(Reading time: 14 - 27 minutes)

 

“க்கும்...” என்ற சொல்லி விட்டு உடை மாற்ற சென்றாலும், பிரீதாவிற்கு ஒன்று புரிந்தது!

 

ஒருத்தடவை விஷ்வா அவளுடைய பிறந்த நாளை மறந்து விட்டான்! அதற்காக அவளுக்கு வந்த கோபத்தில், அவள் ஒரு வாரம் அவனுடன் பேசவே இல்லை! அதெப்படி அவளுடைய பிறந்த நாளை அவன் மறக்க முடியும் என்ற கோபம்!!!!!

 

அதே தப்பை அவள் செய்யும் போது அவன் எப்படி ஈசியாக நடந்துக் கொள்கிறான்!!! அவனைப் பார்த்து கற்றுக் கொள் பிரீத்தா என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்!!!!

 

உடை மாற்றி வந்தவள், குழந்தைகளுடன் டிவி பார்த்துக் கொண்டிருந்த கணவனை அன்புடன் பார்த்தாள்...

 

அவளுடைய மொபைல் ஓசை எழுப்பியது!!!!

 

“ஹேய் டியர், அலாரம் தானே அது??? என் பர்த்டே அலாரம் ஸ்னூஸ் செய்ய மறந்துட்டீயா???” விஷ்வா விடாமல் கலாய்க்க, பிரீத்தா அவனை முறைத்து விட்டு மொபைலை எடுத்துப் பார்த்தாள்.

 

“இது உன் பர்த்டே அலாரம் இல்லை. இந்த மாசம் இன்சூரன்ஸ் ரிமைன்டர் அலாரம். உன் அக்கவுன்ட்ல காசு இருக்குள்ள?? நாளைக்கு அமவுண்ட் டெபிட் செய்வாங்க”

 

“ஹையையோ, மறந்தே போயிட்டேனே!!!! சாரி பிரீத்தா என் ஃபிரென்ட் ஊருக்கு போறேன்னு கேட்டான். நான் தவுசன்ட் மட்டும் வச்சுட்டு மீதி எல்லாத்தையும் அவனுக்கு கொடுத்துட்டேன். நெக்ஸ்ட் மன்த் தரேன்னு சொல்லி இருக்கான்”

 

“லூஸா நீ??? எத்தனை தடவை சொல்லி இருக்கேன் இப்படி எதையாவது செஞ்சு லாஸ்ட் மினிட்ல சொல்லாதேன்னு???”

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.