(Reading time: 4 - 8 minutes)

சிறுகதை - விடியலை நோக்கி !!! - தங்கவேல்

திங்கள் இரவு 9  மணி।

இருண்டவானம் மழை வருவதற்கு அறிகுறிகள் காட்டி கொண்டு இருந்தது. முருகன் இன்னும் வரவில்லை மஞ்சுளா ஜன்னல் வழியாக கேட்டை  எட்டி பார்த்து கொண்டு இருந்தாள் பதைபதைப்பான மனதுடன்। காலையில் நடந்த சம்பவங்கள் அவனை காயபடுத்தி விட்டதோ என எண்ணினாள்.

மஞ்சுளா நல்ல வடிவான குடும்ப பெண் என அவளின் மாமியார் பலமுறை சொல்ல கேட்டு இருக்கிறாள். மஞ்சுளா அப்பாவி  தன் அத்தை மகன் முருகனை தன் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக நின்று மனம் புரிந்து கொண்டாள். முருகனும் அவளை பாசமாக பார்த்து கொண்டான். மஞ்சுளாவுக்கு வாழ்க்கை இனிமையாக இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு வந்து கொண்டு இருக்கிறது என்பதை மறுப்பதற்குஇல்லை. குழந்தை இல்லை என நேர்முகமாக மனதை காயப்படுத்துகிறான்.

அவளும் சும்மா இல்லை கோவில் குளம் சென்று பல விரதங்கள் இருந்தாள், மருத்துவமனை சென்று தன்னை பரிசோதனை மேற் கொண்டாள் ஆனால்முருகன் ஒவ்வரு முறையும் வர மறுத்தான் வேறு வழி இல்லாமல் தன்னால் முயன்றதை செய்து அவன் மனதை மாற்ற முடிவு செய்தாள். குழந்தை பற்றி பேசினாலே அவன் முகம் குடுத்து பேச மறுக்கிறான் என்பதை புரிந்து கொண்டு அமைதி காத்து காலம் கனிய இறைவனை வேண்டினாள்.

கதவு தட்டும் சத்தம் கேட்டு நிஜஉலகுக்கு  வந்தாள் மஞ்சுளா। முருகன் வந்து விட்டான் மனது லேசானது।  உடை மாற்றி  முகம் கழுவி வந்து அமர்ந்தான்। மெல்ல சென்று "சாப்பாடு  கொண்டு வரவா" என்றாள் பதில் இல்லை திரும்பவும் கேட்டாள் பதில் இல்லை।

 அதற்கு மேல் பொறுமை இல்லை அவளுக்கு " ஏன் இப்படி பண்ணறீங்க நான் என்ன செய்ஞ்சா உங்க கோவம் போகும் சொல்லுங்க  " என்றாள்.

"நீ என் விட்டு போ அது போதும் நான் நிம்மதியா இருப்பேன் உன்னால் தான் என் சொந்தக்காரன்  ஒருத்தனும் மதிக்க மாட்டிக்காரன்" என்று நெருப்பை அள்ளி கொட்டினான் முருகன். 

இந்த வார்தை கேட்ட பிறகு தான் உயிர் வாழ்வது முறை இல்லை என முடிவு எடுத்தாள். அறைக்குள் சென்று தாளிட்டாள் தான் சேலை எடுத்து சீலிங் பேன் கோக்கில் மாட்டி கழுத்துக்கு கொண்டு சென்றால் சேலை இறுகியது அதற்கு மேல் என்ன நடந்தது என்று தெரியவில்லை அவளுக்கு.

கண் விழித்து பார்த்த போது மருத்துவமனைல் இருந்தாள் முருகன் எதிரில் நின்றான். "நீ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.