(Reading time: 9 - 18 minutes)

யாரு சொல்லியிருப்பானு உனக்கு தெரியாதா, எப்படி எதுவுமே தெரியாத மாரி நடிக்கிறான்”,மனதில் நினைத்துக்கொண்டாள். “இல்லை எனக்கு கொஞ்சம் தலை வலி”, என்றாள் ,அனைவர் முன்னிலும் அவனை முறைக்க கூட முடியாத தன் ஆற்றாமையை எண்ணி நொந்தபடி.”அச்சோ தலை வலியோட வந்த பிள்ளையை இப்படி அலங்காரம் பன்னி உக்காரவச்சுட்டீங்களே”என்று வருத்தப்பட்டார் காசிமின் தாயார்,அவளின் தலை வலிக்கு காரணமே தன் மகன் தான் என்பதை அறியாமல்.”நீ போய் rest எடுமா “என்று மருமகளை அனுப்பியும் வைத்தார்.அவள் செல்லும் முன் மாப்பிள்ளை காசிமை காண தவறவில்லை,ஏதோ சாதித்துவிட்ட மகிழ்ச்சியில் அவள் தந்தையிடம் சிரித்து சிரித்து பேசிக்கொண்டு இருந்தான்.

இருக்காது பின்னே “என்று மனதில் கருவிக் கொண்டாள்.அவன் தாயின் சிரிப்பை பரிச்சயமானதாக தோண்றியது ஏன் என்று இப்போது புரிந்தது.” சே இதை எப்படி மறந்தேன்” என்று தன்னையே நொந்து கொண்டாள்.இப்போதய சூழ்நிலையை மனதில் வைத்து அமைதியாக அவள் அறைக்குள் சென்றாள்.

அவள் பின்னே அவள் அன்னையும் வந்தார்.”ஸ்கூல் இல் இருந்து வந்து இவ்ளோ நேரம் அச்சு உனக்கு சாப்பிட குடுக்க மறந்துட்டேன் பாரு “ என்ற படியே அருகில் வந்தார் அவள் தாய்.”அது மட்டும் தான் மறத்தியா”, என்றாள் சுல்லென்று மகள்,”ஓ பொண்ணு பாக்க வராங்கனு சொல்லலைனு கோபமா”, அம்மா கெட்டிக்காரி சரியாக கணித்துவிட்டாள்.”நீ எப்போ எங்க பேச்சை மீறிருக்க ,அந்த தைரியம் தான் மா”,இப்போது என்ன சொல்ல முடியும்,அமைதியாக இருந்தாள்,அம்மாவே தொடர்ந்தார்,”நல்ல குடும்பம்,ஒரே பையன்,நல்ல வேலையில் இருக்கான்,என்ன ஒரே பையனு ரொம்ப செல்லமா வழத்துட்டாங்களாம்,அதான் கொஞ்சம் விளையாட்டுதனமா இருப்பானாம்,ஆனால் தங்கமான பையனாம் காசிம்”.இல்லை இவன் “பொல்லாத காசிம்”,அவன் அவளை சீண்டும் போதெல்லாம் அவள் அப்படித்தான் நினைத்துக்கொள்வாள்.அவள் ஓய்வு எடுக்கும் நேரத்தில் அங்கு திருமணம் பேச்சு முடிந்திருந்தது .முகமது சொண்ணது உண்மையாகிவுட்டது,அவளால் திருமணத்தை மறுக்க இயலவில்லை.

ஒரு மாதத்தில் திருமணம் என முடிவானது . முகமது சில முறை கால் செய்தான் .இவள் அவன் அழைப்பை ஏற்கவில்லை .அவள் மனநிலையை புரிந்து கொண்டு அவளை அழைப்பதை நிறுத்தி விட்டான்.நாட்கள் வெகு வேகமாக கடந்து திருமண நாளில் வந்து நின்றது.மணப்பெண் அலங்காரத்தில் ஜொலித்தால் ஆயிஷா.அவளின் சம்மதம் கேட்டு கையொப்பம் வாங்கினர்,அவளின் மாமியார் மகர்(மாப்பிள்ளையின் திருமண பரிசு) ஒரு அழகிய மாங்காய் வடிவ மாலையை அணிவித்தார்.பின் மாப்பிள்ளை அழைத்து வரப்பட்டு,பெண்ணின் கை மாப்பிள்ளையின் கையில் பிடிக்க பட்டு இறைவனை புகழ்ந்து மணமக்களின் நல்வாழ்வுற்கு பிராத்தனை செய்தார்கள் . திருமணம் நிறைவடைந்தது .உறவினர்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்தி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.காசிமை அவளுக்கு தெரியும், நன்றாக தெரியும் ,அதனால் அவனுடன் அவள் வாழ்வு எப்படி இருக்க போகிறது என்றும் அவள் அறிவாள்.அவளின் கவலையெல்லாம் தன் பெற்றோரை பிரிவதை பற்றித்தான் .இந்த துன்பம் தீர்ந்துவிடும் எனும்போதுதான் அவளால் அழ முடியும்.இது ஒரு போதும் மாற போவதில்லை எனும் போது அவள் இதயம் உறைந்துவிடும்,அவளால் அழ முடியாது.அதுதான் அப்பொழுதும் நடந்தது.அவள் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் இல்லை. தன் தாய் தந்தையை கட்டி பிடித்து விடைபெற்று தன் கனவனுடன் சென்றுவிட்டாள். 

புது பெண்ணிற்கு உரிய மரியாதையுடன் தன் புகுந்த வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தாள்.இவ்வளவு நேரத்தில் ஒரு முறை கூட காசிமை நிமிர்ந்து பார்க்கவில்லை.அவன் மீது கட்டுக்கடங்காத கோபத்தில் இருந்தாள்.அதை அவனும் உணர்ந்தே இருந்தான்.அவளுடணான தனிமைக்கு காத்திருந்தான்.அந்த நேரமும் வந்தது.அவளை கேலி கிண்டல்களுடன் காசிமின் அறையில் விட்டு சென்றார்கள் உறவுப்பெண்கள்.பதட்டத்துடன் உள் நுழைந்தவள் தலையை குனிந்தவாரே “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றாள்.கண்களில் புண்ணகை மின்ன “அலைக்கும் வஸ்ஸலாம்” என்றான்.நினைத்ததை அடைந்துவிட்டீர்கள் போல என்றாள் ஏளனத்துடன்,”ஏய் சாரி டி, சும்மா விளையாட்டுக்கு தான் யாரோ பொண்ணு பாக்க வந்த மாரி பேசினேன் ,அதுக்காக இவ்ளோ கோபம் ஆகாது டீ, நான் பாவம் தான,நான் எவ்ளோ நல்லவன் “என்று அருகில் வந்து கொஞ்சினான் அவளின் காதலன் முகமது காசிம்.இல்ல “ நீ பொல்லாத காசிம் “என்றாள் இன்னும் குறையாத கோபத்துடன்.

உன்கிட்ட சாரி சொல்லாம்னு எவ்ளோ தடவை கால் பண்ணேன் ,எடுத்தியா ,கல் நெஞ்சகாரி” என்றான்.”பின்ன யாரோ பொண்ணு பாக்க வந்துருக்காங்கனு கோபமா பேசுனீங்க,என்ன செய்றதுனு குழம்பி போய் போனா நீங்களே வந்து நிக்குறீங்க,எனக்கு எப்பிடி இருக்கும்”என்றாள் அன்றைய சிந்தனையில் .

முகமது காசிமோ சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டு கொண்டுயிருந்தான்.”சிரிச்சீங்க எனக்கு கோவம் வரும் “ என்று பல்லை கடித்தாள் ஆயிஷா.

”அம்மாடி உன் கோபம் போதும் தாயே,எதோ கல்யாண வேலையில் பிஸி ஆக இருந்ததாலே நீ பேசாம இருந்தப்போ சமாளிச்சுட்டேன்,இப்படி எல்லா உரிமையுடன் பக்கத்தில் வச்சுகிட்டுலாம்,முடியாது மா” என்றான் சின்ன சிரிப்புடன்.வழக்கம் போல் அவன் பேச்சுக்கு பதில் பேச வாய்யெடுத்தவள்,அவன் எல்லா உரிமையுடன் என்று கூறியதன் அர்த்தம் உணர்ந்து தலையை குனிந்து கொண்டாள்.”ஏய் வாயாடி, என்ன அமைதியாயட்ட என்றான்,சீண்டும் விதமாக.ஒன்றொமில்லை என்பதாக தலையை அசைத்தாள்.”ரொம்ப பயந்துட்டியா அன்று “என்றான்.”தெரியுதுல” என்று தோள் சாய்ந்து கொண்டாள்.”சாரி டீ” இனிமே இப்படி செய்ய மாட்டேன்,என்றான்.இப்படி எத்தன முறை சொல்லீட்டீங்க,ஆனா மாறவேயில்லை என்று குறை பட்டாள் ஆயிஷா. “என்ன செய்ய அது அப்படியே பழகீடுச்சு டா” என்றான் .”அப்போ திரும்ப இதே மாரி பண்ணுவீங்களா” என்றாள் அதிர்ச்சியுடன்.அது அப்போ முடிவு பண்ணலாம் ,இப்போ வேற ஒரு முக்கியமான முடிவு எடுப்போம் “என்றான் சீரியஸாக,என்ன முடிவு, என்றவளிடம் நமக்கு முதல் குழந்தை ஆணா பெண்ணா என்றான் கள்ள சிரிப்புடன்.உங்களை திருத்தவே முடியாது என்று கோபமாக சொல்ல எண்ணி கொஞ்சலாக சொல்லி அவன் சிரிப்பில் கலந்தாள் ஆயிஷா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.