(Reading time: 8 - 16 minutes)

சிறுகதை - தனிமையில் இனிமை! - ரவை

னது இனிக்கும் தனிமை, அமர்ர் கல்கி எழுதி எம்.எஸ்.அம்மா பாடி பிரபலமான அந்தப் பாட்டை நினைவுபடுத்தியது!

 "பூங்குயில் கூவிடும் பூஞ்சோலையில் ஒருநாள்

 மாமயில்மீது மாயமாய் வந்தான்!

 பனிமலரதனில் தனிமணம் கண்டேன்

 வானில் கடலில் வண்ணங்கள் கண்டேன்

 தேனிசை வீணையில் தீஞ்சுவை கண்டேன்

 தனிமையில் இனிமையை கண்டேன்!"

 ஆனந்த மடம் அனாதை இல்லம், ஊருக்கு வெளியே, கிட்டத்தட்ட வனாந்தரமாக உள்ள இடத்தில், ஐம்பது ஆண்டுகளாக இயங்கி, பெற்றோரால் உதாசீனப்படுத்தப்பட்ட குழந்தைகளையும், பெற்ற பிள்ளைகளால் புக்கணிக்கப்பட்ட முதியவர்களையும் தன்னால் இயன்ற அளவு பாதுகாத்து வருகிறது!

 நான் பூர்வஜென்மத்தில் செய்த புண்ணியம், இன்று அதன் காப்பாளராக, என் நேரத்தை பயனுள்ளதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் செலவழிக்கிறேன்.

 சுற்றிலும் சோலை! பசுமைச் சொர்க்கத்தில், குயிலின் கூவலையும், மயிலின் ஆட்டத்தையும், குரங்கின் தாவலையும், நாயின் ஒட்டுதலையும் இல்லத்தில் உள்ள சிறார்களுக்கும் முதியோருக்கும் காட்டி அவர்களை என்னால் இயன்ற அளவு துயரை மறக்கவைக்க முயல்கிறேன்.

 ஆனால், மறக்கக்கூடிய அனுபவமா, அவர்களுடையது?

 இருங்க, இருங்க! ஒரு விஷயத்தை சொல்லிடறேன், நான் என்னை இல்லத்தின் காப்பாளர்னு அறிமுகப்படுத்திக் கொண்டதை வைத்து, என்னை ஏதோ டாடா, பிர்லா மாதிரி செல்வந்தர்னு நினைக்காதீங்க! நானும் ஒரு அனாதைதான்! இங்கிலீஷிலே 'கேர் டேகர்'னு சொல்வதைத்தான் காப்பாளர்னு சொன்னேன், நான் பல வருஷமா இங்கே இருக்கிறதனாலே, என்னிடம் அந்த பொறுப்பை ஒப்படைச்சிருக்காங்க, அவ்வளவுதான்.

 யாரோ வருவதுமாதிரி இருக்கு, பார்ப்போம் வாங்க!

 " ஐயா! ஊரிலே உள்ள தர்மவான்கள் தானமா கொடுத்த பொருள்களை கொண்டு வந்திருக்கிறேன், வாங்கி வைங்க!"

 அவன் பின்னே சென்று பார்த்தேன். லாரி ஒன்று நின்றிருந்தது, பரவாயில்லையே, நம்ம ஊரிலே நல்ல மனசு உள்ளவங்க நிறையபேர் இருக்காங்க போலிருக்கே, ஒரு லாரி பொருட்களிலே ஆடைகள், உணவுப் பொருட்கள், மேஜை நாற்காலி கட்டில் போன்ற மரச்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.