(Reading time: 11 - 21 minutes)

சிறுகதை - மாற்றமே ஆனந்தம்! - ரவை

winds-of-change

"ப்பா! எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சுப்பா! நான் நினைக்கிறது, எதுவுமே நடக்கமாட்டேங்குது..............."

 " கண்ணா! முன்னுக்குப்பின் முரணா பேசறே! நீ நினைக்கிறது நடக்காமல் போவதற்கும், வாழ்க்கையை வெறுப்பதற்கும் என்ன சம்பந்தம்?"

 " நீ கேட்கிறதுதான் வேடிக்கையா இருக்கு! நாம நினைக்கிறது நடந்தால்தானே சந்தோஷமா இருக்கமுடியும்?" 

 " நல்லா யோசனை பண்ணிச் சொல்லு! நீ நினைக்காமலே நல்லது நடந்தா சந்தோஷப்பட மாட்டியா? வாழ்க்கையிலே எப்பவும் நாம நினைக்கிறதே நடந்தால், அதிலே என்ன த்ரில் இருக்கு?என்ன சுவாரசியம் இருக்கு? போரடிக்கும்! நினைக்கிறதும் நினைக்காத ஒண்ணும் நடந்தால்தான், கலந்து வந்தால்தான், வாழ்க்கை ருசிகரமாயிருக்கும், இப்ப பார்! உன் பிள்ளை, என் பேரன், கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறான், அவனை கேட்கிறேன்..........."

 " ரவி! தினமும் கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறியே, போரடிக்கலே? ஒருத்தன் ஓடிவந்து போடற பந்தை, இன்னொருத்தன் மட்டையாலே அடிக்கிறான், இதுவே திரும்பத் திரும்ப நடக்குது, வெறுத்துப் போகலே?"

 " தாத்தா! என் பக்கத்திலே உட்கார், கொஞ்சம்! இந்தப் பக்கத்திலேயிருந்து, ஒருத்தன் பந்து வீசறானே, அவன் ஒரு பந்து வீசறாப்பலே, இன்னொரு பந்து வீசமாட்டான்! அதனாலே, மட்டை பிடிச்சு அடிக்கிறவன், பந்து எங்கே பிட்ச் ஆகிறது, வலது பக்கமா வருமா, இடது பக்கமா வருமா, இடுப்புக்கு கீழே வருமா, மேலே வருமா எல்லாம் பார்த்து அடிக்கணும், இதெல்லாம் கண்மூடி கண் திறக்கிற நேரத்துக்குள்ளே, முடிவு எடுத்தாகணும், சரியான முடிவா இருந்தா, பந்து மைதானத்துக்கு வெளியிலே போய் விழும், சரியில்லேன்னா, மைதானத்துக்கு உள்ளே விழும், ரொம்ப சரியில்லேன்னா, மட்டையிலேயே படாம ஸ்டம்ப்பிலே பட்டு அவுட்டாகலாம்! படாம வெளியே போச்சுன்னா, ரன்னும் இல்லே, அவுட்டும் இல்லே, இத்தனைவிதமா நடக்கிறதுதான், இதிலே உள்ள த்ரில்! எல்லா பந்தும் சிக்ஸர் போனாலும்சரி, அவுட்டானாலும் சரி, படு போர் அடிக்கும். புரிஞ்சுதா?"

 " எனக்குப் புரிஞ்சுது, உங்கப்பனுக்கு சொல்லு!"

 கண்ணன் ஜூட்! அந்த இடத்திலேயே இல்லை!

 சிறிது நேரம் கழித்து, கண்ணன் கடைக்கு கிளம்பிக்கொண்டிருந்தான்.

 " கண்ணா! மனசு முழுக்க ஏமாற்றமும் சலிப்பும் நிரம்பி வழிந்தால், உன்னாலே எந்தக் காரியமும் செய்யமுடியாது, ஆனால் செய்யவேண்டிய காரியமோ நிறைய இருக்கு. கடையிலிருந்து வீடு திரும்பியதும், நிறைய பேசுவோம். இப்ப, ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உறுதியா மனசிலே நிரப்பிகிட்டு, கிளம்பு!"

 " சொல்லுப்பா!"

 " நாம் எதையும் கொண்டு வரலே, போறபோதும் ஒரு தூசியைக்கூட எடுத்துக்கொண்டு போகமுடியாது, அதனாலே, நம்ம கையிலே இருப்பதெல்லாம் வந்தது, மேற்கொண்டு வந்தால் சந்தோஷம், வரலேன்னாலும், வருத்தமில்லை! எதிர்பார்ப்புகளே வேண்டாம்! சரியா?"

 " ஓ.கே.ப்பா!"

கண்ணன் ஆபீஸ் கிளம்பிவிட்டான். பேரன் ரவியும் காலேஜ் சென்றுவிட்டான். மருமகள் சமையலறையில், ஏதோ முணுமுணுத்துக்கொண்டே, சமைத்துக்கொண்டிருந்தாள்.

 பெரியவருக்கு நியூஸ்பேப்பரிலும் கவனம் செலுத்த முடியவில்லை, டி.வி. காட்சிகளிலும், மனம் ஒன்றவில்லை!

 மருமகள் என்ன முணுமுணுக்கிறாள், அவளுக்கு என்ன குறை, அதை தன்னால் முடிந்தால் தீர்த்துவைக்கலாமே என்னும் ஆதங்கம்!

 " சாரதா! ஸ்டவ் சரியா எரியாம தகராறு பண்ணுதா? நான் வேணுன்னா, கேஸ் மெகானிக்கை வரச்சொல்லட்டுமா?"

 அவருக்கு தெரியும், மருமகளின் முணுமுணுப்புக்கு அது காரணமில்லை என்று! இருந்தாலும், சின்ன மீனை போட்டு பெரிய மீனை இழுக்கிற தந்திரம்!

 அவர் யுக்தி உடனடியாக வேலை செய்தது.

 மருமகள் உடனே சமையலறையிலிருந்து வெளியே வந்தாள்.

 " அதில்லேப்பா! இந்த வேலைக்காரியை நூறு தடவை 'சீக்கிரம் வா, லேட் பண்ணாதே'ன்னு சொன்னாலும், காதிலேயே போட்டுக்க மாட்டேங்கறா, எனக்கு சமையலுக்கு பாத்திரம் இல்லாம திண்டாட வேண்டியிருக்கு! இவளை நிறுத்தித் தொலைச்சிடலாமான்னு ஆத்திரமா வருது! ஆனா, வேற வேலைக்காரி யாரும் கிடைக்க மாட்டேங்கறா......"

 " சொல்றேனேன்னு கோவிச்சுக்காதே! தினமும் இதையே புலம்பிக்கொண்டே இருப்பதை நிறுத்திட்டு, மாற்றுவழி ஏதாவது இருக்கான்னு யோசிச்சியா?"

 " இருக்கிற வேலையிலே, எனக்கேதுப்பா நேரம்?"

 " சரி, ஒரு பேச்சுக்கு நீ சொல்றாப்பலே, உனக்கு யோசிக்க நேரமில்லைன்னே வைச்சிப்போம். எனக்கு நிறைய நேரம் இருக்கு, நான் யோசிக்கட்டுமா?"

 " என்னை ஏம்ப்பா கேட்கிறீங்க, தாராளமா யோசிச்சு எனக்கு பிரச்னை தீருகிற வழியை சொல்லுங்க!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.