சிறிதாய் சிரித்தாள்.”அதனால என்னம்மா.நம்ம குடும்பத்துல அப்படி ஒரு பொருளாதார தேவை இல்லையே”
“பொருளாதாரம் இல்ல மா.உன்னோட சுயம் உன்னோட ஆசைக்கு போயிருக்கலாம் இல்ல”
“அது சரிமா.எனக்கு என் பிள்ளை வளர்ப்பு தான் முதன்மையா தெரிந்தது.”
“உனக்கு அதனால வருத்தம் இல்லையா அம்மா.நீ ஒரு நாளும் அப்படி சொல்லி நான் கேட்டதில்லை”
“கண்ணா வருத்த பட என்ன இருக்கு.ஒரு முடிவை எடுத்த பிறகு அதில் வரும் கஷ்டநஷ்டங்களை ஏத்துக்கனும்.உங்க அப்பா என் முடிவுக்கு மறுப்பு சொன்னதில்லை.இது என் சுய முடிவு.அதை முழு மனதா ஏத்துகிட்டேன்.இழந்தது நினைத்து கிடைத்ததை கடத்தக்கூடாது.காலம் நம்மை எப்படி செலுத்தினாலும் நாம்மட்டும் மாறக்கூடாது.”
அப்பபப்பா எவ்வளவு பெரிய விஷயம்.
“அம்மா இப்போ உங்களுக்கு இருக்கிற தோழிகள் பற்றி தெரியும் ஆனா உங்க பள்ளி தோழிகள் யாருமே தொடர்புல இல்லையா மா”
“இருக்காங்க கண்ணா.உன் கல்யாணத்திற்கு வருவாங்க பாரு.”
“நான் சந்திச்சதே இல்லையே மா”
“வெளியூர்ல இருக்காங்க டா.அப்பப்போ ஃபோன்ல பேசுவோம்”
“ஏன்மா ஒரு முறை நீஅவங்களை வரச்சொல்லி இருக்கலாம்.இல்ல நீ அவங்களை பார்கக போகலாம்…எதுவுமே பண்ணலை”
“சந்தர்ப்பம் வாய்க்கலை மா.அதுமட்டுமல்ல அவங்களுக்கும் பொறுப்புகள் இருக்கும்.”
“என்னம்மா நீங்க இபப்டி சொல்றீங்க.உங்களுக்கும் சில நேரம் ஒதுக்கனும் மா.எப்பவும் வீடு புருஷன் பிள்ளைன்னு இருந்துட்டீங்க.இனியாவது மாறுங்க மா”
இம்முறை பலமாய் சிரித்தாள்.செல்லமாக கன்னம் தட்டினாள்.
“எனக்குன்னு நேரம் ஒதுக்கலைன்னு யார் சொன்னா.என் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளும் என் கடமைகள் தாண்டி என் விருப்பமான முறையில் என் மனம் திருப்தியா செலவிடறேன்.வீட்டை மறந்து கடமை தவிர்த்து வெளி மனிதர்கள் கூட சுற்றுலா போகிறது இல்லைமா சுயம்.சுயம் என்பது சுடர் .எங்க இருந்தாலும் என்ன பண்ணாலும் எந்த சந்தர்ப்பதிலும் ப்ராகசிக்கனும்.நம் வாழ்க்கையை நாம வாழனும்.மனத்திருப்த்தியோட வாழனும்.என்னோட வாழ்க்கை தத்துவம் ரொம்ப ஸிம்பிள் மா.காலை கண் விழிக்கும் போது புத்துணர்வா எழனும் இரவு படுக்கும் போது நிறைவா படுக்கனும் அவ்வளவு தான்.”