(Reading time: 14 - 27 minutes)

 

அவன் அவனுடைய வழிகளுக்கு அவளை இழுக்க முயற்சிக்க, அவள் அவனை மாற்ற முயற்சித்தாள்!!!! அதன் விளைவாக இருவருக்குள்ளும் எத்தனையோ ஊடல்கள்!!!!!

 

உன் ஸ்டைல் தான் சரி, என் ஸ்டைல் தான் சரி என்று போட்டா போட்டிகள்!!!!!

 

வீடு வந்து விடவே, அழைப்பு மணியை ஒலிக்க விட்டாள் பிரீத்தா!!!! கதவை திறந்தான் விஷ்வா!

 

“ஹேய் டியர்... என்றவன், உள் பக்கம் பார்த்து,

 

“அம்மா வந்தாச்சு...” என்று குரல் கொடுத்தான்.

 

அடுத்த நொடி உள்ளே இருந்து இரண்டு குழந்தைகளும் ஓடி வந்து பிரீத்தாவை கட்டிக் கொண்டார்கள்!

 

“என்ன பேக்கரி கவரா இருக்கு??? மேடம்க்கு ஒரு வழியா என் பர்த் டே ஞாபகம் வந்திருச்சு போலருக்கே??” கிண்டல் பொங்க கேட்டான் விஷ்வா.

 

“நான் ஒன்னும் மறக்கலாம் இல்லை...” வீராப்புடன் பொய் சொன்னாள் பிரீத்தா.

 

“ஹேய் கதை விடாதே! ஞாபகம் இருந்திருந்தா எந்த கேக், எங்கே போகலாம், லீவு போடலாமா அது இதுன்னு ஒரு வாரமா என் பர்த் டே பத்தியே பேசிட்டு இருந்திருப்பீயே... ஒத்துக்கோ... வயசாச்சு அதான் மறந்துட்ட...” இப்போதும் தன் கேலியை தொடர்ந்தான் விஷ்வா...!

 

“டைமுக்கு ஞாபகம் வந்திருச்சுல்ல அப்புறம் என்ன???” என்று சொல்லி சமாளித்தாள் பிரீத்தா!

 

“அது நீ உன் மொபைல்ல அலாரம் வச்சிருப்ப...” என்று இப்போதும் அவளின் பழக்கத்தை கிண்டல் செய்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.