" நாளை காலைலே வந்துருவாம்மா! வந்ததும், உங்களை வந்து பார்ப்பாம்மா!"
அப்போது அங்கே ஒரு பண்ணையாள் ஓடிவந்து, "அம்மா! நம்ம வீட்டு வாசல்லே, யாரோ காரிலே வந்து இறங்கறாங்கம்மா, வெளியூர் சனங்கபோல தெரியுதும்மா......"
" அப்படியா! பாவாடை! நான் வீட்டுக்கு போறேன், நீ கவனிச்சிக்க!"
இதைப் போலவே கங்காதரனுக்கும் செய்தி சென்று அவரும் வீட்டுக்கு வந்துசேர்ந்தார்.
வீட்டுக்குள் நுழையும்போதே, " அத்தே! மாமா" ன்னு ஓடிவந்து இருவரையும் அணைத்துக்கொண்டாள், அந்தப் பெண்!
" அட, நம்ம கஸ்தூரி! ஏம்மா! அப்பா அம்மா சௌக்கியமா? ஆமாம், பொங்கலுக்கு அவங்களோட இல்லாம, இங்கே எப்படி வந்தே? அவங்களுக்கு தெரியுமா?"
" அவங்கதான், மாமா!, என்னை அனுப்பி உங்க ரெண்டு பேரையும் அழைத்துவரச் சொல்லி, காரிலே என்னை அனுப்பி வெச்சிருக்காங்க......."
" ஏதாவது விசேஷமா? திடுதிப்புனு சொன்னா, எப்படி நாங்க கிளம்பி வரமுடியும், அதுவும் பொங்கலின்போது?"
"அப்பாவுக்கு இது நல்லா தெரிஞ்சிருக்கிறதாலே, உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தை தெரிவித்து உடனே உங்களை அழைத்துவரச் சொல்லியிருக்காரு....."
"அப்படியா! என்ன விஷயம்?"
" பொங்கல் முக்கியமா? நூறுகோடி ரூபாய் முக்கியமா?ன்னு கேட்கச் சொன்னாரு......"
" என்ன புதிர் போடறே? விவரமா சொல்லு!"
" வட இந்தியாவிலிருந்து யாரோ ஒரு கோடீஸ்வரன் வந்திருக்காராம், அவர் தமிழ்நாட்டிலே ஒரு மிகப் பெரிய யூனிவர்சிடி நடத்தப் போறாராம், அதற்கு கட்டிடம் கட்ட தகுந்த நிலம் வேணுமாம், அப்பா அவரிடம் உங்க இருபது ஏக்கர் நிலத்தைப்பற்றி சொன்னவுடனே, அவருக்கு அது ரொம்ப பிடித்துவிட்டதாம், நூறுகோடி ரூபாய் விலையா தரத் தயாரா இருக்காராம், அந்தப் பணத்தை வாங்கி உங்களிடம் கொடுக்கிற வரையிலும், அப்பாவுக்கு வேற வேலையே கிடையாதாம், நீங்க உடனே வந்து அக்ரிமெண்ட்லே கையெழுத்துப் போட்டு அட்வான்ஸ் தொகை ஐம்பது கோடியை வாங்கிக்கணுமாம், அதனாலேதான் உங்களை உடனே அழைத்துவர, காரிலே என்னையே அனுப்பியிருக்காரு, சந்தோஷந்தானே? கிளம்புங்க, உடனே! அத்தை! நீங்களும்தான்!"
"கஸ்தூரி! உங்கப்பாவுக்கு என்னை மிகப் பெரிய பணக்காரனாக்கி, எப்படியாவது இந்த ஊரிலிருந்து கிளப்பி, நகரத்துக்கு அழைத்துக்கணும்னு ரொம்பநாளா ஆசை! என்மேலே