Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - கங்கை ஒரு மங்கை - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Pin It

சிறுகதை - கங்கை ஒரு மங்கை - ரவை

director

ரவேற்பறையில் காத்திருந்த டைரக்டர் மோகனும் கதாசிரியர் விந்தனும், உள்ளேயிருந்து தயாரிப்பாளர் வீழிநாதன் வந்ததும், மரியாதைக்காக எழுந்து நின்றனர்.

 " வாங்க, வாங்க, வந்து ரொம்ப நேரமாச்சா? சாரி, பூஜையிலே இருந்தேன், .......எல்லாத்துக்கும் அவன் தயவு வேணுமில்லே!"

 " உங்களுக்கு அவன் தயவு வேணும், எங்களுக்கு அவன் தயவும் வேணும், உங்க தயவும் வேணும்......" என்று கதாசிரியர் நகைச்சுவையாக, வந்த விஷயத்தையும் கோடிட்டு காட்டினார்.

 தயாரிப்பாளரும் டைரக்டரும் சிரித்துவிட்டு, உள்ளேயிருந்து வேலையாள் கொண்டுவந்த கொடுத்த காபியை உறிஞ்சினர். அவசரமாக, கதாசிரியரும் எடுத்துக் குடித்துவிட்டு, கதை சொல்லத் தயாரானார்.

 " மோகன்! இப்ப டிரெண்டு எப்படியிருக்கு? சோஷியலா, பேயா, சரித்திரமா, புராணமா, எது நல்லா ஓடுது?"

 " எதுவாயிருந்தாலும், நாட்டிலே இப்ப நடக்கிற அரசியல் கலந்து, மார்க்கெட்டிலே முன்னணியிலே இருக்கிற நடிகரை போட்டா, நீங்க போட்ட பணத்தைப்போல, பத்து மடங்கு எடுத்துடலாம்............"

 " மோகன்! நம்ம படத்துக்கு விளம்பரம் எப்படி.......?"

 " இப்பல்லாம், குறுக்குவழி விளம்பரம்தான் ஒரேநாளிலே நாடு முழுவதும் பேசும்படியா செய்யுது?"

 " அதென்ன குறுக்குவழி?"

 " ஆளுங்கட்சியிலே ஒரு மந்திரியை குறிவைச்சு ஒரு டயலாக், ஒரு சீன், நம்ம படத்திலே வந்து, அதை நாமே லீக் பண்ணிட்டா, தினமும் மந்திரி நம்மை அடாக் பண்றதும், எதிர்க்கட்சி தலைங்க நம்மை ஆதரிச்சுப் பேசறதும், நடுவிலே நம்ம ஆளைவிட்டே கோர்ட்டிலே ஒரு கேஸும் போடவைச்சிட்டா போதும், உங்கபடம் எப்ப ரிலீஸ்னு ஊரே கேட்கும், ஒரு வருஷம் முன்பே ரைட்ஸ் வித்துடும்.............."

 " அதோட, கன்னாபின்னான்னு இளவட்டங்க பாடறாப்பலே ஒரு பாட்டைப் போட்டு ஆடியோவையும் ரிலீஸ் பண்ணிட்டா எல்லா பேங்க் டைரக்டரும் உங்களைத் தேடி வந்து பணத்தை அவங்க பேங்கிலே போடச்சொல்லுவாங்க......."

 " விந்தன்! எழுத்திலே கற்பனை வரலாம், பேச்சிலே வந்தா எதிரிலே இருக்கிறவன் கவுந்துருவான்! அடக்கி வாசியும்!"

 " மோகன்! வந்த விஷயத்தை பேசுவோமா?"

 " விந்தன் ஒரு கதை வைச்சிருக்காரு, நல்ல கதை, சரித்திரக்கதை, நடப்பு அரசியலை புகுத்த நிறைய இடம் இருக்கு, ......"

 " எத்தனை வருஷம் ஆகும், படத்தை எடுக்க?"

 " ரெண்டு வருஷத்திலே முடிச்சிடலாம், சிக்கனமா செலவு செஞ்சா, கொஞ்சம் தாராளமா செலவு செஞ்சா, ஒண்ணரை வருஷத்திலே முடிச்சிடலாம்............"

 " உங்க பட்ஜெட் எவ்வளவு?"

 "நூறு கோடி! அதிகமாப்போனா, இன்னம் ஒரு முப்பது, அவ்வளவுதான்...."

 " வெளிநாடு ஷூட்டிங் உண்டா? ஹீரோயின் யார்? மியூசிக் யாரு?"

 " நம்ம பட்ஜெட்டுக்குள்ளே வரணும்னா, பெரிய ஆளுங்களை வைக்கமுடியாது, கர்நாடக சங்கீதம் நல்லா தெரிஞ்சவனை, புதுசா வந்தவனை மியூசிக்குக்கு போடுவோம், சரித்திரப் படம்தானே, பழைய ராகங்கள், மெட்டுகள்தான் எடுபடும், "

 " சரி, ஹீரோயின்?"

 " ஹீரோவை முடிவு பண்ணிட்டா, அவரு ஹீரோயினை செலக்ட் பண்ணிப்பாரு..........."

 " சம்பளம் நாம தரணும், ...செலக்ட் அவரு பண்ணுவாரா? என்னய்யா நியாயம்?"

 " அதில்லே புரொட்யூசர் சார்! அவர் சொல்ற ஆளை போடலேன்னா, பாதியிலே அவங்களுக்குள்ளே தகராறு வந்து படம் நின்னுடும்........"

 " அப்ப ஒண்ணு பண்ணுவோம், நம்ம கைக்கு அடங்கறவனா பார்த்து ஹீரோவாக்கிடுவோம்............"

 " இப்பல்லாம் ஹீரோவுக்காகத்தான் படமே ஓடுது, இப்ப இல்லே, எப்பவுமே! அந்தக் காலத்திலே சிவாஜி, எம்.ஜி.ஆர்., அப்புறமா, ரஜினி, கமல், இப்ப விஜய். அஜித், சேதுபதி, ..........."

 " எனக்கும் தெரியும், ஆனா அவங்க கால்ஷீட் கிடைக்கவே மூணு வருஷம் ஆகும், அந்த மூணுவருஷத்திலே அவங்க மவுசு போயிட்டா நம்ம கதி?"

 " ரிஸ்க் எடுக்கிறதனாலேதான், பல மடங்கு லாபம் வருது........."

 " தமிழிலே ஆண்டுக்கு நூற்றுமுப்பது படம் ரிலீஸ் ஆனா, மூணுபடம்தான் வெற்றின்னு விஷயம் தெரிஞ்சவங்க சொல்றாங்களே......"

 " அது உண்மைதான், ஆனா வெற்றியிலே, ஓகோ வெற்றி, மீடியம் வெற்றி, போட்டபணம் திரும்பிவந்த வெற்றின்னு இருக்கு, அதேபோல, தோல்வின்னா, ஒருநாள்கூட ஓடாத படம், சீ சென்டரிலே மட்டும் ஒரு வாரம் ஓடின படம், ஏ சென்டரிலே மட்டும் ஒரு வாரம் ஓடின படம்னு இருக்கு.........."

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - கங்கை ஒரு மங்கை - ரவைNilavini 2019-04-16 09:24
yathartha padaippu....good Ravai!
ungal peyar kaaranam enna??
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - கங்கை ஒரு மங்கை - ரவைhari k 2019-04-15 14:39
Very nice sir (y) (y) :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - கங்கை ஒரு மங்கை - ரவைரவை 2019-04-15 21:19
Thanks, Hari!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - கங்கை ஒரு மங்கை - ரவைmadhumathi9 2019-04-15 05:42
:clap: nagaichuvaiyaana kathai.different story. (y) :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - கங்கை ஒரு மங்கை - ரவைரவை 2019-04-15 09:14
ஆம், புது முயற்சி! பிடித்திருந்ததா?
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - கங்கை ஒரு மங்கை - ரவைmadhumathi9 2019-04-15 13:25
:yes: (y) :GL: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - கங்கை ஒரு மங்கை - ரவைரவை 2019-04-14 06:07
Yes, Shanthimma! A trial! Happy you like it!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - கங்கை ஒரு மங்கை - ரவைShanthi S 2019-04-13 22:54
different story Ravai
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - கங்கை ஒரு மங்கை - ரவைAbiMahesh 2019-04-13 18:17
Story Super Sir!!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - கங்கை ஒரு மங்கை - ரவைரவை 2019-04-13 18:49
Thanks, Abhimahesh!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - கங்கை ஒரு மங்கை - ரவைAdharvJo 2019-04-13 13:44
:D sabash, uncle 👌👏👏👏 you have replicated the reality very well and screen play is enjoyable 😜 :lol:

I do agree with you. You left that rating part :D high rated movie but poi partha 😯😯😑 kodumai facepalm

Thank u and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - கங்கை ஒரு மங்கை - ரவைரவை 2019-04-13 14:04
Dear Jo!
பரீட்சையில் பாஸ் மார்க வாங்கின மாணவனின் மகிழ்ச்சி எனக்கு! பாஸ் போட்ட உனக்கு என் நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - கங்கை ஒரு மங்கை - ரவைViji. P 2019-04-13 13:24
Super sir. Intha kalathukku etramathri ezuthi irukkinga. Ungal kathaiyil Vera level sir intha kathai. : :clap: :clap: :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - கங்கை ஒரு மங்கை - ரவைரவை 2019-04-13 14:01
Dear Viji,
முழுக்க முழுக்க என் கற்பனை என்பதால், எனக்கு கிடைத்த சுதந்திரத்தை பயன்படுத்திக்கொண்டேன்! சற்று நகைச்சுவையாகவும் இருக்க ஆசைப்பட்டேன்! பாராட்டுக்கு நன்றி
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top