Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - அலகிலா விளையாட்டுடையான்! - ரவை - 5.0 out of 5 based on 2 votes

 மனைவிக்குப் பிடித்த பழங்களும், இனிப்புகளும், வீட்டில் எந்த நேரமும் கையிருப்பு வைத்திருந்தான்.

 திரைப்படங்களுக்கு அழைத்துச் சென்றான். கோவில்களில் நடக்கும் கதாகாலட்சேபங்களுக்கும்தான்!

 ஆனாலும், மனைவியோ ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒருவித்த்தில், மகனின் தொடர்பை நினைத்துக்கொண்டு, இதயமே வெடித்துவிடும்போல், கதறுவாள்.

 " இறைவா! பறிகொடுப்பதற்காகவா, பத்துமாதம் சுமந்து பெற்று, இருபத்தைந்து ஆண்டுகள் வளர்த்து, கண்நிறைந்த இளைஞனாக ஆளாக்கினேன்! அவன் போனபிறகு, இனி எங்களிருவருக்கும் வாழ்வில் என்ன பிடிப்பிருக்கிறது? நாங்கள் இனி யாருக்காக வாழவேண்டும்? வாழவேண்டிய என் மகனுக்குப் பதிலாக, என்னை எடுத்துக்கொண்டிருக்கலாமே!"

 " ரூபா! நம்ம பிள்ளை நம்மைவிட்டுப் பிரிந்தது, அவனுக்கு நல்லதற்காக கடவுள் செய்திருக்கலாமே, அப்படியிருந்தால் நமக்கு சந்தோஷந்தானே!"

 " என்ன சொல்றீங்க?"

 " யோசித்துப்பார்! கார்விபத்தில் அவன் உயிர் பிரிந்தபோது, அவன் உடம்பில் ஒரு சிறு காயம், ஒரு துளி ரத்தம், ஒரு கீறல், ஒரு சிராய்ப்பு, ஏதாவது ஒன்று இருந்ததா? எதிரே, ராட்சச லாரி மோதவருவதைப் பாரத்தவுடனேயே, அந்த திகிலில், பயத்தில், ஷாக்கில், மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டது என்று டாக்டர் சொன்னது நினைவிருக்கா? சாதாரணமாக, அந்தமாதிரி விபத்துகளில், பலியாகிறவர்கள் கையொடிந்து, காலிழந்து, முகம் சிதைந்து, வருடக்கணக்கில் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே ஊசலாடிக்கொண்டு, இருப்பதைவிட சாவதே மேல் என்று சுற்றியுள்ளவர்கள் பரிதாப்ப்படும்படியாக அவஸ்தைப்படுவதை நினைத்துப்பார்! நம் மகனுக்கு எப்படிப்பட்ட தெய்வீக மரணம் கிடைத்திருக்கிறதென்பதை எண்ணி, கடவுளுக்கு நன்றி சொல்லு!"

 இதைக் கேட்டபிறகுதான், மனைவி சமாதானம் அடைவாள்.

 கொஞ்சம் கொஞ்சமாக ரூபா சகஜநிலைக்கு திரும்பிக்கொண்டிருந்தாள்.

 வீட்டு லேண்ட்லைன் போன் மணி அடித்தது.

 " ஹலோ! யார் பேசறது?"

 " நான் மகேஷின் க்ளாஸ்மேட்! அமெரிக்காவிலிருந்து இன்றுதான் வந்திருக்கேன், அவனைப்பார்க்க வரலாமான்னு அவனிடம் கேட்டுச் சொல்லுங்க!"

 " உன்பேரு?"

 "சாரி, சொல்ல மறந்துட்டேன், ராணி!"

 ரூபா ஒரு கணம் யோசித்தாள். அவளைப் பார்க்கவேண்டும் போலிருந்தது, 

" உடனே வா!" என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

 அங்கு வந்த ரகுவிடம் நடந்ததைச் சொன்னாள். 

 "ரூபா! ஒரு வித்த்திலே நீ செய்ததுகூட சரிதானோன்னு தோணுது, அவளுக்கு விஷயம் தெரியலைன்னு நினைக்கிறேன், நீ அதை அவளிடம் போனிலே சொல்லியிருந்தா, அவளுக்கு அது பெரிய ஷாக்காயிருந்திருக்கும்."

 சிறிது நேரத்தில், ஒரு கார், வீட்டு வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு பெண்ணும் அவள் தந்தையும் இறங்கினர்.

 இருவரும் சிரித்துக்கொண்டே, உள்ளே நுழைந்தனர்.

 " வாங்க! ராணிதானே!"

 " ஆமாம், இது என் அப்பா!"

 " உட்காருங்க! குடிக்க என்ன வேணும், காபியா, டீயா, டிரிங்ஸா?"

 " எங்களுக்கு முதல்லே, மகேஷைப் பார்க்கணும், அவனைப் பார்த்து, பேசி, அரட்டை அடிச்சி, மூணு வருஷமாச்சு! முதல்லே, கூப்பிடுங்க அவனை!"

 "வெளியிலே போயிருக்கான், பத்து நிமிஷத்திலே வந்துடுவான், அதுவரையிலும் நாம பேசுவோம்!"

 " அதுவும் சரிதான், அங்கிள்! நான் எப்பவுமே இப்படித்தான், லொடலொன்னு பேசிண்டே யிருப்பேன்! மகேஷ் ரொம்ப பேசமாட்டான், என்னை பேசவிட்டு வேடிக்கை பார்ப்பான்.

 இந்த ஊரிலே ரெண்டுபேரும் ஒண்ணா எம்.ஏ. முடிச்சதும், எனக்கு ஆபர்ன் யூனிவர்சிடியிலே பி.எச்.டி. பண்ண ஸ்காலர்ஷிப் கிடைச்சு நான் கிளம்பறபோது, அவனைப் பிரிய மனமில்லாம, இதயமே வெடிச்சிடும்போல அழுதேன், என்னை மறந்துடமாட்டியேன்னு கேட்டேன், நான் திரும்பிவரத்துக்குள்ளே வேற எவளையாவது சேர்த்துக்கிட்டா என் கதி,ன்னு புலம்பினதுக்கு அவன் என்னை சமாதானப்படுத்த என்ன சொன்னான், தெரியுமா? அங்கிள்! யூ கேன் பி புரௌட் ஆஃப் ஹிம்! அவனைப்போல ஒரு பிள்ளையை பெற்றதுக்கு நீங்க ரெண்டு பேரும்பெருமைப்படலாம்.........."

 " அவன் என்ன சொன்னான்?"

 " என்னைப்போல, ஓட்டைவாய் தான், சிந்திக்காமலே எதையாவது பேசிடுவோம், அவன் பெரிய அறிவுஜீவி! சுருக்கமா சொன்னான், அதை என்னாலே ஜன்மத்துக்கும் மறக்கமுடியாது,..............."

 " அவன் என்ன சொன்னான்னு இன்னும் சொல்லலியே?"

Add comment

Comments  
# RE: சிறுகதை - அலகிலா விளையாட்டுடையான்! - ரவைAbiMahesh 2019-04-11 22:42
Great concept Sir! Raghu's inner strength and Organ Donation is nice.. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அலகிலா விளையாட்டுடையான்! - ரவைரவை 2019-04-12 06:33
Thanks, Abhimahesh!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அலகிலா விளையாட்டுடையான்! - ரவைViji. P 2019-04-11 21:53
😢😥😩😞ennal ezutha mudiyavillai sir. Kanneer thirayai maraikkirathu. En brother vibathil iranthan. Aanal engalal Kan thanam seiyum nilaiyil nanum en ammavum illai. Nangal iruvarum suyaninaivai izanthu vittom. Ippothu atharkkaga varunthukirom. Ellam avan seyal.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அலகிலா விளையாட்டுடையான்! - ரவைரவை 2019-04-11 22:45
Dear viji,
My heartfelt sympathies with you and your mother! I just could not imagine such a calamitous situation.
I can understand your feelings on reading the story! Sorry!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அலகிலா விளையாட்டுடையான்! - ரவைViji. P 2019-04-12 16:20
Sir neengal sorry endra periya varthaiyai solla vendam angangu nadapathai ezuthiirukkirigal. Ellam kadavul seyal .thank you sir.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அலகிலா விளையாட்டுடையான்! - ரவைரவை 2019-04-11 21:12
Dear Adharva Jo! Wondering and missing you! Greatly relieved! Your elaborate comments vouchsafe we sail n the same boat! We are bundles of emotion.emotion is a double-edged sword! Thanks
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அலகிலா விளையாட்டுடையான்! - ரவைAdharvJo 2019-04-11 18:46
:hatsoff: Excellent messages uncle!! Organ donation, having control over our heart feelings, think before you talk and adapting to the changes and moving on. As always crisp narration :clap: :clap:

Time is the healer. I don't have say this uncle but our human emotions are at times hard to keep in our control. Mudiyave mudiyadhunu sollala but sometimes its beyond out limits and sometimes its good to vent out too :)

Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அலகிலா விளையாட்டுடையான்! - ரவைkarna 2019-04-11 15:54
அருமையான. பதிவு அய்யா...மாற்றத்தோடு ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்...
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அலகிலா விளையாட்டுடையான்! - ரவைரவை 2019-04-11 16:44
அன்புள்ள கர்ணா

சரியாகச் சொன்னீர்கள்! அதுதான் வெற்றியின் ரகசியம்! மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அலகிலா விளையாட்டுடையான்! - ரவைhari k 2019-04-11 15:01
Very touching sir....Romba alaga solirukiga vaalkaiyin thathuvamey Maatram matundhano?
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அலகிலா விளையாட்டுடையான்! - ரவைரவை 2019-04-11 16:43
அன்புள்ள ஹரி,
மிக்க நன்றி! மாற்றங்களோடு நாமும் மாறியாகவேண்டும், இல்லையேல், அமைதி பறிபோய்விடும்!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அலகிலா விளையாட்டுடையான்! - ரவைmadhumathi9 2019-04-11 10:23
:clap: enna solla intha maathiri niraiya perukku nadanthu irukku.kelvi pattu irukkiren. Adhanaal thaan periyavargal & munnorgal nalla sorkkalai solla vendum endru solgiraargalo? Nalla kathai. (y) eatru kolvathai thavira veru vazhi illai.soga kathaithaan aanaal unmai. :hatsoff: sir. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அலகிலா விளையாட்டுடையான்! - ரவைரவை 2019-04-11 11:59
மதுமதிம்மா! தங்கள் உள்ளத்தை என் கதை தொட்டுவிட்டது எனக்கு பெருமையாயிருக்கிறது, ரொம்ப நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அலகிலா விளையாட்டுடையான்! - ரவைJebamalar 2019-04-11 09:36
அருமையான கதை sir... கதையை படித்து முடிக்கவில்லை கண்ணீரும் திரையை தொடுகிறது... கடவுளின் கையில் key இருக்கிறது.. சில காரியங்கள் ஆன்மாவினால் உணர முடிகிறது.. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அலகிலா விளையாட்டுடையான்! - ரவைரவை 2019-04-11 12:02
அன்புள்ள ஜெபமலர்! ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், ஊன்றிப் பார்த்தால், இறைவனின் திருவிளையாடல் தெளிவாகப் புரியும். புரிந்து ரசிக்கமுடியும். ரசித்து உண்மையை உணரமுடியும். மிக்க நன்றி.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top