(Reading time: 15 - 30 minutes)

பொதுவாகவே போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் நேரம்... இவன் வேறு போன் கால், மெசேஜ் என்று அனுப்பிக் கொண்டிருந்தானே...

விட மாட்டேன் என மனதில் கெட்டியாக ஒட்டிக் கொண்டிருந்த மிச்ச மீதி கோபத்தையும் அரவிந்த் மீதிருந்த அன்பு அசைக்க, அவசரமாக மொபைலில் அவனை அழைத்தாள்.

“ஹேய் ஷான்ஸ் டார்லிங்... கிளம்பிட்டீயா???” என்ற அரவிந்தின் காதல் நிறைந்த குரல் அவளின் செவிகளை நனைத்தது..

அவன் நலமாக இருக்கிறான் என்ற விஷயம் புரிந்த உடனே மனம் கூலாகி விட, மீண்டும் பழைய கோபத்தை முன்னே கொண்டு வந்தாள்...

“க்கும்...”

“கோபப் படாதே டார்லிங்... சீக்கிரம் கிளம்பி வா...”

கிளம்புவதை பற்றியே பேசுகிறானே... எங்கே இருக்கிறான்...???

கேள்வியுடன், “எங்கே இருக்கீங்க???” என்றுக் கேட்டாள் அவள்...

“நான் அனுப்பின மெசேஜ் படிக்கலையா???”

அவசரமாக அவனின் கடைசி மெசேஜை படித்தாள்...

“waiting in our usual place” என அனுப்பி இருந்தான் அரவிந்த்...

அவளின் அலுவலகத்தின் பக்கத்திலா இருக்கிறான்?

“இங்கே வந்துட்டீங்களா???”

“யெஸ்... வந்து டென் மினிட்ஸ் ஆச்சு... சீக்கிரம் வா...”

“இல்ல.. நான் வர லேட் ஆகும்...” வேண்டுமென்றே சொன்னாள் அவள்!

“ஓகே... நான் வெயிட் செய்றேன்... எனக்கு ரொம்ப பசிக்குது... ஆனாலும் என்ன செய்றது... நான் வெயிட் செய்றேன்...”

“ஷட் அப் அரவிந்த்...!”

“ஹேய் நான் வெயிட் செய்றேன்னு தானே சொன்னேன்...”

“ப்ச்...”

அவனும் வேண்டுமென்றே அவளை காப்பி அடித்து,

“ப்ச்....” என்றான்.

“சரி, சரி வரேன்....”

“தட்ஸ் மை ஷான்ஸ்... சீக்கிரம் வா...”

அவன் வந்து விட்டதற்காக கிளம்பினாலும், அவளுடைய கோபம் ஒன்றும் குறைந்து விடவில்லை! (அதானே!!!!)

இந்த தீபாவளி முழு நாளும் அவனுடன் பேசாமல் தான் இருக்க போகிறாள்...

‘ஸ்ட்ராங்காக’ முடிவு செய்து விட்டு வேக, வேகமாக கிளம்பினாள்...

ஆனாலும் மறக்காமல் கண்ணாடியை பார்த்து முகத்தையும், கேசத்தையும் சரி செய்து விட்டே கிளம்பினாள்...!

ர்ரென்ற முகத்துடன் காரில் ஏறி அமர்ந்தவள், அரவிந்த் அவள் பக்கம் பார்ப்பதை உணர்ந்தாலும் கண்டுக் கொள்ளாமல் இருந்தாள்.

“ஹப்பா... என்ன கோபம்...! இப்படி கோபப் படும் போது நீ எவ்வளோ அழகா இருக்க தெரியுமா???”

“ப்ளீஸ்.... இந்த ப்ளாக் & வைட் கால டையலாக்கை சொல்லி போர் அடிக்காதீங்க...”

“ஓகே... லேட்டஸ்ட் டையலாக்னா...”

“நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்... வாயை மூடிட்டு அண்ணி வீட்டுக்கு வண்டியை ஓட்டுங்க...”

“அக்கா வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி நாம ட்ரெஸ் பர்சேஸ் எல்லாம் பண்ணனுமே...”

“அதெல்லாம் நானே வாங்கிட்டேன்...”

“எல்லோருக்கும் வாங்கிட்டீயா???”

“ம்ம்ம்...”

“எனக்கு?”

அவனை பார்த்து முறைத்து விட்டு,

“ம்ம்ம்ம்...” என்றாள்.

“உனக்கு?”

பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

“ஷான்ஸ், எத்தனை தடவை சொல்லி இருக்கேன்...”

“இங்கே பாருங்க... ப்ளேட் போடாம காரை ஸ்டார்ட் செய்ங்க... போற வழில உங்களுக்கு சிம்பிளா ஸ்நாக்ஸ் வாங்கிக்கலாம்...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.