(Reading time: 9 - 17 minutes)

சிறுகதை - எனக்கு எல்லாம் தெரியும்! - ரவை

nota

" தாத்தா! நீ கொஞ்சம் வாயை மூடிண்டு சும்மா இருக்கியாஎனக்கு எல்லாம் தெரியும்!"

 " கோவிச்சிக்காதே, பாபு! உனக்கு எது தெரியாது என்பதுகூட உனக்கு தெரியாது!"

 " வேதாந்தமா? தாத்தா! நீ இப்படி உன் ஆயுள் பூராவும் வார்த்தை விளயாட்டிலேயே பெரிய மனுஷனா பேர் வாங்கிட்டே!"

 " பாபு! உன்னை பக்கத்து வீட்டு பீமராவ் பெண்ணுக்கு வயதென்னன்னு கேட்டா, டக்குனு, பதினெட்டு வயது மூணு மாதம் நான்கு நாள்னு சொல்லுவே........."

 " தாத்தா! நான்கு நாளில்லே, மூணேநாள்தான் ஆயிருக்கு.........."

 " ஐ ஸ்டேண்ட் கரெக்டெட்! ஆனா, பக்கத்து வீட்டிலே ஒருமாதமா கிணற்றிலே தண்ணீர் வரண்டுபோய், வெளியிலிருந்து வாட்டர் டேங்கர் தண்ணீர், காசு கொடுத்து வாங்கறது தெரியுமா?"

 " அது அவங்க வீட்டு பிரச்னை, நம்ம வீட்டிலே தண்ணீரில்லேன்னா எனக்கு தெரியணும்..........."

 " அப்படியா! நம்ம வீட்டுக்கு சொத்துவரி எவ்வளவு, தண்ணீர் வரி எவ்வளவு தெரியுமா? அந்த வரிகள் மாசாமாசம் கட்டணுமா, ஆண்டுக்கொருமுறை கட்டணுமா,ன்னு தெரியுமா?"

 " ஒரு வேலையை ஒருத்தருக்கு மேலே பார்த்தால், அது மேன்பவர் வேஸ்ட்! நீதான் அதெல்லாம் கரெக்டா செய்யறே! நான் நாட்டுநடப்பு பற்றி தெரிஞ்சு வைச்சிருக்கிறேன்........."

 " அப்படியா? இந்த நாட்டிலே பாண்டட் லேபர் முறை இருக்கா, போயிடுத்தா?"

 " தாத்தா! அந்த முறையை ஒழிக்க சட்டம் வந்தே, ஐம்பது வருஷமாச்சு!"

 " ஆனா, இன்னமும் அடிமைத் தொழிலாளர் குடும்பங்கள் வாழ்வது தெரியுமா, உனக்கு? அது போகட்டும், இந்த நாட்டிலே நூற்றுமுப்பது கோடி மக்களிலே, சுதந்திரம் கிடைத்து, எழுபதாண்டுகளுக்கு மேலாகியும், எத்தனை கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள், எத்தனை கோடி மக்கள் படிப்பறிவு இல்லாமல் வாழ்கிறார்கள், சுதந்திரம்னா என்னன்னுகூட தெரியாமல் வாழ்கிறார்கள், என்பதெல்லாம் தெரியாது, முகேஷ் அம்பானியின் சொத்து எவ்வளவு கோடி என்பது மட்டும் தெரியும்! கறிகாய் விலை, அரிசி விலை, பால் விலை தெரியாது, உலகப் பொருளாதாரம் தெரியும் உனக்கு......"

 " தாத்தா! என் மானத்தை வாங்காதே! நான் சரண்டர்! உனக்கு இப்ப என்ன வேணும் சொல்லு!"

 " சொன்னால், செய்வியா?"

 " கட்டாயமா செய்யறேன், இல்லேன்னா என்னை நீ கிழி கிழின்னு சொல்லாலேயே கிழிச்சிடுவியே!"

 "பாபு! நேற்று ராத்திரி நீ தூங்கினபிறகு, உங்கப்பாவும் அம்மாவும் ரெம்ப நேரம் ஏதோ காரசாரமா பேசிக்கிட்டிருந்தாங்க! என்ன விஷயம்னு விசாரித்து சொல்லேன்!"

 " தாத்தா! இந்த குசும்புதானே வேண்டாங்கிறேன்! அவங்க பேசிக்கிட்டதை கேட்டது, நீ! உனக்கே தெரிஞ்சிருக்கணும். இல்லேன்னாலும், உன் பிள்ளை, உன் மருமகள்! அவங்களை நீ கூப்பிட்டு நேரிடையா கேட்டால், சொல்லமாட்டாங்களா? என்னை ஏன் வம்பிலே மாட்டிவிடறே?"

 " பாபு! எனக்கோ காது டமாரம்! சங்கு ஊதினாக்கூட கேட்காது. இரண்டாவது, என்கிட்ட ரெண்டுபேருமே சில விஷயங்களை தெரிவிக்க மாட்டாங்க! அது தப்பில்லே! எனக்கு வயசாயிடுத்து, நிம்மதியா இருக்கட்டும் என்கிற நல்லெண்ணம்!"

 " நிம்மதியாயிரேன்......."

 " முடியலியேடா! இந்த வீட்டுக்குள்ளேயே இருந்துண்டு, என்னைச் சேர்ந்த உங்களை பாதிக்கிற விஷயங்களை கேட்டு தெரிஞ்சி என்னால் முடிந்ததை செய்யாம, நடுத்தெரு பிள்ளையார்மாதிரி, உட்கார்ந்திருக்க முடியலைடா!"

 " ஓ.கே. தாத்தா! கீவ் மி சம் டைம்! ரெண்டு நாளிலே சொல்றேன்."

 பேரன் நகர்ந்ததும், தாத்தா டி.வி.யில் தேர்தல் நிலவரம் பற்றி தெரிந்துகொள்ள அமர்ந்தார்.

 ஒவ்வொரு சேனலில் ஒவ்வொரு விதமாக கணிப்பு வெளியாகிக் கொண்டிருந்தது.

 "அப்பா!"

தாத்தாவை மருமகள் அப்படித்தான் அழைப்பாள். அவள் சிறு வயதிலேயே தந்தையை இழந்தவள். 

 " உட்காரும்மா! என்ன வேணும், சொல்லு!"

 " டி.வி. சேனல்கள் எல்லாமே அரசியல் கட்சிகளோ, அவைகளை சார்ந்தவங்களோ நடத்தப்படுகின்றன. அதனாலே, அவங்க அவங்களுக்கு சாதகமாத்தான் உண்மையை திரித்து சொல்லுவாங்க! அதனாலே, இதை பார்க்கிறது வேஸ்ட்!"

 "ராணி! நீ சொல்றது ரொம்ப கரெக்ட்! நியூஸ் பேப்பர்களும் அப்படித்தானே இருக்கு! அதனாலே, உண்மையை தெரிஞ்சிக்கணும்னா நாமே நேரிலே மக்களை சந்திச்சு தெரிஞ்சுக்கவேண்டியதுதான்!"

 " நடக்கிற விஷயமா பேசுங்கப்பா! நம்ம ஒரு தொகுதியை சுற்றி வந்து மக்களோட பேசி அவங்க எண்ணத்தை தெரிஞ்சிக்கிறதுக்கே அஞ்சு வருஷமாயிடும், தவிர, மக்களும் நிமிஷத்துக்கு நிமிஷம் அபிப்பிராயத்தை மாற்றிக்குவாங்க, எல்லாத்துக்கும் மேலே, யார் அதிகமா காசு கொடுக்கிறாங்களோ, அவங்களுக்கே ஓட்டுன்னு தீர்மானித்தபிறகு, டி.வி.யோ, செய்தித் தாள்களோ என்ன செய்யமுடியும்? அதனாலே, இந்த குப்பைகள் நமக்கெதுக்கு? நம்ம காரியங்களை கவனிப்போம்!" 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.