“தோளில் சாய்ந்து கதைகள் பேச நமது விதியில் இல்லை……..”என்று ஒலித்த பாடல் இருவருக்குள்ளும் வேவ்வெறு விதமாய் எதிரொலித்தது.
“ஸோ,,,,,என்ன டிஸைட் பண்ணிருக்க……?” என அசார் காலி காபி கோப்பையை வைத்தபடி கேட்டான்,அவன் பயிற்சி பெறும் IPSஅதிகாரி.அவனை”ஆழமாய் பார்த்த ஸ்மிரித்தி”இது நாம் நினைச்சதவிட ,சீரியஸ் நாம இதப்பத்தி நிறைய டிஸ்கஸ் பண்ணிருக்கோம்,ஆனா சரியான டிரக்ஷ்ன்ல பண்ணல…….நம்ம மதங்கள் நமக்கு நடுவுல ஒரு கத்தியா எப்பவுமே இருக்க போது……”
“கத்தியால காயும் வெட்டலாம்,ஆளையும் கிழிக்கலாம்……அது எடுக்கிற கையை பொருத்தது,உன் ஆண்டி விஷயத்துல அவங்க ரெண்டு பேர் மதமும் அதணதன் பாதையில சரியாதான் இருந்திருக்கு,ஆனா அது மேல இவங்களுக்கு பிடிச்ச மதம்தான் அத வன்முறை ஆக்கிருக்கு.அவங்க குழந்தை மேல அவங்க அத திணிக்க பாத்திருக்காங்க….. அப்பதான் பிரச்சினை வந்திருக்கு,அவங்க நினைச்சிருந்தா இரண்டு மதத்தொட ஒழுக்கத்தையும் அந்த குழந்தைக்கு கொடுத்திருக்கலாம்,அச ய லக்ஸரி(as a luxury),ஒருத்தொருத்தர் மாற சொல்லிக்கிறதுக்கு ரெண்டு பேருமே மாறிருக்கனும்.”
ஆனால் ஸ்மிரித்தி தீர்க்கமாய் முடிவெடுந்திருந்தாள்,பின்னொரு நாளில் சிவனேஸ்வரியின் நண்பர் வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது,வரவேற்புக்காக சிவேன்வரியும் ,மகிழனும் சென்றுக்கொண்டிருந்தனர்.”சூப்பர்லமா…..என்ன ஒரு புத்திசாலித்தனமான முடிவு,யார் மாறதுன்னு இல்லாம ,நமக்காக நாம மாறலாம்கிறது ஸம்திங் கிரேட்….”என்றான் மகிழன்,புன்னகையால் அதை ஆமோதித்த சிவனேஸ்வரி திருமண வீடு வரவே இறங்கினாள்.அங்கே” சிம்ரன் வேட்ஸ் அமித்” என்ற பதாகை இவர்களை வரவேற்றது.காதலுக்காக ஸ்மிரித்தி சிம்ரானகவும்,அசார் அமித் ஆகவும் மாறி சீக்கிய முறைப்படி திருமணம் செய்யவிருந்தனர்.சிவனேஸ்வரியின் நண்பர் பரமேஷ்வரும், பஷுரும் இவர்களை வரேவற்றனர்.”என்ன ரெண்டு பேருக்கும் ,சந்தோஷமா…….?”என்றாள்
சிவா……””இது சின்னஞ்சிறுசுக முடிவோ இல்லை அவங்க லைபோட ஆரம்பமோ……இனிதா இருக்கட்டும்னு நாம சந்தோஷமா வாழ்த்த வேண்டியதானே …”என்றார் பஷுர் பொதுவாக!
மதமல்ல வன்முறை அதன் பேரில் நம் மனம் கொள்ளும் மதமே வன்முறை என நினைத்துக் கொண்டாள் சிவேனேஸ்வரி.
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.