(Reading time: 9 - 17 minutes)

 என்று சொன்னதோடு நிற்காமல், தொலைக்காட்சி பெட்டியையும் நிறுத்திவிட்டாள்.

 தாத்தாவுக்கு புரிந்துவிட்டது, மருமகள் வேறு ஏதோ அவசரமாக பேச வந்திருக்கிறாள் என்று!

 " அப்பா! நேற்று ராத்திரி எனக்கும் உங்க பிள்ளைக்கும் இடையே ஒரு சின்ன வாக்குவாதம்!.........."

 " சின்னதில்லை போலிருக்கே, கொஞ்சம் காரசாரமாவே இருந்தாப்பலே இருக்கே?"

 " வார்த்தைகளிலே உஷ்ணம் இருந்ததே தவிர, விஷயத்திலே இல்லை......"

 " சரி, கணவன்-மனைவிக்கிடையே நடந்ததை என்னிடம் சொல்லலாமா?"

 " இது உங்களுக்கோ, எங்களுக்கோ, இந்தக் குடும்பத்திலுள்ள ஒருத்தருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது, பொதுப்பிரச்னை!"

 " சரி, சொல்லு! சுவாரசியமா இருக்கும் போலிருக்கே........."

 " நாளைக்கு தேர்தல் வாக்கெடுப்பு நடக்கப்போகுதில்லையா,அது விஷயமாத்தான் பேசினோம்......."

 " வெரி குட்! என்ன சொல்றான், என் பிள்ளை?"

 " என்னைப் பார்த்து, 'நீ யாருக்கு ஓட்டுப் போடப்போறே' ன்னு கேட்டாரு, ' அது ரகசியம். சீக்ரெட் பேலட்'டாச்சே! ன்னு சொன்னேன்...."

 " வெரி குட்! தமாஷா இருக்கே! மேலே சொல்லு! அவரு சொல்றாரு, தேர்தல்லேபோட்டியிடற கட்சிகளோ, தனிநபரோ, எவருமே சரியில்லே, ஊரப்பணத்தை கொள்ளையடிக்க போட்டி போடறானுங்க, இவங்களுக்கு ஓட்டுப்போட, கால் கடுக்க கியூவிலே நின்னு நம்ம டயத்தை வேஸ்ட் பண்ணணுமான்னு கேட்கிறாரு......"

 " நல்ல கேள்விதான்! நீ என்ன சொன்னே?"

 " அப்பா! வாக்குரிமை ஒன்றுதான் ஜனநாயகத்திலே மக்கள் கையிலே இருக்கிற ஒரே ஆயுதம்! அதுவும் ஐந்து வருஷத்திற்கு ஒருமுறைதான் கிடைக்குது, அதை வீண் அடிக்கக்கூடாது இல்லையா, அதனாலே நான் சொன்னேன், யாராவது ஒருத்தருக்கு ஆதரவா போடலாம்னு சொன்னேன்......"

 " சீட்டு குலுக்கி தேர்ந்தெடுக்கப் போறியா?"

 " இல்லேப்பா! எனக்கு, அதிர்ஷ்டவசமா, ஒரு நல்ல காரணம் கிடைச்சிருக்கு........."

 " அப்படியா! குட்! என்ன காரணம்?"

 "இந்த நாட்டிலே, மக்கள் தொகையிலே பாதிக்கு மேலே இருக்கிற பெண்களுக்கு சமநீதி கிடைக்கலே! ஏன்? நீதியே கிடைக்கலே! இல்லை, இல்லை, வாழவே முடியலே!..........."

 " உண்மைதான்.........."

 "வயசுவந்த பொண்ணு, வயசான கிழவி, மூணு வயசுப்பொட்டைப்புள்ளை, ஒருத்தரை விடறதில்லை, இந்த பொறுக்கிப் பசங்க! பஸ்லே பெண்களை கண்ட இடத்திலே தொட்டு இம்சைப்படுத்தறானுங்க! கல்லூரியிலே மாணவிகளை பேராசிரியர்களே கையை பிடித்து இழுக்கறானுங்க, ஆபீஸ்லே அதிகாரிங்க தொல்லை, போலீஸ் ஸ்டேஷனிலே கம்ப்ளெயிண்ட கொடுக்கப் போற பொம்பளை ஒருத்தியாவது, சீரழியாம திரும்பி வந்திருக்காங்களா

 சரி, சமூகத்திலே அந்த அயோக்கியனுங்களுக்கு எதிரா எத்தனை ஆம்பளைங்க போராடத் தயாராயிருக்காங்க

 கிரிக்கெட் ஒரு விளையாட்டு தானே! அதிலேகூட, ஆண்களுக்கு அதிக பணம்,கோடிக்கணக்கிலே! பெண்களுக்கு அதிலே பாதிகூட இல்லை!

 பார்லிமெண்ட்டிலே மூன்றிலே ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கணும்னு எத்தனை வருஷமா போராடறோம், இதோ வருது, அதோ வருதுங்கறாங்களே தவிர, பின்னாடி நின்னு கவிழ்த்திடறாங்க! இந்த விஷயத்திலே எல்லா கட்சிக்காரங்களும் ஒரேமாதிரி சிந்திக்கிறாங்க, பெண்கள் வரக்கூடாதுன்னு!

 அப்பா! நீங்களே சொல்லுங்க, இத்தனை காரணங்களை வெளிப்படையாகச் சொல்லி, ஒரு பெண் சுயேச்சையா போட்டி போடறா, அவளுக்கு இந்த தொகுதியிலே இருக்கிற அத்தனை பெண்களும் சப்போர்ட் பண்ணணுமா, வேண்டாமா? எங்களுக்காக, எங்களை நம்பி, நிக்கிற வளை, நாங்க ஆதரிக்கலேன்னா, அது துரோகம் இல்லையா?

 அதனாலே நான் அவளுக்கு ஓட்டு போட்ட கட்டாயம் வாக்குச்சாவடிக்கு போகத்தான் போறேன்னு சொன்னேன்........"

 " நியாயந்தானே! பெண்களை பெண்களே ஆதரிக்கலேன்னா எப்படி? ஆணாதிக்கத்துக்கு சாவுமணி அடிக்க காலம் கனிந்து வரபோது, வீட்டிலே தூங்கலாமா?'

 " அப்பா! இது உங்களுக்கு தெரியுது, உங்க பிள்ளைக்கு தெரியலியே!"

 " அவன் என்ன சொல்றான்?"

 " எல்லா ஆம்பளைங்களும் என்ன சொல்லி பெண்களை கீழே போட்டு மிதிப்பாங்களோ, அதையே உங்க பிள்ளையும் சொல்றார்......."

 " அடப்பாவி!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.