“என்ன ஆச்சு?” என்று விசாரித்தாள் பிரீத்தா.
“என் தம்பியோட ஜாப் அப்ளிகேஷன் ஒன்னு ஃபில் செய்து ஹெல்ப் செய்ய லாஸ்ட் மன்த்தே கேட்டு இருந்தான். மறந்துட்டேன்... நாளைக்கு லாஸ்ட் டேட்டாம்” என்று சொல்லியப்படி லேப்டாப்பை ஆன் செய்தான் விஷ்வா.
“இதெல்லாம் எவ்வளவு இம்பார்டன்ட்? எப்படி மறந்தீங்க???”
“கல்யாண வேலைல மறந்துட்டேன் டியர்”
“இந்த மாதிரி வேலை வரும் போது ஒரு அலாரம் செய் செய்து வைங்க. அப்போ மறக்க மாட்டீங்க...”
“சூப்பர் ஐடியா டியர்! இதுக்கு தான் உன்னை மாதிரி ஒரு ஒய்ஃப் வேணும்...” என்றவன் அவளுடைய கன்னத்தில் அதன் பிரதிபலிப்பாய் ஒரு முத்தமும் வைத்தான்...!
அதன் பின் வந்த நாட்களில் விஷ்வாவின் துணையுடன் அவளுக்கு எத்தனையோ புது அனுபவங்கள் கிடைத்தன...!
அவள் ரஜினி ஃபேன் என்பதை தெரிந்துக் கொண்டு, புதிதாக வந்த ரஜினி படத்திற்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ டிக்கட்டுடன் வந்து நின்றான்!
“ஹையையோ அதெல்லாம் எனக்கு சரியா வராது விஷ்வா. பசங்களா இருப்பாங்க. நான் வரலை!!!”
“பசங்களா இருந்தா என்ன? நான் தான் இருக்கேனே! சூப்பர் ஸ்டார் படம் முதல் ஷோ பார்க்குறது, அங்கே ஃபேன்ஸ் செலிபரேஷன் எல்லாம் பார்க்குறது ஒரு பெரிய எக்ஸ்பீரியன்ஸ் டியர்.... நீ வா...”