூட நடிக்கிற ஆம்பளைங்களோ, சினிமா எடுக்கிற முதலாளியோ, தப்பா நடத்தறாங்க, படுக்க கூப்படறாங்கன்னு அந்த பொம்பளைங்களே, இப்பல்லாம் வெளிப்படையா சொல்லி, பிரசாரம் பண்றாங்களாமே, அதைப்பற்றி வீட்டுக்குள்ளே புருஷன், ஆம்பளைகளுக்கு சப்போர்ட்டாவும்,பெண்சாதி நடிகைக்கு சப்போர்ட்டாவும் சண்டை போட்டுக்கிறதை பார்க்கிறேன், ஐயா! உங்ககிட்ட ரகசியமா சொல்றேன், பத்துப் பாத்திரம் துலக்கி வீடு பெருக்கி துடைக்கிற, அழுக்கு சேலை கட்டியிருக்கிற, மொகத்திலே எண்ணைவடியற என்னையே இந்த ஆம்பளைங்க தொந்தரவு பண்றாங்களே, அதை வெளியிலே சொன்னா, வேலை போயிடும், சம்பளம் வராது, நானும் என் பிள்ளையும் வயத்திலே ஈரத்துணியை போட்டுக்கவேண்டியதுதான்.......

மொதல்லே, என் கதையை கேளுங்க! நீங்க எடுத்த எடுப்பிலே எதிர்பார்க்கிறது என்னன்னு, தெரியும்! என் அப்பா, அம்மா யாரு, கூடப்பொறந்தவங்க எத்தினி பேரு, எந்த ஊரு இதுதானே? இத்தினி கேள்விங்களிலே, ஒண்ணுக்குக்கூட, எனக்கு விடை தெரியாது!

ஆமாங்க, எனக்கு விவரம் தெரிஞ்ச நாளா நான் இருக்கறது, மேற்கு தாம்பரம் அனாதை இல்லம் தான்! என்னோட இருக்கற யாருக்குமே, இத்தினி கேள்விங்களுக்கு விடை தெரியாது! அனாதை இல்ல காப்பாளர் ஐயாதான் எனக்கு எல்லாம்!

வேளைக்கு சாப்பாடு, போட்டுக்க சட்டை, பாவாடை, அ,ஆவன்னா எழுத்துக்கூட்டிப் படிக்க படிப்பு எல்லாம் அவர் தயவிலேதான்!

பதினைஞ்சு வயசிருக்கும், ஒரு பெரிய மனுசன் காப்பகத்துக்கு வந்தாரு, போறப்ப, அவர் என்னை கூட்டிக்கிட்டு போயிட்டாரு!

காப்பாளர் ஐயா சொன்னாரு, "அவரு ரொம்ப நல்லவரு, அவர் வீட்டுவேலைக்காக உன்னை அழைச்சிகிட்டுப்போறாரு, நல்ல சாப்பாடு, துணிமணி எல்லாம் தருவாரு, உன்னை தன் மவளா பிரியமா நடத்துவாரு, உனக்கு பிடிக்கலேன்னா, இங்க எப்ப வேணுன்னாலும் திரும்பி வந்துடு!"ன்னு சொல்லி அனுப்பிச்சாரு.

அந்த ரொம்ப நல்லவரு, என்னை மவளா பார்த்துக்கலே, அதுக்கும் மேலா, பெண்சாதியாவே பார்த்து, என் வயத்துலே, ஒரு பிள்ளையை கொடுத்து, திருப்பி அனுப்பிட்டாரு!

என்னையும் எனக்குப் பொறந்ததையும் காப்பகம்தான் காப்பாத்துது!

காப்பகம் ஐயாவுக்கு தெரிஞ்சவர்தான், அசோஸியேஷன் தலைவரு! எனக்கு அஞ்சு வருசமா, வேலை கொடுத்து, மாசம் ஆயிரம் ரூபா சம்பளம் தராரு, அவர் வீட்டிலேயும் வேலை கொடுத்து, ஐநூறு ரூபாயும் தராரு.

அதைத் தவிர, மூணு வீட்லே செய்யறேன், காலைலே ஆறுமணிலேருந்து மதியம் மூணுமணி வரையிலும் வேலை பார்த்துட்டு, திரும்பிடுவேன், தினமும்.

ஐயா! நான் ஒரு அனாதைன்னு தெரிஞ்சு, வாட்ச்மென், ப்ளம்பர், லைட்வேலை பாக்குறவரு,கேஸ் சிலிண்டர் போடறவன், எல்லாம், நெருங்கி வந்து தொட்டுப் பேசுவாங்க! வீட்டுக்கு வரியான்னு கூப்பிடுவாங்க! அஞ்சோ, பத்தோ, ரூபா நோட்டை நீட்டுவாங்க, எனக்கு முன்னமேயே ஒரு அனுபவம் ஆயிட்டதுனாலே, நோட்டை தொடமாட்டேன், கன்னத்தை தடவுவாங்க, சினிமா பார்க்க கூப்பிடுவாங்க, ஒவ்வொரு நாளும் இவங்க பிடியிலேருந்து தப்பிச்சு போறது பெரும்பாடு!

ஐயா! நல்லா படிச்சவங்க, பொண்டாட்டி பிள்ளைங்களோட வாழறவங்க, வயசானவங்க, என்னை சீண்டறப்ப, ச்சே! மனுசங்களா இவங்கன்னு, காரித் துப்பத்தோணும், முடியுமா? அப்புறம், இந்த காம்பவுண்டுக்குள்ள நுழையமுடியுமா? 

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# arumaiinfanto 2018-11-17 10:30
thevaiyana nerathula theavaiyana karuthu,, unga katha samuthaya karuthoda eruku, super padikumbothe athoda depth ah purinjika mudiuthu super jii>>>
Reply | Reply with quote | Quote
# RE: arumaiRaVai 2018-12-01 19:06
sorry for the delay, Infanto!
தாங்கள் தரும் உற்சாகம் தெம்பாயிருக்கிறது.மிக்க நன்றி
Reply | Reply with quote | Quote
# காதுகொடுத்து......RaVai 2018-11-12 16:03
மின்மினிக்கும்அதர்வாஜோக்கும் மிக்க நன்றி
இந்த பிரச்னைக்கு தீர்வுகாணவே உங்கள்முன் வைத்திருக்கிறேன்.
Reply | Reply with quote | Quote
# Write moreMinmini 2018-11-12 03:51
Excellent! Write more!
You have a good talent and really true what you say in the story , no one can deny!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - காது கொடுத்து கேளுங்களேன்! - ரவைAdharvJo 2018-11-11 13:00
Its an extension of penmaiyai vanangu :yes: certainly everyone got the rights to voice up
for justice but how far it would be heard is my question :Q: wat is the step taken if they are heard..entha use-um illain thane neriyaperu avanga safety security kaga payandhu vazhuranga ?? When will women get freedom from this ??
Disgusting 3:) 3:)

Small note not all men at home are against the #me too # like wise not all women support it facepalm anyway let's see how far this me too would be successful :yes:

Well narrated Sir :clap: :clap: thank you.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

Poetry

Chillzee 2018 Stars

Valentines day

Announcements

Nee orumurai thaan vazhgiraai

En madiyil pootha malare

Jokes

Kaanum idamellam neeye

Chillzee Stars

Chillzee Contests

Chillzee Featured

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
10
EVUT

ST

NiNi
11
MMSV

PPPP

MAMN
12
GM

EMPM

KIEN
13
ISAK

KaNe

KPY
14
EU

Ame

-
15
VVUK

NKU

Tha
16
KI

-

-


Mor

AN

Eve
17
EVUT

PVOVN

NiNi
18
MINN

PPPP

MAMN
19
VD

EMPM

KIEN
20
VMKK

KaNe

KPY
21
Sush

UVME

Enn
22
VVUK

NKU

Tha
23
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top