(Reading time: 8 - 15 minutes)

சிறுகதை - இடுக்கண் வருங்கால் நகுக! - ரவை

dog-mans-best-friend

ந்த வீட்டிலிருந்த அனைவருமே பெரும் அதிர்ச்சியில் பேச்சுமூச்சற்று இருந்தனர், செய்தித்தாளில் அந்த செய்தியை படித்துவிட்டு!

 பெற்ற தந்தையே, அதுவும் பார்வையற்றவன், தன் மகளை குழந்தையிலிருந்து பல ஆண்டுகள், சீரழித்து வந்திருக்கிறான், அது மகளுக்கு விவரம் தெரியும் வயது அடைந்தபிறகுதான் புரிந்திருக்கிறது, நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது!

 அப்போது, வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழைந்த அந்த குடும்பத்தின் மூத்த மகன்

 " போச்சு! நம்பமுடியாத ஒன்று நடந்திருக்கிறது! மலை நகருகிறது! சிலை பேசுகிறது!"

 " விஷயத்தை சொல்லுடா, முதல்லே!"

 " சென்னை சூபர்கிங்ஸ் கேப்டன் டோனி, பொறுமைக்கும், சாந்தத்துக்கும், பக்குவத்துக்கும் உலகப்புகழ் பெற்ற டோனி, கோபமாக ஆடுகளத்தில் இறங்கி நடுவர்களுடன் வாதம் செய்தாராம், அவருக்கு உலகம் முழுவதிலுமிருந்து கண்டனம் வந்துகொண்டிருக்கிறது!"

 இப்படி நிகழக்கூடாதவை, நம்பமுடியாதவை, நாள்தோறும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன!

 சில வினாடிகள் அதிர்ச்சியில் இருப்போம், சில மணி நேரங்கள் அதைப்பற்றி பேசுவோம், கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, மறந்தே போய்விடுவோம். வாழ்க்கை தொடர்ந்து போய்க்கொண்டே யிருக்கும்!

 கதிரவன் தினமும் எழுவதும் விழுவதும், வான்மதி வளர்வதும் தேய்வதும், ஜீவராசிகள் பிறப்பதும் இறப்பதும், வாழ்வில் சுகமும் துக்கமும் மாற்றமே யில்லாதவை!

 ஆயினும், இந்த நடைமுறை சத்தியத்தை அடிக்கடி நாம் மறந்துவிடுவதுதான் உலகவரலாறு!

 எல்லாம் தெரிந்தவர்தான்! அனுபவம் மிக்கவர்தான்! ஏற்றத்தாழ்வுகளை அனுபவித்தவர்தான்! பிறருக்கு சுவையாக அறிவுரை வழங்குபவர்தான்!

 அவரே இன்று நிலை குலைந்துபோயிருக்கிறார்! கண்ணீர் வெள்ளம்போல் நிற்காமல் ஓடிக்கொண்டே யிருக்கிறது!

 குடும்பத்தைச் சேர்ந்த எவராலும், அவரை தேற்றமுடியவில்லை., ஏனெனில் ஏறக்குறைய, அவர்களும் அதே நிலையில் இருந்தனர்.

 "ஜூலி! நீ போயிருக்கிற இடம் சொர்க்கமே என்றாலும், நீ எப்படிடா நானில்லாம அங்கிருப்பாய்? நான் இங்கே நீயில்லாமல் தவிக்கிறாமாதிரி, நீ அங்கே தவிக்கிறாயோ!........."

 ஏழு வருஷமாக, அவருடனேயே ராப்பகலாக காலைச் சுற்றிவந்த இணைபிரியா தோழன், ஜூலி!

 அவருடைய நண்பர், ஏழு ஆண்டுகள் முன்பு, வெளிநாட்டிற்கு புறப்பட்டபோது, அவர் கொடுத்துவிட்டுப் போன குழந்தை ஜூலி!

 அந்த வீட்டில், அந்த குடும்பத்தில், ஜூலி அவரிடம்மட்டும் தான் கொஞ்சி விளையாடும், நக்கிக் கொடுக்கும், வாலை ஆட்டும், அவர் சொன்னபடி கேட்கும், அவர் தூங்கும்போது தூங்கி, எழும்போது கூடவே எழும்! தினமும் 'வாக்கிங்' அழைத்துப் போகிறபோது, தெருவில் வேறெந்த நாயுடனும் பழகாது, அவருடனேயே ஒட்டிக்கொண்டு நடக்கும். 

 பூங்காவில், புல் தரையில், அவருக்கு வேடிக்கைகள் காட்டும், குட்டிக்கரணம் அடிக்கும். 

 குடும்பத்தில் அவர் யாருடனாவது கோபமாகப் பேசினால், ஜூலியும் அந்த நபரைப் பார்த்து குரைக்கும்.

 அவர் ஆபீஸ் போகும்போது, அதற்குத் தெரியும். வீட்டுவாசல் வரையில் போய் வழியனுப்பிவிட்டு உள்ளே வந்து, ஓரமாகப் படுத்துக்கொள்ளும். காலையில் அவர் வைத்துவிட்டுப் போன உணவை சாப்பிட மனசில்லாமல் வைத்துவிடும். ஏனெனில், அவர் அதற்கு இரவு வந்து ஊட்டும்போது, அதனோடு பேசிக்கொண்டே ஊட்டுவார், அதுவும் புரிந்ததுபோல் தலையாட்டும், வாலாட்டும், எழுந்து முன்னங்கால்களை தூக்கி டான்ஸ் ஆடும், அவரையும் அந்த உணவை சைகையால் சாப்பிடச் சொல்லும்.

 இந்தக் குழந்தையை அவரால் எப்படி மறக்கமுடியும்?

 அவர் மாலையில் ஆபீஸிலிருந்து வீடு திரும்புகையில், தெருமுனை நுழையும்போதே, ஜூலிக்கு தெரிந்துவிடும், வாசலுக்கு வந்து அவர் வருகைக்காக வாலாட்டிக்கொண்டு காத்திருக்கும். அவர் வந்து காரிலிருந்து இறங்கியவுடன் அவர்மீது ஒரே பாய்ச்சலாகப் பாயும், அவர் முகத்தில் நக்கும். அவர் பதிலுக்கு அதை அணைத்துக்கொண்டு முத்தம் தருகிற வரையில் விடாது!

 இதையெல்லாம் நினைக்க நினைக்க அவருக்கு இதயமே வெடித்துவிடும் போலிருந்தது!

 ஜூலியை தன்வசம் ஒப்படைத்த அந்த நண்பரை, அவர் வாய்விட்டு சபித்தார்.

 " இப்படி இன்று நான் வேதனையில் வெந்து மடிவதற்கு காரணம் நீதான்! நீமட்டும் அன்று ஜூலியை என்னிடம் ஒப்படைக்காமல் இருந்திருந்தால், இன்று எனக்கிந்த நிலை ஏற்பட்டிருக்குமா?"

 அருகிலிருந்த அவருடைய மூத்த மகன், உடனே அவரை திருத்தினான்.

 " அப்பா! ஏழுவருஷம் உனக்கு ஜூலியின் பாசத்தை, ஒட்டுதலை வாரி வழங்கிய வள்ளலை, ஜூலி இருந்தவரையில் ஒருநாள்கூட, நீ உன் நண்பருக்கு நன்றி சொன்னதில்லை, அவரை நினைக்கக்கூட இல்லை; இப்போது இழப்புக்கு மட்டும் அவரை சபிக்கிறாயே, அது சரியில்லை!"

 அவர் மகனின் வார்த்தையில் இருந்த சத்தியத்தை உணர்ந்து, தன் தவறுக்கு வருந்தினார்.

 இதுதான் அவரை மீளா துக்கத்திலிருந்து மீட்க, சரியான சந்தர்ப்பம் என்று நினைத்த மகன், தந்தையுடன் பேச்சுக் கொடுத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.