(Reading time: 11 - 21 minutes)

சிறுகதை - மதமே வன்முறை? "மதம்"தான் வன்முறை! - நிலவினி

Religion

காலை வெயில்,கையில் தேநீர் கோப்பையுடன் ,குருத்துவராவில் இருந்து வரும் பஞ்சாபி மொழி பாடலோடு இனித்தது.மொழி புரியாவிட்டால் என்ன...அதன் சாரமாம்சம் புத்துணர்வு தரவல்லது,”இறைவா இன்றைய நாளில் எனக்கு உழைப்பதற்கேற்ற வாய்ப்பை கொடு”என்பதே அது,பஞ்சாபி தோழி விளக்கியது.20 ஆண்டு பஞ்சாப் வாழ்க்கை,அதன் மொழியையும் பரிச்சியப்படுத்தியிருந்தது,சிவனேஸ்வரிக்கி.கடிகாரத்தை பார்த்த போதுதான் சற்று நேரத்தில் ஸ்மிரித்தி வந்துவிடுவாள் என உணர்த்தியது,உணர்ந்த வேகத்தில் படபடவேன வேலைகளை முடித்தாள் காலை,மதியம் என இரு வேளை உணவும் தயாரானது,” ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ……”என ஸாட்டிலைட் ரேடியோவில்ஜானகி பாடியது ஒரு கணம் அவளை சலனப்படுத்தியது,வெறுமையாய் சிரித்துக் கொண்டாள்.வாழ்க்கைக விசித்திரமாணது,ஜெயித்தால் அது உத்வேக கதை,தோற்றால் உபதேச போதணை!ஜெயிப்பதற்கும்,தோற்பதற்கும் வாழ்க்கை ஒன்றும் பந்தயம் அல்ல என்று வேதாந்தம் பேசினாலும்.நிறையோ,குறையோ சகமனிதர்களிடம் இருப்பது தன்னிடம் இல்லை என்றால் அது தோற்றுப் போன வாழ்க்கையாகவே கருதப்படும்(கருவப்படும்).”சோகங்கள் சொல்லாமல் ஒடட்டும் காதல் பெண்ணே” என்ற வரிகள் தனக்காகவே இளையராஜா பாடியது போல இருந்தது.அழைப்புமணி ஒலித்தது,ஸ்மிரித்திஂ”ஹாய் சிவா ஆண்டி………”என்றபடி அணைத்துக் கொண்டு,சுமந்து வந்த பைகளை கீழே போட்டாள்.”வா ஸ்மித்தி சாப்டலாம்,ரொம்ப பசிக்கிது …”.தட்ஸ் யூ ஆண்டி,பரேடு முடிச்சி எனக்கும் செம பசி..,ஸர்வண்டெல்லாம் எங்க ஆண்டி””இன்னைக்கி எல்லாருக்கும் லீவ் குருநாணக் ஜெயந்தி”…பரஸ்பர விசாரிப்புகளோடு இட்லி சாம்பாரை முடித்தார்கள்.ஸோபாவில் அயர்ந்தால் போல அமர்ந்த ல்மிரித்தி பூடகமாய் சிரித்தபடி “ஸ்டார்ட் மியூசிக் ஆண்டி……..அப்பா ஒப்பிச்சிருப்பாரே…………இந்த NCc கேம்ப்,அப்பா,அம்மா சென்னை ட்ரிப் எல்லாம் சிங்காகி(sync) வந்துடுச்சி…….!”பட்டென தோளில் தட்டி அருகே அமர்ந்தாள் சிவனேஸ்வரி,”எப்பவுமே நீ இண்டலேக்சுவல்தான்,உங்கப்பா சொல்றமாறி……பட்டுனு மேட்டருக்கு வந்துட்ட…சின்ன திருத்தம்…உங்கப்பா ஒன்ணுமே சொல்லல எனக்கே தெரியும்……பஷீர் என்னோட க்ளாஸ்மேட்………..” “ஓ …..

பரவால்ல ஆண்டி,என் வருங்கால மாமானார் உங்க ப்ரேண்டு…….ஆனா பாவம் ஆண்டி நீங்க… அப்பாக்காக இன்னைக்கி எனக்கு, நேக்ஸ்ட் வீக்கேண்ட் பஷீர் அங்கிளுக்காக அசாருக்கு அட்வைஸா…?”சிவேனேஸ்வரிக்கி ஒரு நொடி சுருக்கென்றது,ஆனாலும் சுதாரித்துக் கொண்டாள்…”அடிப்பாவி நான் என்னடி counselorஆ ?””சிகெரட் பிடிச்சா கேன்சர் வரும்னு சொல்றத விட படம் போட்டு காட்ணா ஒரு நிமிஷம் பயந்து போவம்ல……. இது அந்த மாறிதான்……””ஆண்டி நீங்க லவ் பண்ணிங்களா???? அவர விட்டுட்டு அங்கிள கல்யாணம் பண்ணிக்கிட்டுங்களா???” ஸோ சாரி ஆண்டி …..இப்ப அங்கிளும் இல்ல ,நீங்க லவ் பண்ணவரும் உங்களோடு இல்ல……….. அதான் ஆண்டி நடக்க வேண்டியது நடந்தே தீரும் அரேஜ்டு மேரெஜ் ல மட்டும் என்ன பெரிய கியாரண்டி இருக்கு??

 சிரித்துக்கொண்டே சிவனேஸ்வரி தொடர்ந்தாள்” கமான் ஸ்மிரித்தி …..உன்ன இப்பதான் இண்டேலக்சுவல்னு சொன்னேன்…நீ இப்படி அவசர பட்றியே…….நான் லவ் பண்ணது, கல்யாணம் பண்ணது இரண்டுமே ஒரே ஆள்தான்.அதோட அவர் இன்னும் இருக்கார் சென்னையில……….”ஸ்மிரித்தி வாயடைத்து போனாள்……சி வா தொடர்ந்தாள்……..”நடந்தத சொல்றேன் ஸ்மிரித்தி அப்புறம் உன் இஷ்டம்…….உன் வாழ்க்கை……நானும் வஸந்தும் சிறந்த காதலர்கள்…….எல்லாரும் லவ் பண்ணும்போது அப்டிதான் நினைச்சிக்குவோம்,காலேஜே பாத்து பொறாமபட்ட பர்(pair)நாங்க………. அவர் ஒரு கிறிஸ்டியன்,நான் கட்டுபட்டியான இந்து.எப்பவுமே எனக்கு சிவ பக்தி ஜாஸ்தி,ஆனா வஸந்த் நாத்திகவாதி,ரொம்ப தீவிரமான கடவுள் மறுப்பாளர்.எங்கோளாட இந்த மாறுபாடுதான்,எங்களளுக்குள்ள ஈடுபாட்ட வளத்துச்சு,என் தமிழுக்கும் அவரும்,அவர் இசைக்கு நானும் அடிமைகள்! அவரு போட்டு வர “சே கு வா ரே”டிஷர்ட் மேல எனக்கு அவ்ளோ கிரேஸ்,என்னோட ஹோம்லி லுக் அவருக்கு பேவரிட்,இது போதாத??? இருபது வயசிலே இரண்டு பேர சேர்த்து வைக்க,இது தவிர ப்ரெண்ட்ஸ் “ஓ” போட்டே எங்கள காதலிக்க வெச்சசுட்டாங்க, அதுவும் இல்லாம வாலிபத்தோட இயற்கை விதி நாம செய்யற காதல். இவ்ளோத்துக்கும் மேல அவரு என் அண்ணோட கிரிக்ககெட் டீம் மேட்.

அப்புறம் என்ன வழக்கம் போலதான் இரண்டு வீட்லயும் பூகம்பமே வெடிச்சது,நான் எவ்ளோவோ நாள் வீட்ல இருக்கவங்கள கன்வின்ஸ் பண்ணேன்,ஒத்துக்கவே இல்ல….. எனக்கு கவர்மெண்ட் ஜாப் ,வஸந்துக்கு ஐடி வேல இருந்ததால ஈஸியா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.” மகிழன்” பிறந்தான்அது வரைக்கும் காதல் அவ்ளோ இனிப்பா இருந்தது.”.விரக்தியாகி பெருமுச்சிரைந்தாள் சிவனேஸ்வரி.

“ஓ….புரிஞ்சிருச்சு ஆண்டி,அப்புறம் சொந்தகாரங்க பிரச்சினை உங்களை மதமாற சொல்லிருப்பாங்க,நீங்க அங்கிள பிரிஞ்சிட்டீங்க..?ரைட்? ஆனா என் விஷயத்துல இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல.அசார பத்தியும் ,பஷுர் அங்கிள் பத்தியும் உங்களுக்கு நல்லாவே தெரியும்,நானும் அசாரும் தெளிவா இருக்கோம்,அல்லாவும்,அம்மனும்எங்களுக்கு ஒண்ணுதான்.”என்றாள் பெருமையாக, அவள் கண்களில் அத்தணை கர்வம் அவள் காதல் மேல்.

சிவனஸ்வரி நினைவில் “ அவ மதமாற மாட்டா,உங்களுக்கு வேணும்னா நீங்க எல்லாரும் அவளுக்காக மாறிடுங்க…. அவ இந்துனு தெரிஞ்சுதான் லவ் பண்ணேன்.,” என கூறி வஸந்த் குடும்பத்தினர் முன்னிலையில்,அவள் தோள்மேல் கைவைத்து அணைத்தது மின்னலாய் வெட்டி சென்றது ,உலகமே தன் காலின் கீழ் என அன்று தோன்றியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.