(Reading time: 15 - 30 minutes)

இதை கவனித்த ஆனந்தி,

“அச்சச்சோ... டூ மச் லவ் சீன், நல்லதில்லை... இங்கேயே கட் செய்திருவோம்... வா வா சாந்தி... நாம வேலையை ஆரம்பிப்போம்... இவங்க இரண்டு பேரும் பசங்களை பார்த்துக்கட்டும்...” என்று சாந்தியை கையை பிடித்து அழைத்து சென்றாள்.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ரவிந்த் கார்ப்பரேட் ட்ரெய்னிங் சொல்யுஷன்ஸ் என்ற பெயர் பலகையை, அதில் இருந்த கணவனின் பெயரை பார்த்து ரசித்த படி அலுவலகத்தினுள் நுழைந்த சாந்தி, அவளின் கண்ணில் பட்ட அகல்யா மற்றும் சஞ்சனாவிற்கு ‘குட் மார்னிங்’ சொல்லி விட்டு தன் அறையினுள் சென்றாள்.

இங்கே சஞ்சனா, அகல்யாவிடம்,

“பார்த்தீயா நான் சொன்னேனா, இல்லையா... சாந்தி மேடம் ஏன் திரும்ப திரும்ப விட்டுக் கொடுக்கனும்? அதென்ன அது ஹஸ்பன்ட்னா வைஃபை ஹர்ட் செய்யலாம், வைஃப் அதை எல்லாம் மன்னிச்சு விட்ருனுமா??” என்று மீண்டும் அவர்களின் பழைய டாப்பிக்கை ஆரம்பித்தாள்...

“அவங்களுக்குள்ளே என்ன நடந்திச்சுன்னு நமக்கு முழுசா தெரியாதுல சஞ்சு...”

“தப்பு செய்யலைனா அரவிந்த் சார் ஏன் அத்தனை தடவை கால் செய்றார், மெசேஜ் அனுப்புறார்....”

“ம்ம்ம்... அது என்னவோ உண்மை தான்...”

“அதும் இல்லாம அன்னைக்கு மேடம் முகம் எப்படி டல்லா இருந்துச்சு...”

“ஆனால் இன்னைக்கு எப்படி ப்ரைட்டா இருக்காங்க பார்த்தல்ல...”

“அதை தான்ப்பா சொல்றேன்... அதென்ன அது கல்யாணத்துக்கு அப்புறம் ஹஸ்பன்டை டிபன்ட் செய்தே பொண்ணுங்க எல்லாத்தையும் செய்றது???”

அகல்யாவிடம் ஓரு ஃபைலை கேட்பதற்காக வந்த சாந்தியின் காதில் அவர்களின் பேச்சு முழுவதுமாகவே விழுந்தது...!

அவள் இதழ்களில் தானாகவே புன்னகை ஒன்று தோன்றியது...

அமைதியாக தன்னுடைய அறைக்கு திரும்பியவள் தன் நாற்காலியில் அமர்ந்து சுழன்ற படி அவர்கள் இருவரும் பேசியதை பற்றி யோசித்தாள்....

சில விஷயங்களை வார்த்தைகளால் சொல்லி விளக்குவது கடினம்... உணர்ந்தால் மட்டுமே புரிந்துக் கொள்ள முடியும்...

கணவன் மனைவி எனும் ஆழமான, புனிதமான உறவும் அப்படி தான்...

கணவன் இப்படி தான் இருக்க வேண்டும்... மனைவி இப்படி தான் இருக்க வேண்டும் என்று யாராலுமே வரையறைகள் வகுக்க முடியாது...

அப்படி பட்ட சட்டத் திட்டங்களுக்கு அப்பாற்ப்பட்ட உறவு இது...

கணவனை பற்றி மனைவிக்கும், மனைவியை பற்றி கணவனுக்கும் தனிப்பட்ட புரிதலும், ஆழமான அன்பும், உண்மையான அக்கறையும், நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே விருட்சமாய் வளரக் கூடிய உறவு...

அப்படி இல்லாமல் ஈகோ, அகந்தை, இறுமாப்பு, பிடிவாதம், பேராசை, ஏமாற்று என்று இருக்கும் உறவுகள் பட்டு போகின்றன...

இது எல்லாமே ஒவ்வொரு ஜோடிக்கும் மாறுப்பட தான் செய்யும்... Compare and contrast செய்து எல்லாம் விளக்கம் சொல்ல முடியாது...

அகல்யா, சஞ்சனா பற்றி யோசித்தவள்.... அவர்களின் திருமணத்திற்கு பின் இதை எல்லாம் அவர்களே புரிந்துக் கொள்வார்கள் என்று முடிவு செய்தாள்...

கணவனின் நினைவில் மனதில் வந்திருந்த நெகிழ்ச்சி அப்படியே இருக்க.... மொபைலை எடுத்து, ‘ I love you da’ என்ற மெசேஜை அவனுக்கு அனுப்பி வைத்தாள்!

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் பிரென்ட்ஸ் :-)

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.