Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - நல்லதோர் வீணை செய்தே.... - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Pin It

சிறுகதை - நல்லதோர் வீணை செய்தே.... - ரவை

veenai

தொலைக்காட்சியிலே விவேக் காமெடி சீன் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதில், விவேக்கின் பிரபலமான வசனம் வரும், 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்'னு! அதைக் கேட்டதும் எனக்கு கோதையின் ஞாபகம் வந்தது!

 அந்த வீட்டில் எப்போதும் மங்களகரமான இசை ஒலித்துக்கொண்டே யிருக்கும். ஒன்று, அந்த வீட்டு மகாலட்சுமி, கோதை வீணை வாசித்துக் கொண்டிருப்பாள்! அல்லது, வீணை இசை மேதைகள் எஸ். பாலசந்தர், சிட்டிபாபு, தனம்மாள், மைசூர் துரைசாமி ஐயங்கார் போன்றவர்களின் இசைத்தட்டுகள் சன்னமாக ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும்!

 காலையில் எழுந்து, குளித்து, வாசல் தெளித்து, கோலம்போட்டு, சுவாமியறையில் விளக்கேற்றி, ஸ்லோகம் சொல்லி தீபதூபம் காட்டி பூஜையை முடித்துக்கொண்டுதான், காபி தயாரித்து குடித்துவிட்டு, முன் அறைக்கு வந்து டி.வி.யை 'ஆன்' செய்து கோவில்களில் நடக்கும் காலை பூஜைகள், கந்தசஷ்டிகவசம், ஆன்மீக சிந்தனை, இன்றைய ராசிபலன், கேட்டு முடித்துவிட்டு அன்றைய செய்தித்தாளில் மூழ்கி எழுவாள்!

 என்ன, அந்த வீட்டில் அவள் மட்டுந்தானா, வேறு யாரும் இல்லையா என்ற கேள்வி எழுவது நியாயந்தானே!

 ஆம், அவள் மட்டுந்தான்! அவளுக்கு மட்டுந்தான் ஐ.டி. கம்பெனியில் வேலை கொடுத்து அமெரிக்காவில் உள்ள ஹ்யூஸ்டனுக்கு அனுப்பியிருக்கிறார்கள். 

 ஷுகர்லேண்ட் பகுதியில், இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள், வாழ்கிற பகுதி அது! மீனாட்சி கோவிலுக்கு அருகில் உள்ள பகுதி! 

 கம்பெனியில் அந்த வீட்டை ஐந்து வருஷ குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள்!

 அந்த பெரிய வீட்டில், நான்குபேர் தாராளமாக தங்கலாம்! கோதை வருவதற்குமுன் நான்கு இளைஞர்கள் தங்கியிருந்த வீடுதான்!

 கோதை பெண் என்பதால், அந்த நால்வருக்கு வேறு இடம் தந்து மாற்றிவிட்டு, தற்போதைக்கு கோதை மட்டும் தங்க வைத்திருக்கிறார்கள். விரைவிலேயே, இந்தியாவிலிருந்து வரவிருக்கிற மூன்று பெண்களுக்கு அந்த வீட்டில் தங்க வைக்க திட்டம்!

 கோதை வீட்டில்தான், சேலையணிவது, இசையில் தன்னை மறப்பது, பெயருக்கேற்ப ஆண்டாள் பாசுரம் பாடுவது, கோலம் போடுவது எல்லாம்! காலையில் ஆபீஸ் கிளம்பும்போது, அவளைப் பார்க்கவேண்டுமே, அமெரிக்கப் பெண்ணைப் போலவே உடுத்தியிருப்பாள். நுனிநாக்கினால் ஆங்கிலம் பேசுவாள்.

 ஆபீஸில், இந்தியாவிலிருந்து அவளுடன் இங்குவந்து பணியாற்றுபவர்களுடன் மட்டுமே, இந்திய மொழியில் பேசுவாள். அவளுக்கு தமிழைத்தவிர, இந்திய மொழிகளில், இந்தி, தெலுங்கு மொழிகளும் தெரியும். ஏனெனில், அவள் படித்ததெல்லாம் செகந்தராபாத்தில்! அவள் அப்பாவுக்கு அங்கு டாடா கம்பெனியில் உத்தியோகம்!

 இந்தியாவிலேயே கார் ஓட்டப் பழகி பன்னாட்டு லைசென்ஸ் வாங்கிவைத்திருந்தது, ஹ்யூஸ்டனில் லைஸென்ஸ் பெற சௌகரியமாயிருந்தது. கம்பெனி காரை, அவள் உபயோகத்துக்கு அளித்திருந்தனர். ஏனெனில், அவள்தான் அங்கு வேலைசெய்யும் கம்பெனி ஊழியர்களின் லீடர்!

 ஒரு பெரிய அமெரிக்க கம்பெனியின் மூவாயிரம் தொழிலாளர்களின் மாதாந்திர சம்பளப்பட்டியலை தயாரிப்பது இவர்கள் வேலை!

 அமெரிக்கர்களுடன் சரளமாகப் பேசியும் பழகியும் அவர்களுடன் நெருக்கமாகிவிட்டாள், கோதை! அமெரிக்கர்களுக்கு 'கோதை'என்று சொல்லவராது, 'கொட' 'கொட' என அழைப்பார்கள்.

 கோதையின் இந்திய நண்பர்கள் அவளை 'அம்ப்ரெல்லா' என பரிகாசம் செய்வர்!

 அமெரிக்கர்கள் அடிக்கடி பார்ட்டி வைப்பார்கள். ஆபீஸ்நேரம் முடிந்து, மாலையில் துவங்கும் பார்ட்டி முடிவதற்கு இரவு நேரமாகிவிடும்.

 தவறாமல் அந்த பார்ட்டிக்கு கோதையை அழைப்பார்கள்! 

 " எக்ஸ்யூஸ் மீ! எனக்கு மது அருந்தும் பழக்கமில்லை, அதனால் நான் வரவில்லை......."

 " நோ நோ கொட! யூ ஹேவ் சாப்ஃட் டிரிங்ஸ்! யூ ஷுட் ஜாயின் அஸ்!"

 கோதை, அழைப்பை தட்டமுடியாமல், முதன்முறை பார்ட்டிக்கு சென்றிருந்தபோது, மற்றவர்கள் தங்கள் 'கேர்ல் ஃபிரெண்ட்', 'பாய் ஃபிரெண்ட்'டுடன் வந்திருந்தனர்.

 "கொட! வேர் ஈஸ் யுவர் பாய் ஃபிரெண்ட்?"

 " ஆல் ஆஃப் யூ ஆர் மை குட் ஃபிரெண்ட்ஸ்!"

 " நோ, நோ! யூ ஷுட் ஹேவ் யுவர் பாய் ஃபிரெண்ட்! ஷெல் ஐ பீ யுவர் பாய் ஃபிரெண்ட்?"

 கோதை குலை நடுங்கினாள். என்ன செய்வது என புரியாமல், இந்திய நண்பர்களில் தமிழ் இளைஞன் ஒருவனை 'பாய் ஃபிரெண்ட்' ஆக்கிக்கொண்டாள். 

 பிறகுதான் தெரிந்தது, அவன் மடாக்குடியன் என்று!

 பார்ட்டி முடிந்து மற்றவர்கள் வீட்டுக்கு கிளம்பினாலும், மடாக்குடியன் சுலபத்தில் கிளம்பமாட்டான். தள்ளாடி தள்ளாடி வந்து, கோதையின் காரில் ஏறிக்கொள்வான். வேறுவழியின்றி, அவனை, அவன் தங்கியிருக்கும் இடத்தில் விட்டுவிட்டு தன் வீட்டுக்கு செல்வாள்.

 இந்த தொல்லையிலிருந்து எப்படி விடுபடுவது என கோதை யோசித்தாள். 

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5 
 •  Next 
 •  End 

About the Author

RaVai

RaVai's Popular stories in Chillzee KiMo

 • Avan kaathil vizhumAvan kaathil vizhum
 • Nee en amma illaiyaaNee en amma illaiyaa
 • Anbin aazhamAnbin aazham
 • AzhaguAzhagu
 • Gangai oru MangaiGangai oru Mangai
 • Naan oru thavarum seiyyalaNaan oru thavarum seiyyala
 • Paaravaiyai thiruthuPaaravaiyai thiruthu
 • VithiyasamaanavanVithiyasamaanavan

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: சிறுகதை - நல்லதோர் வீணை செய்தே.... - ரவைhari k 2019-06-04 17:32
(y) (y) paathukapatra indha ulagil yaraium nambi irukamudivathilai....very nice sir :hatsoff: :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நல்லதோர் வீணை செய்தே.... - ரவைரவை.. 2019-06-04 18:38
Thanks, Hari!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நல்லதோர் வீணை செய்தே.... - ரவைAdharvJo 2019-06-03 20:08
:angry: 3:) disgusting guy!!
Even after being swindled this girl kodhai has not changed facepalm ippo vandha ponnu mattum sariyanavala illaiyanu theriyama nattpu paratuvadhu thavaru thane steam innum our keta palakuthu enter aguranga facepalm ena solluvadhunu theriyalai :no:

nice story uncle with valuable message :clap: :clap: keep rocking :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நல்லதோர் வீணை செய்தே.... - ரவைரவை.. 2019-06-03 20:19
மிக்க நன்றி, ஜோ!
மனித நேயம், பண்பு, நேர்மை எல்லாம் காற்றில் பறக்கவிட்டாச்சு!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நல்லதோர் வீணை செய்தே.... - ரவைரவை.. 2019-06-03 16:40
Thanks, Madhumathimma!
The irony is human values have lost their value!
Values given to fairplay, chastity, respect for others and the like have been given a go-by! Either you succumb or perish by fighting!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நல்லதோர் வீணை செய்தே.... - ரவைmadhumathi9 2019-06-03 15:07
facepalm idhanaal thaan munnorgal aangalai kandaal thalli nirkka sonnaargalo? idhupol silar iruppadhaal ella aangalaiyum santhega kan kondu paarkkum nilaikku thallappadugirathu.nalla kathai. :clap: pengal evvalavu padiththaalum evvalavu uyaraththirkku ponaalum miga kavanamaaga irukka vendum ena unarththugirathu. (y) :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top