சொல்றது???” கோபத்தை மறைக்காமல் கேட்டாள் பிரீத்தா.
“அப்பா தான்ம்மா எடுத்துக் கொடுத்தார்” குழந்தைகள் இருவரும் கோரஸாக அப்பா பக்கம் விரலை நீட்டினார்கள்!
“போர்ன்விட்டா சாப்பிட்டீங்க சரி, தண்ணில ஊற வச்சு வைக்க கூடாதா...???” என்றபடி விஷ்வாவைப் பார்த்து புன்னகைத்தாள் பிரீத்தா!
விஷ்வா அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்...!
“டாடி, வாங்க அவென்ஜெர்ஸ் விளையாடலாம்!!!! நீங்க தான் ஹல்க்!!!!” என்று சிறியவன் அழைக்க விஷ்வாவும் குழந்தைகளுடன் குழந்தையாக மாறி விளையாட தொடங்கினான்.
பாத்திரங்களை துலக்கலாம் என்ற ஆரம்பித்த பிரீத்தாவின் காதுகளில் அவர்கள் மூன்றுப் பேரின் சிரிப்பும் பேச்சும் கேட்டது...!
“ஹல்க் இஸ் இன் டிரபில். அஷ்மி இஸ் கமிங் டு கெட் யூ டாட்”
“நோ வே...”
பிரீத்தா காய்ந்திருந்த பாத்திரங்களை மீண்டும் ஒரு முறை பார்த்தாள்... அழுக்கு பாத்திரங்கள் இருப்பது கடியாக தான் இருக்கும்... ஆனாலும் அதை இப்போதே செய்தாக வேண்டுமா என்ன????
???
குழந்தைகளின் சிரிப்பு சத்தம் கேட்க, பாத்திரங்களை விட்டு விட்டு, அவர்கள் மூவரும் விளையாடிக் கொண்டிருந்த இடம் சென்று அவர்களின் விளையாட்டில் சேர்ந்துக் கொண்டாள்!!!!
“என்ன சின்சியர், அண்ட் சீரியஸ் பிரீத்தா, வேலையை விட்டுட்டு விளையாட