(Reading time: 9 - 18 minutes)

சிறுகதை - பொல்லாத காசிம் - ReKa

love

யிஷா, கணித ஆசிரியை,தன் வகுப்பு முடித்துவிட்டு அணிச்சை செயலாக தன் செல் போனை பார்த்தாள்.10 முறை முகமது அழைத்திருந்தான். முகமது,பெயரை கண்டவுடன் அவள் முகம் மலர்ந்தது.ஆனால் 10 முறை அழைப்பது அவன் வழக்கம் அல்ல.ஒரு முறை அவள் அழைப்பை ஏற்காவிடில் காத்திருப்பான்,அவள் அவன் அழைப்பை அலட்சிய படுத்த மாட்டாள் என்று அறிவான்.

இன்று என்னாயிற்று என்ற பதட்டத்துடன் அவனை அழைத்தாள்.”அஸ்ஸலாமு அலைக்கும் ,முகமது கால் பண்ணீருந்தீங்களே”, வழக்கத்திற்கு மாறாக இருந்தது அவன் குரலும்.”அலைக்கும் வஸ்ஸலாம்,வாழ்த்துக்கள் “ என்றான்.அவன் குரலில் இருந்தது பாராட்டுதல் அல்ல,இகழ்ச்சி. என்னாயிற்று இவனுக்கு,அவனிடமே கேட்டாள், “என்னாச்சு முகமது ஏன் ஒரு மாதிரி பேசறீங்க”. “திருமணம் முடிவாகிட்டதாக கேள்விபட்டேன்,அதான் வாழ்த்தலாம்னு கால் பண்ணேன்”. தலையில் தணலை கொட்டினான் . “ என்ன சொல்றீங்க, எனக்கு திருமணம் முடிவானால் அது உங்களுடன் தானு உங்களுக்கு தெரியாதா”. “அப்போ உன் வீட்டில் முடிவு செய்திருப்பது”, என்றான். “ எனக்கு தெரியல முகமது,இன்னும் கொஞ்ச நேரத்தில் ஸ்கூல் முடிஞ்சுரும்,நான் என்னனு பாத்துட்டு உங்களுக்கு கால் பண்றேன்”. “அவசியமில்லை , நான் எல்லாம் விசாரிச்சுட்டேன்,உனக்கு தெரிந்தவன் தான்,உண்ணை விரும்புறானாம் ,அவன் பெற்றோருடன் போய் பொண்ணு கேட்ருக்கான்,உன் அத்தா(அப்பா) சரினு சொல்லிட்டார்,நல்ல பையன் தான் ,நல்ல வசதியும் கூட,உன்னாலும் மறுக்க முடியாது ”. “ என்ன முகமது அவளோ தான் என் மேல உங்களுக்கு நம்பிக்கையா” அவள் உடைந்தே விட்டாள்.அவன் அவளிடம் இது போல் பேசியதில்லை ,எது அவனை இவ்வளவு நம்பிக்கை இழக்கவைத்தது என்று குழம்பினாள்.

அவளை அதிகம் சோதிக்காமல் பள்ளி நிறைவு பெற்ற மணி ஒலித்தது.வேகமாக தனது இரு சக்கர வாகனத்தை எடுக்க வந்தாள்,அவன் அவளுக்காக காத்திருந்தான். “மன குழப்பத்துடன் நீ வண்டி ஓட்ட வேண்டாம், என்னுடன் காரில் வா”, என்றான். இது தான் முகமது, எப்பொழுதும் அவள் நலம் நாடுகிறவன். “என் வண்டி” என்றாள். “என் நண்பன் கொண்டுவருவான் “ என்றான். எல்லாவற்றிருக்கும் தயாராக தான் வந்திருக்கின்றான். ஆனால் அவன் தன்னிடம் பேசிய விதம் மட்டும் மனதை வலிக்க செய்தது. தன் படிப்பு முடியும் வரை திருமண பேச்சு வேண்டாம் என்று ஆயிஷா தான் அவனிடம் சொல்லியிருந்தாள்.அவள் ஒரு பள்ளயில் ஆசிரியை ஆக பணியில் சேர்ந்து 3 மாதம் தான் ஆகிறது,முகமது தன் வீட்டில் சொல்லி பெண் கேட்க வருவதாக சொல்லிருந்தான்,அதற்குள் இப்படி ஆகி விட்டதே என்று கவலையிலே வந்தாள்.இருக்கும் சூழலில் இன்னும் அவளை காயபடுத்த வேண்டாம் என்று நினைத்திருப்பான் போலும்,முகமதும் ஏதும் பேசவில்லை . அவள் வீட்டிற்கு கொஞ்சம் முன்பு அவளை இறக்கிவிட்டான். அவனின் நண்பனிடம் தன் வண்டியை வாங்கி கொண்டு தன் வீட்டை அடைந்தாள். சிறிது நேர அவனின் அருகாமையில் அவள் மனம் கொஞ்சம் சமன் பட்டிருந்தது . எதையும் சமாளிக்கும் திடம் வந்திருந்தது. 

வீட்டினுல் நுழைந்தாள்.பெரிய பட்டாளமே இருந்தது,அவள் வழி உறவினர்கள் மற்றும் பலர் இருந்தனர். இவளை கண்டவுடன் இவள் தாய் வயதுடைய பெண்மணி ஒருவர் வந்து இவளை உச்சி முகர்தார்,மாப்பிள்ளையின் தாய் என்பது இவள் ஊகம். அது சரி என்பது போல் அங்கிருந்த ஒரு மூத்த பெண்மணி பேசினார் ,”உன் மகன் காசிம்க்கு ஏற்ற ஜோடி தான்”. “ஆமாம் ஆமாம் “, என்று சிரித்து கொண்டார் மாப்பிள்ளையின் தாய். அந்த சிரிப்பு அவளுக்கு பரிச்சயமானதாக இருந்தது. மாப்பிள்ளை உனக்கு தெரிந்தவன் என்றானே என்று சிந்திக்களானால், அவளால் முடியவில்லை. அடுத்த என்ன செய்ய வேண்டும் என்பதிலேயே அவள் சிந்தனை இருந்தது.அப்போது மாப்பிள்ளையின் தாயின் பார்வை அவளைத்தான்றி வாயிலை அடைந்து.”வா காசிம்என்று தன் மகனை அழைத்தார். எல்லோரும் மாப்பிள்ளை வந்துவிட்டார் என்று பரபரப்பானார்கள்.இவளை அவசரமாக உள் அழைத்து சென்றார்கள் .இவளுக்கு கிடைத்த ஒரிரு நொடிகளில் ஆயிஷா மாப்பிள்ளையை பார்த்துவிட்டாள்.”அட பாவி, நீயா”, அவள் உள்ளம் கொதித்தது.அவள் பார்வையை கவனித்த மாப்பிள்ளையின் தாயார் கேட்டார்,” என் பிள்ளையை முன்னாடி தெரியுமா மா “, என்று.”பாத்திருக்கின்றேன் மா “என்றாள் பொதுவாக . இது எப்பொழுது எப்படி நடந்தது என்று பல குழப்பங்கள் . இதற்கு இருவர் தான் பதில் சொல்ல முடியும். இவள் பெற்றோர் மற்றும் மாப்பிள்ளை . அவனிடம் எதுவும் கேட்க ஆயிஷாவிற்கு பிடிக்கவில்லை. அவள் பெற்றோரிடம் இப்பொழுது தனிமையில் பேசுவது இயலாத காரணத்தால் பொறுமை காத்தாள்.அவளை புதிய பட்டு உடுத்தி அலங்கரித்து அமர வைத்தார்கள்.” ஏன் ஆயிஷா டென்சனா இருக்க” உறவுக்காரி ஒருத்தி கேட்டாள்.”ஏன்மா திடீரென திருமணம் பேசினால் டென்சனா இருக்காது”, சமாதானம் சொண்ணார் ஆயிஷாவின் நானி(தாய் வழி பாட்டி).அவளை விளையாட்டிற்க்கு கூட யாரையும் குறை சொல்ல விடமாட்டார் அவள் நானி.ஆயிஷா அவருக்கு மிகவும் பிரியமான பேத்தி.இதை கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்தால் அவன் காசிம் அல்லவே,” ஆனால் வரும்போதே ஆயிஷாவின் முகம் சரியில்லையே,நாம் வந்திருப்பது தெரியுமோ,யாரும் சொல்லியிருப்பார்களோ”, என்றான்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.