(Reading time: 15 - 30 minutes)

 " அப்படியா! ஆச்சரியமாயிருக்கே! அப்ப, இங்கிருக்கிற தமிழர்கள் எதையும் மிஸ் பண்ணலைன்னு சொல்லுங்க "

 " ஆமாம், கோதை! கிளம்புங்க!"

 இருவரும் கோதையின் வீட்டுக்குள் நுழைந்து வீணையை ஸ்டேண்டில், பத்திரமாக வைத்தனர்.

 மாதவன் சுற்றுமுற்றும் பார்த்தான். வாயை பிளந்தான்!

 " கோதை! வீடு கிளி கொஞ்சறது, பிரமாதமா வைச்சிருக்கீங்க, ஆமாம், வேற யாரும் காணோம், நீங்க தனியாகவா இருக்கீங்க?"

 கோதை தலையசைத்தாள்!

 " மை காட்! நீங்களும் நம்ம கட்சிதானா! பேர்ட்ஸ் ஆஃப் தி சேம் ஃபெதர்! நானும் தனியன்தான்! ஆனா, எனக்கு நண்பர்கள் அதிகம். எப்பவும் கூடிப் பேசி ஜாலியா இருப்போம், இப்ப நீங்களும் சேர்ந்துட்டீங்க, இனி தினமும் இந்த நாள் இனியநாள்தான்!"

 கோதை சிரித்தாள்.

" சரி, கோதை! டிரஸ் சேஞ்ச் பண்ணிண்டு வாங்க, போகலாம்!"

" ஏன், இந்த டிரஸ் நல்லாயில்லையா?"

 விதி இப்படித்தான் ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் விளையாடுகிறது!

" நோநோ! யூ லுக் ஆன் ஏஞ்சல்! தேவதைபோல ஜொலிக்கிறீங்க! என் கண்ணே திருஷ்டி பட்டுடும் போலிருக்கு! தப்பு, தப்பு! வீட்டிலே வயசானவங்க இருந்தா, சுற்றிப் போடுவாங்க!"

" நீங்க எனக்கு மூத்தவர்தானே! சுற்றிப் போடுங்களேன்!"

நாக்கிலே சனி!

" இட் இஸ் மை ப்ளெஷர்! கோதை! கொஞ்சம் உப்பு, மிளகாய் இருந்தா கொண்டாங்க!"

" சும்மா தமாஷுக்கு சொன்னேன், என்னைப் பார்த்து யார் திருஷ்டி போடப்போறாங்க?"

" கோதை! என் அடுத்த நாடகத்திலே, நீங்கதான் ஹீரோயின்! ரசிகர்கள் சொல்லுவாங்க, நீங்க எவ்வளவு அழகுன்னு!"

" நாடகமா! நீங்க போடறீங்களா! என்ன சொல்றீங்க?"

 மாதவன் கோதையுடன் டின்னருக்குப் போகும் வழியில், தன்னைப் பற்றியும் இதுவரை தான் வெற்றிகரமாக அரங்கேற்றிய ஐந்து நாடகங்களைப் பற்றியும் ஊர்முழுவதும் தன்னை ஓகோ என்று புகழ்வதையும் கோதை நம்பும்படியாகவும் பிரமிக்கும்படியாகவும் விளக்கினான்.

 ஓட்டலில், சாப்பிட்டுக்கொண்டே, பேச்சை தொடர்ந்தனர்.

 " கோதை! வழக்கமா ஹீரோயினா நடிக்கிறவங்க, நியூயார்க் மாற்றலாகிப் போயிட்டாங்க, அவங்க இல்லாம மூணுமாசமா நாடகம் போடமுடியாம திண்டாடறேன்......."

 " வேற யாரும் கிடைக்கமாட்டாங்களா?"

 " நிறையபேர் என்னை சுற்றி சுற்றி வந்து நச்சரிக்கிறாங்க, எனக்குத்தான் அவங்களாலே நடிக்கமுடியாதுன்னு தோணுது, அதனாலே தான், உங்களை கெஞ்சி கேட்டுக்கிறேன், நீங்க ஹீரோயினா நடிக்க ஒத்துக்கணும்.........."

 " ஐயையோ! நானா? எனக்கு நடிக்கவே தெரியாது, பழக்கமே கிடையாது, ஆளை விடுங்க!"

 "ப்ளீஸ்! கோதை! நடிப்புன்னா, உருண்டு, புரண்டு, நெளிஞ்சு, நடனமாடி, பத்து நிமிடம் மூச்சுவிடாம டயலாக் பேசறதெல்லாம் இல்லை, நான் மருதநாட்டு ராஜா! நீங்க ராணி! பார்க்கிறதுக்கு எடுப்பா ராணி மாதிரி இருக்கணும், டயலாக்கும் நீளமா கிடையாது, நான் கேட்பதற்கு 'ஆம்', 'இல்லை'னு ஒத்த வார்த்தையிலே பதில் சொன்னால் போதும், முக்கியமானது பெர்சனாலிடி! பார்க்கிறதுக்கு ராணிமாதிரி இருக்கணும், மக்கள் ஏத்துக்கணும், கோதை! ப்ளீஸ்! மக்கள் உங்களை பார்த்து ராணியா நிச்சயமா ஏத்துப்பாங்க!........"

" எனக்கு பயமாயிருக்கு.........."

" நான் மூவ்மெண்ட்ஸ் எல்லாம் சொல்லித்தரேன், ரிகர்சல் உங்க வீட்டிலேயே வைச்சிக்கலாம், கிராண்ட் ரிகர்சலுக்கு மட்டும், ஹாலுக்கு வந்தால் போதும்........"

" மாதவன்! வேண்டாம், விஷப் பரீட்சை! வேற யாரையாவது பாருங்க!"

" உங்களுக்கு உங்கபேரிலேயே நம்பிக்கை இல்லை, பயப்படறீங்க, சரி, ஒண்ணு செய்வோம்! நாம் டின்னர் முடிச்சிண்டு, உங்க வீட்டுக்கு போவோம், உங்களுக்கு நடிக்க, டயலாக் பேச, மூவ்மெண்ட்ஸ் பண்ண சொல்லித்தரேன். ட்ரை பண்ணுங்க, நம்பிக்கை வந்ததுன்னா, ஹீரோயினா ஆக்ட் பண்ணுங்க! இல்லேன்னா விட்டுடுங்க, நான் உங்களை அப்புறம் தொந்தரவு பண்ணமாட்டேன், டீலா?"

 அவன் கேட்ட வேகத்திலே, தன் கையை நீட்டிய துடிப்பிலே, கோதை ஒரு கணம் மதியிழந்தாள்!

 அதுதான் விதி! சில மணி நேரத்திலே மாதவன் ( ஶ்ரீமன் நாராயணன்) நடத்திய நாடகத்திலேவீணை வாசித்தவளின் வாழ்க்கை, தோணியேறி ஆற்றின் மறுகரைக்கு போகப்போவதை அவள் அறியவில்லை!

 அறிஞர் அண்ணா, அந்தக் காலத்திலே, 'ஓரிரவு'ன்னு ஒரு நாடகம் போடுவார், பிறகு அதுவே சினிமாவாகவும் வந்தது! 

 அதுபோல, அந்த ஓரிரவு கோதையின் வீட்டிலே தன்னந்தனியாக கோதையும் மாதவனும் நடத்தியது பயிற்சியல்ல; சூழ்ச்சி! 

 புழுவுக்கு ஆசைப்பட்ட மீன் வலையில் சிக்கியது!

 கோதை என்ற பெயரே காணாமல்போய், 'ராணி' என்ற பெயர் நிலைத்துவிட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.