(Reading time: 5 - 10 minutes)

சிறுகதை - இது நம்ம கதை! - ரவை

women

அனைவருக்கும் வணக்கம்! இன்றைய இந்த சிறுகதை ரவை அவர்கள் எழுதி Chillzeeயில் பகிர்ந்திருக்கும் நூறாவது சிறுகதை! 😱😱😱 குறுகிய காலத்தில் இத்தனை கதைகள் எழுதி அசத்தி இருக்கும் அவருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!! 👏👏👏

- Chillzee டீம்!

சுலேகா, அந்தச் செய்தியை படித்துவிட்டு, தாங்கமுடியாத கோபத்திலும் ஆத்திரத்திலும், வாய்விட்டு புலம்பினாள்.

" இந்த அக்கிரமத்தை கேட்பாரே இல்லையா? ஒரு உயிர், காமுகர்களுக்கு, கிள்ளுக்கீரையாகி விட்டதை, உலகம் எப்படி வேடிக்கை பார்க்கிறது? உடனே அந்த கயவர்களை சித்திரவதை செய்து சிரச்சேதம் செய்திருக்க வேண்டாமா? இதென்ன நாடா, சுடுகாடா? இவர்களுக்கு மான, அவமானமே கிடையாதா? இவர்கள் வீட்டுப் பெண்ணை, வேறொரு கும்பல், இப்படி உயிரோடு தீ வைத்து கொளுத்தினால், இவர்களுக்கு எப்படி இருக்கும்?..... "

 மகள் உரக்க யாரையோ சபித்துக்கொண்டிருப்பதை கேட்டு, சமையலறையிலிருந்து வெளியே வந்து சுலேகாவின் தாய், அவளை விசாரித்தாள்.

 " என்னாச்சு? ஏனிப்படி கோபமா கத்தறே

 " பின்ன என்னம்மா? இப்படியா ஒரு உயிருள்ள இருபது வயது கன்னிப் பெண்ணை, அவள்மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தி அவள் வெந்து கருகி சாம்பலாவதைப் பார்த்து ஒரு ரௌடிக் கும்பல் சந்தோஷப்படுவது? அதைக் கேட்டும், அந்த ஊர் மக்கள், அவர்களை இன்னமும் உயிரோடு விட்டுவைப்பது?"

 "அடப்பாவிங்களா? எந்த ஊரிலே?"

 " நம்ம பக்கத்து நாடு பங்களாதேஷிலேதான்! அந்தக் கும்பலின் தலைவன், அந்தப் பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்ததும், அவ போலீஸிலே புகார் கொடுத்திருக்கா! உடனே அந்த கும்பல், அவளை தாங்கள் இருக்கும் இடத்துக்கு, இழுத்துவந்து, புகாரை திரும்பப் பெறச் சொல்லி வற்புறுத்தியிருக்காங்க, அவ மாட்டேன்னு சொன்னதும், ரெடியா வைச்சிருந்த பெட்ரோலை அவள்மீது ஊற்றி கொளுத்தியிருக்காங்க, அயோக்கியப் பசங்க! இந்த அக்கிரமத்தைக் கேட்டதும், அந்த ஊர் மக்கள், அந்தக் கும்பலை, பெட்ரோல் ஊற்றி கொளுத்தி யிருக்கவேண்டாமா?"

 " சுலேகா! அண்டை நாட்டைவிட கேவலமாநம்ம நாட்டிலே நடக்கிற அக்கிரமங்களை பார்த்தும், கேட்டும்நம்ம நாடு இன்னமும் அந்த அக்கிரமங்களை தடுக்கமுடியாமல், இங்கொன்றும் அங்கொன்றுமா ஒருத்தர் ரெண்டுபேரை சிறையில் தள்ளிவிட்டு, அத்தோடு மறந்துவிடவில்லையா?"

 " ஆமாம்மா! நீ சொல்றது, ரொம்ப கரெக்ட்! தேர்தல் பிரசாரங்களிலே, எந்தக் கட்சியாவது, எந்த தலைவனாவது, இந்த பெண்கள் பாதுகாப்பு பிரச்னையைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லையே! பொள்ளாச்சி கொடூர சம்பவத்தைப்பற்றிக்கூட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் எதுவுமே ஒரு வார்த்தை பேசலையே! ஏன்?"

 " சுலேகா! எல்லா கட்சிகளிலேயும், ஆண்கள் ஆதிக்கம்தான்! பாலியல் பலாத்காரம் செய்வது ஆண்கள்தானே! அவர்கள் எப்படி தங்களுக்கு தாங்களே குழி தோண்டிக் கொள்வார்கள்?"

ஆனால், சுலேகா! இதைவிட கேவலான அக்கிரமச் செயல், ராஜசபையிலேயே, அமைச்சர்கள், ஞானிகள், தளபதிகள், அரசகுமார்ர்கள், முன்னிலையிலேயே, ஒரு அரசகுமாரி திரௌபதியை துச்சாதன்ன் துயில் உறியவில்லையா? அவளுக்கு தாலி கட்டிய ஐவருமே, பஞ்ச பாண்டவர்களே, தலைகுனிந்து, நெட்டைமரமாக நின்றதை கண்டித்து, மகாகவி பாரதி, பாஞ்சாலி சபதம் எனும் காவியத்திலே திட்டித் தீர்ப்பான்.

 ராமாயணத்திலே, இப்படித்தான், எவனோ ஒரு வண்ணான் தன் மனைவியிடம் நள்ளிரவிலே, சீதை ராவணனிடம் கெட்டுப்போனவள்னு சொன்னதைக் கேட்டு, ராம்பிரான் என்ன செய்தார்? அந்த வண்ணானை அழைத்து, ஏற்கெனவே சீதை இதே குற்றச்சாட்டுக்காக தீக்குளித்து தன்னை நிரபராதின்னு நிரூபித்துவிட்டாள்னு சொல்லியிருக்கவேண்டாமா? என்ன செய்தார், ஶ்ரீராமசந்திரமூர்த்தி? கர்ப்பிணியாக இருந்த சீதையை காட்டுக்கு அனுப்பினார். தம்பிகள் மூவரோ, மந்திரிகளோ, ஞானிகளோ, யாராவது ராமனை தடுத்து நிறுத்தினார்களா

 பெண்களை ஆண்கள் கொடுமைப் படுத்துவது இன்றல்ல, நேற்றல்ல, சாதாரண குடிமகனில்லே, அரசர்களில்லே, பாமரனில்லே, படிச்சவனில்லே, எல்லா ஆண்களும் செய்து வருவதுதான். இதில் கொடுமை என்னன்னா, பெண்கள் இதை எதிர்க்கவோ, கண்டிக்கவோ முன்வருவதில்லை..........."

 " இதற்கு ஒரு முடிவு கட்ட நாம் ஏதாவது செய்யவேண்டாமா?"

 " செய்வோம்! யோசித்து செய்து வெற்றி பெற்று புரட்சி செய்வோம்."

 " அம்மா! இந்த வயசிலேயே இத்தனை வீரமா, விவேகமா பேசறியே, எனக்கு உன்னை நினைத்தால், ரொம்ப பெருமையா இருக்கும்மா!"

 "இப்ப பெருமைப்படற நேரமில்லே, அவமானப்பட்டு தவிக்கிறோம். அந்த அவமானத்தை துடைத்தெறிய வழி கண்டறிவோம், முதல்லே!"

 " அந்த வழியை கண்டுபிடிக்க, என்ன செய்யலாம்?"

 " பெண்கள் பாதுகாப்புன்னு பொதுவா பேசினால், ஆளுக்கொருவிதமா வியாக்கியானம் செய்வார்கள். அதனாலே, முதல்லே, நாமே அதை திட்டவட்டமா விளக்கியாகணும்இது முதல் காரியம்.

இரண்டாவது, இந்த பாதுகாப்புக்கு இன்றைய காலகட்டத்தில், எந்தெந்த விதங்களில், யார் யாராலே, எப்படி எப்படியெல்லாம் பங்கம் ஏற்படுகிறது,ன்னு ஒரு பட்டியல் தயாரிக்கணும். மூன்றாவது, அந்த பங்கங்களை தடுக்க இன்றைய சட்டங்கள் எந்த அளவுக்கு உதவும், மேற்கொண்டு என்னென்ன சட்டங்கள் கொண்டுவரணும், அப்படி கொண்டுவர சட்டங்களை நடைமுறையில் செயல்படுத்த அரசு நிர்வாகம் எப்படியெல்லாம் திருத்தப்படவேண்டும், என்பதை தெளிவாக நாமே விளக்கவேண்டும்........"

 " அம்மா! இரு, இரு, நீ சொல்வதைப் பார்த்தால்இது நாமிருவர்மட்டுமே செய்யக்கூடியதாக தெரியவில்லை. நான் இப்போதே, என் நண்பர்கள், நமது எண்ண அலைவரிசையில் இணைந்து நிற்பவர்கள், தேவி, அதர்வா ஜோ, மதுமதி, ஜெபமலர், ச்சிரேகா, அபிமகேஷ், ஹரி, விஜி, சில்ஸீ டீம் எல்லாருக்கும் இதை தெரிவித்து, அவர்கள் சிபாரிசுகள் கிடைத்ததும், தொகுத்து வழங்குவோம். சரியா?"

 " நல்ல யோசனை, செய்!" 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.