(Reading time: 5 - 10 minutes)

 " பட்டப்பகல்லே, மக்கள் நடமாட்டம் அதிகமா இருக்கிற நேரத்திலே, லாரியிலே, ஒரே ட்ரிப்பிலே, நெடுஞ்சாலையை தவிர்த்துவிட்டு, உள்ளூர் வழியாகவே, தேர்தல்குழு கண்காணிப்பாளர் கண்ணிலே படாமல், எந்த ஊரிலேயிருந்து எந்த ஊருக்கு வேண்டுமானாலும் போயிடலாம். எப்படி என் யோசனை!"

 வேறெந்த உருப்படியான யோசனையும் இல்லாத நிலையில், இந்த யோசனையை எடுத்துக்கொண்டு தேர்வுக்குழுவிடம் ஓடினர்.

 அங்கே அந்த நாலாவது போட்டியாளர் கழுத்தில் மாலைகளுடன் ஆதரவாளர்கள் சூழ, வாய்திறந்த சிரிப்புடன் அமர்ந்திருந்தார்.

 " ஐயா! வணக்கம்! என்னை வேட்பாளரா தேர்ந்தெடுத்துட்டாங்க! இந்தாங்க லட்டு! தயவுசெய்து நீங்க முழு ஒத்துழைப்பு தரணும்........."

 " அதுசரி, நீங்க என்ன யோசனை சொன்னீங்க?"

 " சாதாரணமா எப்பவும் எங்கேயும் செய்வதையே சொன்னேன். வித்தியாசம் என்னன்னா, ரேட் கொஞ்சம் அதிகம்!"

 " என்ன சொல்றீங்க?"

 " தேர்தல் குழு கண்காணிப்பாளர்கள் என்ன, ஆகாசத்திலிருந்தா குதித்து வந்திருக்காங்க? நம்மளைப்போல ஒருத்தர்தானே! அவங்க மொத்தம் பத்துப்பேர்! ஆளுக்கு ஐம்பது கோடி கள்ளப்பணம், அவங்க சொல்கிற வித்த்திலே போய் சேர்ந்துடும். நம்ம காரோ, லாரியோ போனா, அவங்களுக்கு நம்பர், டிரைவர் பெயரோட முன்பே தகவல் கொடுத்துடுவோம், அவங்க 'செக்' பண்றாமாதிரி பாசாங்கு பண்ணிட்டு அனுப்பிடுவாங்க! அவ்வளவுதான்."

 ஆகா! இந்த எளிமையான வழி, நமக்கு ஏன்தோன்றவில்லை என யோசிக்கையில்,

 " ஐயா! இதைவிட சிக்கலானது, நாம வாக்காளருக்கு கொடுக்கிற பணம், இடையிலே உள்ளவங்களாலே விழுங்கப்படாம, வாக்காளரை அடைந்து, அவங்க நமக்கு சாதகமாக வாக்கு அளிக்கிறதுதான்! வாங்க! அதைப்பற்றி யோசிப்போம்!" 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.