(Reading time: 8 - 16 minutes)

 ஐயா! நாம் எப்போதும் நமக்கு மேலே இருப்பவனுடன் ஒப்பிட்டால், வருத்தமே மிஞ்சும்! பதிலாக, நம்மைவிட மோசமான நிலையில் உள்ளவர்களைப் பார்த்து சமாதானப்படுத்திக் கொண்டு நாட்களை கடத்தவேண்டியதுதான்...."

 இந்தமாதிரி நிகழ்ச்சிகளை தனிமையில் எனக்குள் சிந்தித்து என் தனிப்பட்ட துயரை மறப்பேன்!

 ஏதோ முன்னுக்குப்பின் முரணாக பேசுவது போலிருக்கிறதா? விளக்குகிறேன், எப்படி துன்பத்தைப் பற்றி நினைக்கிற நேரம்கூட இன்பம் தருகிறதென்று!

 அதற்குள், என் அலைபேசி அழைப்பை ஏற்று பேசிவிட்டு, வருகிறேன், ப்ளீஸ்!

 "ஹலோ! ஆனந்தமடம் அனாதை இல்லம் காப்பாளர் பேசறேன்! உங்களுக்கு யாருடன் பேசவேண்டும்? என்னுடனா அல்லது இல்லத்தில் வாழ்கிற வேறு யாருடனாவதா?"

 ".................."

 " ஓ! அப்படியா! இந்த இல்லத்தின் நிறுவனர் எங்களுக்கு இட்டுள்ள கட்டளை, அடைக்கலம் நாடுகிற எவரையும் ஏமாற்றாமல், ஏற்றுக்கொள்ளுங்கள்! தேவையான கட்டிடம், நிதி, வசதிகள், நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார், அதனால் நீங்கள் உடனே அந்த ஐந்து வயது சிறுமியை அழைத்து வாருங்கள்! வேறு நல்ல ஏற்பாடு செய்யப்படும்வரை, நாங்கள் அந்த சிறுமியை கவனித்துக்கொள்கிறோம்.........."

 அலைபேசியை மூடிவிட்டு, நினைத்துப் பார்க்கிறேன்,

 குடும்பமாக தாய், தந்தை, மகன், மகள் நால்வரும் வாடகை காரில் பழனிக்கு சென்று முருகப் பெருமானை தரிசித்துவிட்டு வீடு திரும்பும்போது, காரின்மீது ஒரு லாரி மோதி அந்த இடத்திலேயே டிரைவர் உட்பட நால்வர் இறந்து, இந்த ஐந்து வயது சிறுமி மட்டும் பிழைத்துவிட்டாளாம்.

 அந்தக் குடும்பத்தின் உறவினரை தெரிந்து எவரிடம் சிறுமியை ஒப்படைப்பதென முடிவு செய்யும்வரை, இந்தச் சிறுமி அனாதைதானே! அவளை இங்கே கொண்டுவந்துவிடப் போகிறார்கள்.

 சரி, துன்பத்தில் மூழ்கி தவிக்கிற எனக்கு எப்படி தனிமை இனிமை தருகிறதென்ற வினாவுக்கு விடை தருகிறேன்:

 துவக்கத்தில், தனிமை எனக்கு தந்தது, நீங்கள் நினைப்பதுபோல, துன்பம்தான்! துயரத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிற ஒருவன், மற்றவர்கள் மத்தியில் இருந்தாலே, தன் துயரையே நினைத்து வருந்துவான், தனிமையில் மாட்டிக்கொண்டால் கேட்கவா வேண்டும்?

 திரும்பத் திரும்ப ஒரே பாதையில் சிந்தித்து என் மனதுக்கே அலுத்துப்போய், அடுத்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.