Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - நகலாக வாழாதீர்! - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Pin It

சிறுகதை - நகலாக வாழாதீர்! - ரவை

dont-conform

"தாமரை! உன்னிடம் கொஞ்சம் பேசணும்............."

" கொஞ்சமென்ன, நிறையவே பேசு, நாளைக்கு, ஆபீஸ் நேரத்திலே! இப்ப எனக்கு வீட்டுக்குப் போகணும்......."

" இது, ஆபீஸிலே பேசற விஷயமில்லே, பர்சனல்! தனிப்பட்ட முறையிலே ......."

" ப்ளீஸ்! எனக்கு போரடிச்சுப்போச்சு! உன்னோட சேர்த்து ஐந்தாவது பேர், 'ஐ லவ் யூ' சொல்றது!"

" தாமரை! நீ என்னை தப்பா புரிஞ்சிண்டிருக்கே! இது வேற விஷயம்!"

" அப்ப ஒண்ணு பண்ணு! என்னோட என் வீட்டுக்கு வா! காபி தரேன், குடிச்சிட்டு நிதானமா பேசு! சரியா?"

" சரியில்லை! இது லவ் மேட்டர் இல்லைன்னாலும், தனியா உன்னிடம் மட்டும் பேசவேண்டிய விஷயம்! ப்ளீஸ்!"

" ஓ.கே. இன்னிக்கி நேரமில்லே, நாளைக்கு வீட்டிலே சொல்லிட்டு வரேன், லேட்டாகும்னு! நாம பீச்சிலே காற்று வாங்கிண்டு நிதானமா பேசலாம். பை!"

தாமரை போய்விட்டாள்!

கதிரவன் சிரித்துக்கொண்டான். பிள்ளையார் சுழி போட்டாச்சு, அடிமேல் அடி அடித்தா, அம்மியும் நகரும்! தாமரை மலராதா?

வீடு போகும் வழியெல்லாம், தாமரை மனம் அலை பாய்ந்தது! லவ் இல்லேங்கறான், வேற என்னவா இருக்கும்? தலை வலித்ததே தவிர, புரியவில்லை!

இருவரும் ஒரே ஆபீஸில் மூன்று வருஷமாக வேலை பார்க்கிறார்கள். ஒரே செக்‌ஷன்! 

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவன் வறுமை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலையில் சேர்ந்ததாக அவனே சொல்லியிருக்கிறான். நடுத்தர வர்க்கம். அவன் அப்பா ரிடையரானபிறகு, வருமானம் கணிசமாக குறைந்ததால், வீட்டுச் செலவுக்கு பணம் தேவைப்பட்டதால், வேலைக்கு வந்தவன்!

கெட்டிக்காரன்! விளையாட்டு வீரன்! எல்லோருக்கும் பரிச்சயமானவன்! வேலையிலும் திறமைசாலி! விரைவிலே பதவி உயர்வு கிடைத்துவிடும்.

அவனை காதலிப்பதில் ஏதும் தரக் குறைவில்லை! ஆனால், தாமரைக்கு இந்த காதல், கத்திரிக்காய் என்பதில் நம்பிக்கை கிடையாது.

தலைமுறை தலைமுறையாக பெரியவங்க செய்ததையே செய்துகொண்டு செக்குமாடுமாதிரி, சுற்றிச் சுற்றி வருவதில் தாமரைக்கு பிரியமில்லை!

கலாசாரம், பாரம்பரியம், என்று காலத்துக்குப் பொருந்தாத பழக்க வழக்கங்களை பின்பற்றுவதில் தாமரைக்கு சம்மதமில்லை!

வித்தியாசமாக சிந்திக்கவேண்டும், அதற்காக நடைமுறையில் உள்ளது எல்லாமே தப்பு என்பவளல்ல!

வாழ்க்கை என்பது பூந்தோட்டமல்ல, காதல் கீதம் பாடிக்கொண்டு காதலனுடன் மரத்தை சுற்றிவர!

அது ஒரு போர்க்களம்! கரணம் தப்பினால், மரணம்! கோழையாக இருந்தால், ஏறி மிதிப்பார்கள். துணிவிருந்தால், ஒதுங்கி வழிவிடுவார்கள், சமூகத்தினர்.

சாலையில், ரௌடிகள் ஒரு பெண்ணை அசிங்கப்படுத்தினால், கண்டும் காணாதமாதிரி கடந்து போய்விடுவார்கள்!

விபத்தில் அடிபட்டு சாலையில் ரத்த வெள்ளத்தில் மிதப்பவனை மருத்துவ மனைக்கு தூக்கிச் செல்லமாட்டார்கள். வேடிக்கை பார்ப்பார்கள். கேட்டால், போலீஸ் கேஸ், கோர்ட்டு, சாட்சி, நேரமில்லை என காரணம் சொல்வார்கள். அந்த விபத்தில் இவர்கள் சிக்கி, மற்றவர்கள் இப்படி காரணம் சொன்னால், இவர்கள் கதியைப்பற்றி யோசிக்கமாட்டார்கள்.

எதற்கெடுத்தாலும் பயம்! அக்கம் பக்கத்தில் அவதூறு பேசுவார்களோ என்று பயம்! சுற்றமும் நட்பும் ஏளனம் செய்வார்களோ என பயம்! செய்தித்தாள்களில் பெயர் அடிபடுமோ என்ற பயம்! பணம் நஷ்டமாகுமோ என பயம்! பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுமோ என பயம்!

பயம்! பயம்! பயம்!!!

இப்படி பயந்து பயந்து வாழ்வது ஒரு வாழ்வா?

மறுநாள், தாமரை இந்த விஷயத்தை மறந்தே போனாள். கதிரவன் காலையில் ஆபீஸ் வந்தவுடன் ஞாபகப்படுத்தியபோது, சமாளித்தாள்.

" கதிரவன்! இன்னிக்கி லஞ்ச் டயத்திலே, வெளியிலே போய் பேசுவோம், என்ன, பத்து நிமிஷத்துக்கு மேலேயா ஆகப்போகுது?"

" ஓ.கே. இன்னிக்கி எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ, பேசுவோம்! தேவையானா, நாளைக்கு தொடருவோம்......."

" அவ்வளவு பெரிய மேட்டரா?"

" லைஃப் மேட்டராச்சே!"

" ஏய்! என்ன, மறந்துட்டியா, நான் சொன்னதை?"

" நீதான் அதையே நினைச்சிண்டிருக்கே, லைஃப்னா, நீ சொல்றியே அது மட்டும்தானா? வேற விஷயமே இல்லையா?"

தாமரைக்கு வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. வேறு என்னவாக இருக்கும்? 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: சிறுகதை - நகலாக வாழாதீர்! - ரவைmadhumathi9 2019-03-02 05:51
:hatsoff: to u sir.pala per kobam vanthu kathi kalaatta pandra alavukku intha vishayathai kondu selvaargal.Ungalin yosanai arumai sir. (y) :clap: vaaltugal.ungalin ennangal ellaame verupatta karuthugalai kondullana. :clap: (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நகலாக வாழாதீர்! - ரவைRaVai 2019-03-02 06:43
அன்புள்ள மதுமதி9,
வழக்கம்போல என்னை உற்சாகப்படுத்தியுள்ளீர்கள்! நன்றி.
வித்தியாசமாக எண்ணுங்கள், வாழுங்கள்! அடிப்படையில் நல்லெண்ணம் உள்ளவரை, அனுபவம் சுவையானதாக இருக்கும்!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நகலாக வாழாதீர்! - ரவைAdharvJo 2019-03-01 23:22
You have been very modest, uncle :clap: :clap: Wish people are wise and smart enough to rectify their errors :yes: also clever like thamarai....
Well balanced play (y) thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நகலாக வாழாதீர்! - ரவைRaVai 2019-03-02 06:46
நன்றி, பிரியமுள்ள அதர்வா ஜோ!
அறிவு கொண்டு ஆராய்ந்து நம்பிக்கையுடன் செயலாற்றினால், ஒருவருக்கும் தோல்வியின்றி, யாவரும் வெற்றி பெறலாம்.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top