(Reading time: 5 - 9 minutes)

புத்தாண்டு 2020 ஸ்பெஷல் சிறுகதை - மனிதனை தேடி கடவுள் - ஜெப மலர்

டவுள்: ஹாப்பி நியூயர் மகனே

மனிதன்: என்னத்த ஹாப்பி, 

கடவுள்: மகனே, ஏன் இவ்வளவு வருத்தம். நீ என்னை தேடி வரவில்லை என்றாலும் நான் உன்னைத் தேடி வந்ததற்காகவாவது மகிழ்ச்சி கொள்ளலாம் அல்லவா?

மனிதன்: நீங்கள் தேடி வராமல் இருந்தால் கூட நல்லது நடக்கும் என ஒரு நம்பிக்கை இருந்திருக்கும். தேடி வந்ததால் அதுவும் போச்சு.

கடவுள்: ஏனப்பா என் மேல் இவ்வளவு வெறுப்பு.

மனிதன்: கடந்த வருடம் இராமுழுவதும் உங்க பாதத்திலே காத்திருந்தேன். அதற்கு பலன் எனக்கு கிடைத்தது தோல்வி மட்டும் தான். அதான் உங்க சகவாசமே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தால் தேடி வந்திட்டீங்களே.

கடவுள்: மகனே, நீ நன்றாக இருக்க வேண்டும் என்று எல்லாம் பார்த்து பார்த்து செய்தேன். நீ தவறென்று எதை குறிப்பிடுகிறாயென்று புரியவில்லையே?

மனிதன்: கடந்த ஒரு வருடத்தில் எனக்கு 3 டைம் ஆக்ஸிடெண்ட், பன்னி, மயிலுனு குறுக்கே வந்து அது ஜாலியா போய்டு, ஆனா நான் நாலு மாசம் பெட் ரெஸ்ட், இதுக்கு என்ன சொல்ல போறீங்க?

கடவுள்: மகனே, அதைப் பற்றி கேட்கிறீயா, உன் இடத்துல வேற ஒருத்தன் இருந்தால் முதல்ல பன்றி குறுக்க வந்தப்போவே உலகத்தை விட்டு போய்ருப்பான். பைக் 50கி.மீ வேகமே இப்போலா அதிகமோனு எனக்கு தோணுது, ஆனால் நீ எப்பவும் 90கி.மீ வேகத்துக்கு குறைந்து போக மாட்டீங்கறீயேபா.

மனிதன்: சரி வேகமாக போனது தப்பு ஒத்துக்கறேன். அதுக்கு பெட் ரெஸ்ட் எடுக்கனுமா?

கடவுள்: மகனே, புதுசா வந்த மேனஜர் உங்கிட்ட ரொம்ப மோசமா நடந்து கிட்டான். நீ ரெஸ்ட் எடுக்கலனா வேலையை விட்டு விட்டு வேலை தேடி அலைந்திருப்ப... நீ லீவ்ல இருந்தப்போ அவனனுக்கு வேற லைன்ன ரெடி பண்ணி உன் ஆபிஸ விட்டு அனுப்பிட்டேன். இப்போ சந்தோஷமா போற, இப்ப புரியுதா...

மனிதன்: அதை மெதுவா வேற மாதிரி சொல்லிருக்களாம்ல,

கடவுள்: என்ன பண்ணப்பா, நீ கேட்கிற மாதிரி தான நான் சொல்ல முடியும்.

மனிதன்: அது சரி, நான் கவர்மெண்ட் ஜாப்க்கு எவ்வளவு பிரிப்பர் பண்ணி எக்ஸம் எழுதினேன், அப்புறம் ஏன் பாஸ் பண்ணல.

கடவுள்: உனக்கு அந்த ஜாப் செட் ஆகாது. நான் உனக்கு வேற சூப்பர் ஜாப் ரெடி பண்ணிட்டேன். கொஞ்சம் காத்திரு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.