கட்டாயப்படுத்தி அவளை இழுத்துக் கொண்டு சென்றான்!
தியேட்டரில் இருந்த கூட்ட நெரிசல் பார்த்து அவளுக்கு பயமாக இருந்தது. விஷ்வாவின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு சென்றாள். ஆனாலும் அங்கே நடந்த கொண்டாட்டங்களும், பேப்பர் மழையும் பார்க்க அதிசயமாக தான் இருந்தது!
தியேட்டர் விட்டு வெளியே வந்தப் போது, “இப்படி எல்லாம் நான் என்ஜாய் செய்ததே இல்லை விஷ்வா” என்றாள் மனமார!
அதற்கு பின் எத்தனையோ புது அனுபவங்கள்... மழையை ஜன்னல் வழியே மட்டும் வேடிக்கைப் பார்த்தவள், அதில் நனைத்து குழந்தையாக விளையாடியது, ரோட்டில் கிரிக்கெட் விளையாடியது, பிளாட்பாரம் கடையில் வாங்கி சாப்பிட்டது, நடுராத்திரி பைக்கில் பயணம் செய்தது என்று எத்தனை எத்தனையோ அனுபவங்கள்...!!!!
ஆனாலும் எல்லா தம்பதிகள் போலவே அவர்களுக்குள்ளும் சச்சரவுகள் வர தான் செய்தது! இவர்களின் விஷயத்தில் அதற்கு முக்கிய காரணம் இருவரின் வித்தியாசமான குணாதிசயம்!
விஷ்வாவிற்கு எல்லாமே ‘டேக் இட் ஈஸி’!
வாழ்க்கையை அனுபவிப்பது சரி ஆனால் எப்போதுமே ஈசியாக இருந்தால் எப்படி???!!!
அதுவும் பிரீத்தா எதையும் பொறுமையாக, ஆராய்ந்து திட்டமிட்டு செய்பவள்!
அவளுக்கு அவனுடைய ஏனோ தானோ நடைமுறைகள் சரியாகப் படவில்லை!
கடுப்பாக வந்தது, கோபமாகவும் வந்தது!!!!
விஷ்வாவைப் பொறுத்த வரை பிரீத்தா எதையும் சீரியஸாக எடுத்துக் கொண்டு ஓவராக ‘ரியாக்ட்’ செய்கிறாள்!