மனிதன்: ம்ம்ம்... ஆனால் பெஸ்ட்டா எதுவும் நடக்கலயே
கடவுள்: என்றைக்காவது சாப்பாட்டுக்கு டிரஸ்க்கு குறை இருந்ததா, உன்னோட கொஞ்ச வருமானத்தில கூட உனக்கு வேண்டியது எல்லாம் வேண்டிய நேரம் கிடைச்சிதா இல்லியா மகனே.
மனிதன்: ஆமாம், எனக்கு கூட பல சமயம் ஆச்சரியமா இருந்தது. ஆனால்...
கடவுள்: என்னப்பா ஆனால்... அதையும் கேட்டிடு..
மனிதன்: நான் உயிருக்கு உயிரா நினைச்ச என் கேர்ள் ப்ரண்டு என்னை விட்டு விட்டு போய்ட்டாளே...
கடவுள்: உன் உயிர் நான் கொடுத்தது தான அதான் எடுத்துட்டேன்..ஹாஹாஹா
மனிதன்: சிரிக்காம காரணம் சொல்லுங்க.
கடவுள்: உன்னோட எதிர் காலத்துல உன்னை தாங்குகிற ஆதரவாளரா இல்லாம உன்னை வேதனைப்படுத்துறவளா மாறி போய்டுவா அதான் அவளை இப்பவே கட் பண்ணிட்டேன்.
மனிதன்: ம்ம்ம்
கடவுள்: வேற எதாவது
மனிதன்: இல்ல எல்லாம் எனக்கு இப்போ தான் புரியுது.
கடவுள்: சரி நான் உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா.
மனிதன்: கேளுங்க
கடவுள்: நான் உன்னை எதுக்காக படைத்தேன்.
மனிதன்: தெரியலயே கடவுளே
கடவுள்: சரி விடு, இப்போ உன்னை தேடி நான் ஏன் வரணும்.
மனிதன்: அதுவும் தெரியலயே சாமி. நீங்களே சொல்லிடுங்க.
கடவுள்: நீங்க என்கிட்ட அன்பா பாசமா இருக்கனும் என்று தான் உங்களை படைத்தேன்.
மனிதன்: புரியலையே.
கடவுள்: அண்ட சராசங்களையும் படைத்து என் கட்டுப்பாட்டில வைத்திருக்கிறேன். மனிதனையும் தான்
மனிதன்: தெரியும் கடவுளே
கடவுள்: என்னுடைய படைப்புகள் எதுக்கிட்டேயுன் எதிர்பார்க்காத ஒன்றை மனிதர்கிட்ட எதிர் பார்க்கிறேன். அது என்னனு தெரியுமா?
மனிதன்: தெரியலையே