(Reading time: 11 - 21 minutes)

“என்ன ஆண்டி ப்ரீஸ் ஆயிட்டீங்க????”உலுக்கினாள்,”மறுபடியும் அவசரபட்றியே……வெறும் காதல் மட்டடுமே வாழ்வுக்கு போதாது,நாங்க செய்திருந்த தீர்மானங்கள நினைச்சிப் பார்த்தேன்.குழந்தை பிறந்து சில நாட்களில் அவனுக்கு காய்ச்சல் வந்தது,அப்போது இனம் புரியாத ஒருபயத்தில் பக்தராய் மாறினார் வஸ்ந்த் அன்றிலிருந்து தொடங்கிச்சி பிரச்சினை ,அவர் கடவுளை கும்பிடுவது எனக்கும் சந்தோஷம்தான்…….ஆனால் நாளடைவில் அவர் மத போதகரா மாறிட்டார்,குழந்தை உயிரை காப்பாற்றிய கடவுளுக்கு இதுவே அவர் செய்யும் கைமாறுன்னார்.குழந்தைக்கு மத குறியீடு இல்லாத பெர் வெச்சதே அவர்தான் ,ஆனால் அதையே மாத்தணும்னு சண்டை.நேரம் பார்த்து அவர் குடும்பமும் என்னை வஞ்சம் தீர்த்தது.அவர்கள் என் மதத்தை சொல்லி சண்டையிட்டது என்னை என் கடவுளோடையும் உறவுகளோடையும் நெருக்காமாக்கிடுச்சி,மனசிலே ஒண்ணா இருந்த எங்க காதல் மதத்தில இரண்டாச்சு,மத கலப்படம் காதல புளிக்க வெச்சிடுச்சி,தினம் ஒரு சண்டை,அழுகை,இரண்டு குடும்பங்களின் வாக்குவாதம்,………உச்சமாக…என் கவுரவத்தை,காப்பாற்ற, என் அண்ணன் மடியில் வைத்து குழந்தைக்கு காது குத்துவது என்றும்,அதக்கப்புறம் வஸந்தை

 டிவோர்ஸ் பண்ணனும்னு முடிவு பண்ணி ஊருக்கு போய்ட்டேன் ,இத வஸந்தால தாங்கிக்கவே முடியல………..காது குத்து ப்ங்கஷன் நடக்கிற இடத்துக்கே வந்துட்டார்,குழந்தையை வாங்கிட்டு போக,என் அண்ணனுக்கு வஸந்த் மேல தீரா ஆத்திரம்………நண்பன் துரோகம் பண்ணிட்டான்னு ,இருவரும் அடிதடி சண்டையில் இறங்கினாங்க…வஸந்த வெட்ட சாமி அரிவாளை உருவினார் என் அண்ணன், அது பெரிசு மேல போன கரண்ட் ஒயர்ல பட்டு ஷாக் அடிச்சிடுச்சு,இத தடுக்கப் போன என் அண்ணிக்கும் ஷாக்,இரண்டு பேரும் அங்கயே இறந்துட்டாங்க…….!”கண்ணீர் சிவாவின் கண்களில் இருந்து சுடாகவழிந்தது,உடல் லேசாக நடுங்கியது.ஸ்மிரித்தி உறைந்து போய் செய்வதறியாமல் மெளனித்திருந்தாள்.

வாசலில் கேட்ட அழைப்பு மணி இருவரையும் சுயநினைவுக்கு திருப்பியது .கண்ணை துடைத்த சிவா,கதவை திறந்தாள்,மகிழன் நின்றிருந்தான்”என்ன சிவா செம அரட்டடையா……….இல்ல முழுசா ஸ்மிரித்தி கழுத்த அறுத்துட்டியா ???” என்றான்.அவனை விளையாட்டாய் முறைத்தாள் சிவா.”அம்மாவ ஏண்டா பெர் சொல்லி கூப்பிடற …?” என்றாள் ஸ்மிரித்தி நிலமையை இயல்பாக்க…” நான் பேர் சொல்லும் பிள்ளை நீ என்ன இங்க இருக்க உன் . ஆளபாக்க போல …..வாயேன் டிராப் பண்றேன் …………..”என கண்ணடித்தான்,”சாப்பிடல நீ …எங்க கிளம்புற?” என்றாள்சிவா,” இல்ல இன்னைக்கி ரன்வீரோட பார்ட்டி ஸோ லன்ச் வெளில………. அதான் உனக்ககு ஓரு சோதணை எலி மாட்டிருகக்கே அவளுக்கு கொடு,நான் அப்டியே ப்ராக்டீஸ் போய்ட்டுதான் வருவேன் சிவா என்னை தேடதா பாய்……….” என கிரிக்கெட் கிட்டோடு சிவாவின் பதிலுக்கு காத்திராமல் பாய்ந்து ஒடினான்.அப்படியே அவன் அப்பா போல என சிவனேஸ்வரி நினைத்ததுக் கொண்டாள்.பின்னிருந்து சிவாவை அணைத்ததுக்க கொண்ட ஸ்மிரித்தி”ஸாரி ஆண்டி……….நீங்க சாதரண government staff ஆ இருந்து ஒருIASஆகிருகிங்கனு அப்பா அடிக்கடி பெருமையா சொல்லுவாரு பட் இவ்ளோ கஷ்டத்தோட இதெல்லாம் சாதிச்சிருங்கிங்கன்னு தெரியாது, ஆமா இதெல்லாம் மகிழனுக்கு தெரியுமா ?”என கேட்டாள் .அமைதியாய் திரும்பிய சிவா,”இல்லை தெரியாது……”என்றாள்”ஆண்டி அப்ப உங்க பேமிலி….?உங்க அண்ணன் பேமிலி?”

நிதானமாய் அமர்ந்த சிவனேஸ்வரி “என் அண்ணன் மகந்தான் நீ இப்ப பார்த்த மகிழன்……..என்னால, என் காதலால தன் பெற்றோரை இழந்த பிள்ளையை நான் எப்படி விட முடியும்?நான் கொஞ்சம் பக்குவமா நடந்திருந்தா…….மதம் என் தலைக்கு ஏறாம இருந்திருந்தா….இவ்ளோ நடந்திருக்காது………….இதே குற்ற உணர்வுதான் வஸந்துக்கும்….தன் மதபற்றால் தன் நண்பணை இழந்திட்டோம்னு ரொம்பவே துடிச்சார்.ஆனா கண் கெட்ட அப்புறம் செய்ற சூர்ய நமஸ்காரம் எதற்கும் பிரயோஜன படாது ஆனா பரிகாரம் பண்ணலாம்னு நினைச்சோம்…….எந்த பெயர் மாற்றாத்தால இந்த பிரச்சினை வந்ததோ….அந்த பெயர் மாற்றத்தை நானே செய்தேன்….குழந்தையை ஒரு கிறிஸ்தவ குழந்தையாக மாற்றி வஸந்திட்ட தந்துட்டு,அவருக்கு டிவோர்ஸ் கொடுத்திட்டேன். எங்கள் பிள்ளை மார்டினா அவங்க அப்பாட்ட இருக்கான்,நான் என் அண்ணன் மகனை மகிழனாக்கி இங்க வந்துட்டேன்.ஆனா நடந்ததுக்கு,பரியச்சித்தமா அவரும் வேற கல்யாணம் பண்ணிக்கல………முடிஞ்சவர இந்த மாறி வர ஜோடிகளுக்கு பிரச்சினை இல்லாம கவுன்சிலுங்கு கொடுத்து கல்யாணம் பண்ணிவைக்கிறாரு…”என்றாள் கண்கள் பனிக்க.

ஸ்மிரித்தி கலங்கி போனாள் நிலமையை கையாள தெரியாமல் உறைந்தாள்.அவள் மெளனம் சிந்திப்பதற்கான அத்தியாவசியம் என இருந்து விட்டாள்.ஸ்மிரித்தி எடுக்கும் முடிவில்தான் அவளுடைய நண்பரின் கவலைப்க் தீரும் என நினைத்தாள்.சற்று நேரத்திற்கு பின் இருவரும் சம்பிரதாயமாக உண்டு முடித்தனர்.கடந்த கால தாக்கத்தில் இருந்து மீள சிவனேஸ்வரிக்கும் இந்த அமைதி தேவைப்பட்டது.மாலையில் “ஆண்டி பார்க் வரைக்கும் போய்ட்டு வரேன் என் ப்ரேண்டு……..”என்றவளை இடைமறித்த சிவா”டோண்ட் பி சில்லி ஸ்மிரித்தி…………நீ என்கிட்ட ரிப்போர்ட் வாசிக்க வேணாம் 9 க்ளாக் மேல ஆனா போன் பண்ணு நான் வண்டி அனுப்புறேன்…….டேக் கேர்”,போகும் போது அந்த ஸாட்டிலைட் எப்.எம் ஆன் பண்ணிட்டு போ …………”என்றாள்.தலையசைத்தவாரே புன்னகைத்து சென்றாள் ஸ்மிரித்தி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.