Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

Chillzee KiMo Only BooksChillzee KiMo Books

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - வித்தியாசமானவன்! - ரவை - 5.0 out of 5 based on 1 vote
Pin It

சிறுகதை - வித்தியாசமானவன்! - ரவை

confused

ன்னிரண்டாம் வகுப்பு 'சி' செக்‌ஷன் தமிழ் ஆசிரியர், வகுப்பின் இறுதி பத்து நிமிடங்கள், மாணவர்களின் பொது அறிவுக்கு தீனி போட, கேள்விகள் கேட்பார், மாணவர்களும் உற்சாகமாக பங்குகொண்டு மகிழ்வர்.

அன்றைக்கு, அவர் கேட்ட முதல் கேள்வி: "உங்களில் சந்தோஷத்தை விரும்பாதவர் யாரேனும் உண்டா?" என்பதே!

மாணவர்கள் ஒட்டுமொத்தமாக, 'கொல்'லென சிரித்தபோது, கடைசி பெஞ்சிலிருந்த மாணவன் அறிவழகன், கைதூக்கியதைக் கண்ட, வகுப்பும் ஆசிரியரும் மூச்சுவிட மறந்தனர்.

சிறிதுநேரம் கழித்து, ஆசிரியர் தொடர்ந்தார்.

" நான் அந்தக் கேள்வியை ஒரு முகவுரையாக கேட்டேனே தவிர, இப்படி ஒரு மாணவன் கைதூக்குவான் என நினைக்கவே இல்லை! எனது எண்ணம், சந்தோஷம் என்பது ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது என்பதை விரிவாக விளக்கவே நினைத்தேன், பரவாயில்லை, கைதூக்கிய மாணவன் நிகில் இப்போது நமக்கு சந்தோஷத்தை அவனுக்கு ஏன் பிடிக்காது என விளக்கிச் சொல்வான்."

 நிகில் சிறிதும் தயங்காமல் பேசினான்.

" நிரந்தரமான சந்தோஷமோ, நீடித்த சந்தோஷமோ யாராவது அனுபவித்ததுண்டா? நிச்சயமாக அனுபவித்திருக்க முடியாது, ஏனெனில், சந்தோஷம் என்பது உணர்வு, மனதில் பிறந்து வளர்ந்து மடிவது! மனது மாறிக்கொண்டே யிருப்பதால், அதன் உணர்வும் மாறித்தான் ஆகவேண்டும். இதை அறிந்த பெரியவர்கள் சொன்னது, ஒரு கோலின் இரு முனைகள் சந்தோஷமும் துயரமும்! சந்தோஷம் முடியும், துயரம் துவங்கும் என்பது மாற்றமுடியாத ஒன்று! உதாரணமாக, நமக்கு மிகவும் பிடித்த மாங்கனியை பார்த்தவுடனேயே, நாவில் சலைவா ஊறும், ஆவலுடன் ஒரு கனியை தாவி எடுத்து கடித்து, முழங்கையில் சாறுவழிய சுவைத்துச் சாப்பிடுவோம், இரண்டாவது கனி உண்ணும்போது, கொஞ்சம் சுவை குறையும், மூன்றாவது கனி உண்ணும்போது, இன்னும் குறையும், நான்காவது கனி, வேண்டாம் என தவிர்த்துவிடுவோம், உண்மையா, இல்லையா? இன்னொரு உதாரணம் பார்ப்போம், நாம் இன்பமாக இருக்கும்போது, மாங்கனி உண்பது சந்தோஷம் தரும், அதே மாங்கனியை, நாம் துயரத்தில் வருந்தும்போது, தொடுவோமா

 அதனால், சலனமில்லாத, மனம் இயங்காத, வெறுமை நிலையில் பெறும் அமைதிதான் நாம் அடைய ஆசைப்படவேண்டும். புத்தர், அதனால்தான் நம் எதிரியே, நம் ஆசைதான், என்றார்........."

 ஆசிரியர் உட்பட எல்லோரும் கரவொலி எழுப்பி ஆமோதித்தனர்!

 அடுத்த தமிழ் வகுப்பு! கடைசி பத்து நிமிடம்!

 மாணவர்கள் ஆர்வமுடன் ஆசிரியர் கேட்கப்போகிற கேள்வியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

 " இன்று நீங்கள் ஒவ்வொருவராக அவரவருக்கு யாரை மிகவும் பிடிக்கும் என பெயரை மட்டும் சொல்லுங்கள்!"

 " அண்ணல் காந்தி அடிகள்"

 "சத்யசாயி பாபா"

 " ரஜினிகாந்த்"

 " இளையராஜா"

இப்படி எல்லோரும் சொல்லியபோது, நிகிலின் முறை வந்தது. அவன் வித்தியாசமானவன் ஆயிற்றே! எல்லோரும் ஆவலுடன் அவனைப் பார்த்தனர்.

 " எனக்கு மிகவும் பிடித்த நபர், நான்தான்!"

 வகுப்பில் இருந்த அனைவரும், ஆசிரியர் உட்பட, ஆச்சரியத்துடன் அவனை பார்த்தனர்.

 " நிகில்! சற்று விளக்கமாக சொல்லமுடியுமா?"

 " பிடித்தல் என்ற சொல்லுக்கு, நேசித்தல், அன்பாயிருத்தல், என்று நான் பொருள் கொள்வது, சரிதானே?"

 " சரிதான்!"

 " நீங்கள் எல்லோரும் என் நலன் விரும்பிகள்! உங்களிடத்திலே, நான் பொய் சொல்ல விரும்பவில்லை! ஒவ்வொரு வினாடியும் நான் என் உடலை, மனதை, அறிவை, உணர்வை மூன்றாவது மனிதனாக உற்றுப்பார்த்து அவைகள் இயங்கும் நேர்த்தியை ரசிக்கிறேன். அப்பப்பா! முதலில், உடலைச் சொல்கிறேன், காலில் கல் இடித்தால், அடுத்த நொடியே, ரத்தம் கசிகிறது, கண் அழுகிறது, வாய் திறக்கிறது, குரல் ஒலிக்கிறது, ஒன்றுக்கொன்று சொல்லிவைத்தாற்போல, ஒரு வினாடிக்குள் தவறின்றி நடக்கின்றன! இவைகளுக்கு யார் சொல்லிக் கொடுத்தது? தகவல் எப்படி ஒன்றுக்கொன்று கண் இமைக்கும் நேரத்தில் பரவுகிறது, அழகு! அற்புதம்! இதை நேசிக்காமல் எப்படி இருக்கமுடியும்

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - வித்தியாசமானவன்! - ரவைரவை.. 2019-05-04 07:18
Thanks, Abhimahesh!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வித்தியாசமானவன்! - ரவைAbiMahesh 2019-05-03 20:42
Nice Story Sir! Arivu has romba different & deep thinking
:thnkx: Sir
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வித்தியாசமானவன்! - ரவைரவை.. 2019-05-02 15:00
Dear Madhumathimma! I never imagined my story would kindle so many thoughts and remembrances in you! I amvery happy you liked the story immensely!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வித்தியாசமானவன்! - ரவைmadhumathi9 2019-05-02 14:39
wow appadiye thicbirammai pidithathu pola irukkiren aiya :hatsoff: :hatsoff: enna oru thelivu antha paiyanukku.arumaiyaana kathai (y) :clap:
Naan idhupola chinna vayadhil yosithathu undu.intha ulagam eppadi uruvaachu.illaamal irunthaal eppadi iruppom endru.
Vaaltugal sir :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top